புதிய தொழில்முனைவோராக வாய்ப்பு காத்திருக்கு...! – சுமதி

13-06-2019 01:36 PM

இல்­லத்­த­ர­சி­க­ளாக இருக்­கும் இந்­திய பெண்­கள் 2 பேரில் ஒரு­வர், இளம்­வ­ய­தில் நிதிச் சுதந்­தி­ரத்­து­டன் இருக்க விரும்­பி­ய­தாக, பிரிட்­டா­னியா மேரி கோல்ட் இந்­தி­யன் வுமன் தொழில் முனைவு ஆய்வு அறிக்கை தெரி­விக்­கி­றது.

ஆனால் 69 சத­வீத பெண்­க­ளுக்கு பெரிய தடை­யாக இருப்­பது போது­மான நிதி இல்­லா­மல் இருப்­பது, 39 சத­வீத பெண்­க­ளுக்கு சரி­யான வழி­காட்­டு­தல் இல்­லா­தது மற்­றும் 36 சத­வீத பெண்­க­ளுக்கு தொழில்­மு­னைவை மேற்­கொள்­வ­தற்­கான துணிவு இல்­லா­தது ஆகி­ய­வைக் கார­ணங்­க­ளாக அமைந்­துள்­ளன.

பெரும்­பா­லான இல்­லத்­த­ர­சி­கள் வர்த்­த­கப் பின்­ன­ணி­யில் இருந்து வந்­த­வர்­கள் இல்லை என்­ப­தால், வர்த்­த­கம் தொடர்­பான அம்­சங்­களை அவர்­கள் அறிந்­தி­ருக்­க­வில்லை என்­றும் அறிக்கை தெரி­விக்­கி­றது. வர்த்­த­கத்­தில் ஈடு­பட விரும்­பிய இல்­லத்­த­ர­சி­க­ளில் 28 சத­வீ­தம் பேர் அழகு நிலை­யங்­களை நடத்த விரும்­பி­ய­தா­க­வும் அறிக்கை தெரி­விக்­கி­றது.

இந்த பின்­ன­ணி­யில், நேச்­சு­ரல்ஸ், கடந்த ஆண்­டு­க­ளில் இந்­தியா முழு­வ­தும் 700 சலூன்­களை அமைத்து, 450 நிதிச் சுதந்­தி­ரம் பெற்ற பெண்­க­ளுக்கு தொழில்­மு­னைவு வாய்ப்­பு­களை வழங்­கி­யி­ருக்­கி­றது. நிறு­வ­னர் சி.கே.குமா­ர­வே­லு­வின் மனைவி வீணா குமா­ர­வேல், பிள்­ளை­கள் பள்­ளிக்­குச் செல்­லத்­து­வங்­கி­ய­வு­டன் அவ­ரி­டம் போது­மான நேரம் இருந்த போது என்ன செய்­வது என யோசிக்­கத்­து­வங்­கி­ய­தன் பய­னாக நேச்­சு­ரல்ஸ் சலூ­னுக்­கான எண்­ணம் உண்­டா­னது.

”அலுப்­ப­டை­வது தான் ஊக்­கத்­திற்­கான மிகப்­பெ­ரிய உந்­து­சக்தி. நீங்­கள் ஏதே­னும் ஒன்­றால் அலுப்­ப­டைந்­தி­ருந்­தால், அதை கவ­ன­மாக பார்த்­தால் அதில் வாய்ப்பு மறைந்­தி­ருக்­கும்,” என்­கி­றார் வீணா குமா­ர­வேல்.  

 தன்­னி­டம் பயின்று சென்ற ஒரு பெண்,

ஓராண்டு கழித்து அந்த பெண்­மணி போன் செய்து, மாதம் ரூ.50,000 சம்­பா­திக்க முடிந்­த­தற்கு நன்றி தெரி­வித்­தார். வச­தி­யா­ன­வ­ராக இருந்­தா­லும் தான் செல­வி­டும் தொகைக்கு எப்­போ­தும் கணக்கு அளிக்க வேண்­டி­யி­ருந்­தது என்­றும், தற்­போது சொந்­த­மான சலூன் இருப்­ப­தால், இப்­போது சுய­மாக செலவு செய்து நிதி சுதந்­தி­ரத்­து­டன் இருப்­ப­தா­க­வும் கூறி­யி­ருக்­கி­றார்.

சொந்த பிரான்­சைஸ்

நேச்­சு­ரல்ஸ் சலூ­னின் வர்த்­தக மாதிரி, நூற்­றுக்­க­ணக்­கான பெண்­கள் புதிய தொழில் வாழ்க்கை பெற உதவி வரு­கி­றது. அவர்­கள் நிதிச் சுதந்­தி­ரம் பெறும் கனவை நிறை­வேற்ற உத­வு­கி­றது. நிறு­வ­னம் 700க்கு மேற்­பட்ட பிரான்­சைஸ் மையங்­கள் கோண்­டுள்­ளது. இவற்­றில் 450 மையங்­கள் பெண்­க­ளால் நடத்­தப்­ப­டு­கின்­றன. குறிப்­பிட்ட வரை­ய­ரைக்­குள் செயல்­பட ஏற்­ற­வர்­கள் என்­ப­தால் பெண் பங்­கு­தா­ரர்­களை விரும்­பு­வ­தாக  கூறு­கி­றார்.

“நேச்­சு­ரல்ஸ் மட்­டும் அல்ல, எந்த பிரான்சை வணி­கம் என்­றா­லும், ஒருங்­கி­ணைந்த செயல்­பாடு, நுட்­ப­மான தக­வல்­க­ளில் கவ­னம் செலுத்­து­வது போன்ற அம்­சங்­க­ளால் பெண்­கள் மிக­வும் ஏற்­ற­வர்­க­ளாக இருக்­கின்­றன,” என்­கி­றார் அவர்.

இப்­போது நிறு­வ­னம் மேலும் பெண் பங்­கு­தா­ரர்­களை எதிர்­பார்க்­கி­றது.“2020 ம் ஆண்டு வாக்­கில், 1,000 பெண்­களை தொழில் முனை­வோ­ராக்கி, 3,000 சலூன்­களை திறந்து 50,000 வேலை­வாய்ப்­பு­கள் உரு­வாக்க விரும்­பு­வ­தாக,” வீணா குமா­ர­வேல் தெரி­விக்­கி­றார்.

முழு­மை­யான நேர்மை, உரி­மை­யா­ளர்­கள்/ மேலா­ளர்­க­ளாக இருக்­கும் விருப்­பம், ஒரு குழுவை நடத்­தும் திறன், வாடிக்­கை­யா­ளர் நிர்­வாக திறன், பணத்தை முத­லீடு செய்­யும் திறன் மற்­றும் இறு­தி­யாக (ஆச்சரியம் அளிக்­கும் வகை­யில்) அழகு நிலைய துறை பற்றி எந்த அனு­ப­வ­மும் இல்­லாத பெண்­களை எதிர்­நோக்­கு­வ­தாக வீணா­வின் கண­வர் குமா­ர­வேல் கூறு­கி­றார்.

நான் நேச்­சு­ரல்சை நம்­பி­ய­தை­விட, நேச்­சு­ரல்ஸ் என் திறன்­கள் மீது அதிக நம்­பிக்கை வைத்­தது, என்­கி­றார் செள­மியா. மற்­றொரு பங்­கு­தா­ர­ரான, லோபா, ஒடி­சா­வில் 7 சலூன் வைத்­தி­ருப்­ப­வர், கடந்த 7 ஆண்­டு­க­ளில் நான் நேச்­சு­ரல்ஸ் குடும்­பத்­து­டன் வளர்ந்­தி­ருக்­கி­றேன் என்­கி­றார்.