நத்தையும், நாகமும்!

12-06-2019 04:32 PM

ஒரு அடர்ந்த காட்­டில், நத்­தை­யும், நாக­மும், ஒற்­று­மை­யு­டன், இணை­பி­ரி­யாத நண்­பர்­க­ளாக, வாழ்ந்து வந்­தன.

ஒரு நாள் -

நத்­தை­யும், நாக­மும் இரை தேட, சென்­றன; ஓய்­வுக்­காக, ஒரு மர நிழ­லில் அமர்ந்­தன.

மரத்­தின் மேலி­ருந்து, 'தொப்'பென்ற சத்­தத்­து­டன், ஒரு கல் விழுந்து, பிர­கா­ச­மாக ஜொலித்­தது.

நாகம், அந்த கல்லை தீண்­டிப் பார்த்து, ''நத்தை நண்­பரே... இது, சாதா­ரண கல் அல்ல வைரக்­கல்...'' என்­றது.

''அப்­ப­டியா நண்­பரே...'' என்­றது நத்தை.

நாம், இந்த கல்லை வைத்து என்ன செய்ய போகி­றோம்; துய­ரத்­தில் இருப்­ப­வ­ருக்கு, தந்து விடு­வோ­மென்று நத்­தை­யும், நாக­மும், ஒற்­று­மை­யு­டன் முடிவு செய்­தன.

அந்­நே­ரம், விறகு வெட்டி, விற்­பனை செய்­யும் இரு­வர் வந்­த­னர்.

'இவர்­க­ளுக்கு, இந்த கல்லை தந்து விடு­வோம்' என முடிவு செய்­தன.

''மனி­தர்­களே... எங்­க­ளுக்கு ஒரு வைரக் கல் கிடைத்­தது... நீங்­கள், துய­ரத்­தில் வாடு­வ­தைக் கண்டு, இக்­கல்லை உங்­க­ளுக்கு தரு­கி­றோம். இதை, இரு­வ­ரும் பங்கு போட்டு, நல்­ல­ப­டி­யாக வாழுங்­கள்...'' என, கூறிச் சென்­றன.

வைரத்தை வாங்­கிய மனி­தர்­க­ளுக்கு ஆசை அதி­க­மா­னது.

'இவ­னுக்கு தரா­மல், நாம் மட்­டும் வைத்­துக் கொள்ள வேண்­டும்' என்று, ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் மன­திற்­குள் திட்­டம் தீட்­டி­னர்.

அதில், ஒரு­வன், 'என்­னி­டம் தான் நாகம், இந்த கல்லை தந்­தது. அத­னால், எனக்கு தான் இந்த கல் சொந்­தம்...' என்று, சொல்ல, வாக்­கு­வா­தம் முற்றி, சண்டை ஆகி, காயங்­கள் ஆனது.

நாக­மும், நத்­தை­யும் இதை பார்த்த படியே இருந்­தன.

''மனி­தர்­களே... அந்த கல்லை என்­னி­டம் தாருங்­கள்...'' என்று கூறிய நாகம், அரு­கில் இருந்த ஆற்­றில், அந்த வைரக்­கல்லை துாக்­கிப் போட்­டது.

''மனி­தர்­களே... நீங்­கள், பிழைக்க வேண்­டு­மென்று தான், இந்த கல்லை கொடுத்­தோம். நீங்­களோ, தான் மட்­டுமே அனு­ப­விக்க வேண்­டு­மென்று நினைத்­த­தால், அதை ஆற்­றில் போட்­டேன். நீங்­கள் இரு­வ­ரும் பேராசை பட்­ட­தால், கைக் கெட்­டி­யது வாய்க்கு எட்­ட­வில்லை. இனி, கஷ்­டப்­பட்டே உழை­யுங்­கள்...'' என்று கூறி விட்­டுச் சென்­றன.

குட்­டீஸ்... பாம்­பும், நத்­தை­யும் கூறிய அறி­வு­ரை­யைப் பின்­பற்­றுங்க... சரியா!

–- ஜி.சர­வ­ணக் குமார்