மொக்க ஜோக்ஸ்!

12-06-2019 04:34 PM

‘‘டாக்டர், ஆப்ரேஷனுக்குப் பின், பேஷன்டை எப்படி வீட்டுக்கு அனுப்ப போறோம்?’’

‘‘மாலையோட தான்!’’

– நிலாஷினி, காரைக்குடி.

‘‘கம்பராமாயணத்தை எழுதியவர் யார்...?’’

‘‘கம்பர்...’’

‘சிலப்பதிகாரத்தை எழுதியவர் யார்...?’’

‘‘சிலப்பதி!’’

– ஹேமப்பிரியா, சென்னை.


‘‘எங்கே சொல்லு அ... அணில், ஆ... ஆடு, இ.... இல்லை’’

‘‘சார்.... அதைவிட, அ..... அப்பம், ஆ.... ஆப்பம், இ.... இடியாப்பம்ன்னா... நல்லா இருக்குமே சார்!’’

– லிங்கம், நீலகிரி.

‘‘அவருக்கு பணம் கொழுத்துப் போய் கிடக்குன்னு சொல்றீங்களே.... ஏன்?’’

‘‘நகம் வெட்டுறதுக்கு கூட, டாக்டரிடம் போறார்ன்னா பாத்துக்குங்க!’’

– ஏ.ஆர். லட்சுமி, தென்காசி.

‘‘என்னடா, புத்தகம் ‘ஜில்...’லுன்னு இருக்கு?’’

‘‘எங்கே போனாலும் படிப்பு கெடக் கூடாது....ன்னு நீங்க தானே டீச்சர் சொன்னீங்க; அதனால, புத்தகத்தை ப்ரிட்ஜில வைச்சிட்டு, ஊருக்கு போயிருந்தேன் அதான்!’’

– எஸ். பிரேமாவதி, சென்னை.