ஜில்... ஜில்... லஸ்சி!

12-06-2019 04:37 PM

தேவை­யான பொருட்­கள்:

தயிர் - 2 கப்

கம்பு, ராகி, வர­க­ரிசி, தினை, சாமை, குதி­ரை­வாலி போன்ற சிறு தானி­யங்­கள் சம அள­வில் சேர்த்த கலவை - 1 கப்

சின்ன வெங்­கா­யம் - 5

பச்சை மிள­காய் - 2

உப்பு - தேவை­யான அளவு

தண்­ணீர் - தேவை­யான அளவு.

செய்­முறை:

சிறு­தா­னி­யங்­களை அரை மணி­நே­ரம் ஊற வைத்து, நைசாக அரைத்து, மூன்று கப் தண்­ணீர் சேர்த்து கலக்கி, அடுப்­பில் வைத்து, அடி பிடிக்­கா­மல் கிளறி, வேக வைத்து இறக்­க­வும்.

நன்கு ஆறிய பின், தயிர், தேவை­யான உப்பு, பொடி­யாக நறுக்­கிய வெங்­கா­யம், பச்சை மிள­காய் சேர்த்து, நன்கு கலக்கி, சிறிது நேரம் குளிர்­சா­த­னப் பெட்­டி­யில் வைத்து எடுத்­தால், 'ஜில்...ஜில்...' சிறு­தா­னிய லஸ்சி ரெடி!

தாகத்தை தணித்து, பசி­யைப் போக்கி, சக்­தியை பெருக்­கும், சிறந்த பானம். சூட்டை தணித்து, உடலை குளிர்ச்­சிப்­ப­டுத்­தும்.

–- என்.ரங்­க­நா­யகி, கோவை.Trending Now: