26 வய­தி­லேயே...!

12-06-2019 04:44 PM

என் வயது, 64; கோவை, மாதர் சங்க கல்வி நிலை­யத்­தில், 1968ல், 10ம் வகுப்பு படித்­தேன். நன்கு படிப்­பேன்; எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்று, விடு­மு­றை­யி­லேயே, எனக்கு திரு­ம­ணம் செய்­த­னர்.

'படிப்பை தொடர முடி­ய­வில்­லையே...' என்ற, மன வேதனை ஏற்­பட்­டது.

என் கண­வர் அரசு பத­வி­யில், உயர் அதி­கா­ரி­யாக இருந்­தார். அடுத்­த­டுத்து, இரண்டு பெண்­கள், கடை­குட்டி பையன். என வாழ்க்கை அவ்­வ­ளவு இனி­மை­யாக சென்­றது.

ஒரு நாள், திடீ­ரென்று மார­டைப்பு வந்து, ஒரு நொடி­யில் என் கண­வரை, இழந்­தேன். 26 வய­தி­லேயே, தனி மர­மா­னேன்.

கண­வ­ரின் நண்­பர்­கள், 'நீ நன்கு படிப்­பாய்... பிளஸ் 2 பிரை­வேட்­டாக படி; கரு­ணை­யின் அடிப்­ப­டை­யில் வேலை கிடைக்­கும்...' என்­ற­னர்.

பிளஸ் 2 தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று, துறை தேர்வு அனைத்­தும், எழுதி, வெற்றி பெற்­றேன். உடனே, வேலை கிடைத்­தது; காலம் ஓடி­யது.

என், இரண்டு மகள்­களை நன்கு படிக்க வைத்து, உயர் பத­வி­யில் இருந்த மாப்­பிள்­ளை­க­ளுக்கு, திரு­ம­ணம் செய்து வைத்­தேன்.

மகன், இன்று, கோவை­யில் பெரிய மருத்­து­வர்; மரு­ம­கள், பேத்தி, பேத்­தி­யின் கண­வ­ரும் மருத்­து­வர்.

'வித­வை­யாகி விட்­டேனே...' என்று முடங்கி இருந்­தால், என் குடும்­பம், இன்று இந்த நிலையை அடைந்­தி­ருக்க முடி­யுமா... பெண்­க­ளுக்கு கல்வி மிக­மிக அவ­சி­யம்!

–- எம்.தன­பாக்­கி­யம், கோவை.Trending Now: