நாட்­டுப்­பற்று அதி­க­ரித்­தது!

12-06-2019 04:41 PM

கோவை மாவட்­டம், மாந­க­ராட்சி ஆண்­கள் மேல்­நி­லைப் பள்­ளி­யில், 8ம் வகுப்பு படித்த போது, தேசிய மாண­வர் படை, என்.சி.சி.,யில் சேர்ந்­தி­ருந்­தேன்.

என்.சி.சி., மாஸ்­டர் இரு­த­ய­ராஜ், தேசிய மாண­வர் படை பற்­றிய பல விப­ரங்­களை தெரி­விப்­பார்.

ரொம்ப நல்ல மனி­தர்; நாட்டு பற்று மிக்­க­வர்; 1998ல், என்.சி.சி., போட்­டி­யில், கோவை அள­வில், எங்­கள் மாந­க­ராட்சி ஆண்­கள் மேல்­நி­லைப் பள்ளி தேர்ச்சி பெற்­றது.

நானும், என் மூன்று நண்­பர்­க­ளும் தேர்­வாகி, உத்­தி­ர­பி­ர­தேச மாநி­லம், மீரட் மாவட்­டம், ஹஸ்­தி­னா­பூர் என்ற இடத்­திற்­குச் சென்று, பயிற்சி பெற தகுதி பெற்­றோம்.

இந்­திய அள­வில், அனைத்து மாண­வர்­க­ளும் வந்­தி­ருந்­த­னர்.

நாட்­டின் ராணுவ நிகழ்­வு­களை கண்­முன் கண்­ட­தால் நாட்­டுப்­பற்று அதி­க­ரித்­தது.

என் வாழ்­நா­ளில் மறக்க முடி­யாத அனு­ப­வத்­தில் ஒன்று; இந்த அனு­ப­வம் ஒவ்­வொரு மாண­வ­ருக்­கும் கிடைக்க வேண்­டும் என்­பதே என் விருப்­பம்!

–- வி.ரவிக் குமார், கோவை.