அம்பலப்படுத்தும் ஜக்கம்மா!
11-06-2019 06:35 PM
புதிய தலைமுறையில் ஒளிபரப்பாகும் ‘கிச்சன் கேபினட்’ அரசியல் நையாண்டி நிகழ்ச்சியில் மேலும் ஒரு புதிய பாத்திரமாக ஜக்கம்மாவும் இடம்பெறுகிறது.
ஜக்கம்மா வேடிக்கையான அறிவார்ந்த ஒரு வீதி ஜோதிட பெண்மணி. அரசியலில் கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் செய்தி வடிவில் வெளிப்படுத்தும் அவள், தன் சாதுரிய கருத்துக்களுடன், அரசியல்வாதிகளின் வாழ்க்கையில் கடந்த காலத்தை கடந்து, அவர்களின் எதிர்காலத்தை வெளிப்படுத்துகிறாள். இந்த கதாபாத்திரத்துடன், எளிய நகைச்சுவையுடன் சொல்லும் இந்த நிகழ்ச்சி, ஒரு அபத்தமான உண்மை அல்லது அரசியல்வாதிகளின் முரண்பாட்டை அம்பலப்படுத்தும் ஜக்கம்மாவாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் ஹேமா.