சேதுராமன் சாத்தப்பனின் ‘ஏற்றுமதி என்ன எப்படி எங்கே செய்யலாம்’ 10– 6–19

10-06-2019 03:23 PM

இந்திய பங்குச் சந்தை நிலவரம்

நாம் சென்ற வாரம் எதிர்­பார்த்­த­ப­டியே சந்­தை­கள் இந்த வாரம் குறை­வா­கவே முடி­வ­டைந்­தன.  கடந்த வாரம் நாம் கூறி­யி­ருந்­தோம் சந்­தை­கள் இந்த வாரம் சிறிது கீழேயே இருக்­கும் என்று. கார­ணம் என்­ன­வென்­றால் சமீ­பத்­திய நிகழ்­வு­கள் இரண்­டா­வது  சந்தை சமீ­பத்­தில் மிக அதி­க­மாக ஏறி இருப்­ப­தால் லாப நோக்­கில் சந்­தை­க­ளில் பங்­கு­களை விற்­பது நடந்­தி­ருக்­கி­றது.

வெள்­ளி­யன்று இறு­தி­யாக

வெள்­ளி­யன்று இறு­தி­யாக மும்பை பங்­குச் சந்தை 86 புள்­ளி­கள் கூடி 39615 புள்­ளி­க­ளில் முடி­வ­டைந்­தது. தேசி­ய­பங்­குச்­சந்தை 27 புள்­ளி­கள் கூடி  11870 புள்­ளி­க­ளில் முடி­வ­டைந்­தது. சென்ற வாரத்தை விட இந்த வாரம் சுமார் 100 புள்­ளி­கள் குறைந்து மும்பை பங்­குச் சந்தை முடி­வ­டைந்­தி­ருக்­கி­றது.

மே மாத ஆட்டோ சேல்ஸ்

மறு­ப­டி­யும் மே மாத ஆட்டோ சேல்ஸ் குறை­வா­கவே இருக்­கி­றது. இது மக்­க­ளி­டையே இருக்­கும் பணப்­பு­ழக்­க­மும் குறை­வாக இருப்­பதை காட்­டு­கி­றது. ஆனால் இந்­திய மக்­க­ளில் பெரும்­பான்­மை­யோர் தற்­போது இரு சக்­கர அல்­லது நான்கு சக்­கர வாக­னத்­திற்கு அடி­மை­யா­கி­விட்­ட­னர் எனவே கூற­லாம் ஆகவே இந்த சேல்ஸ் மறு­படி அதி­க­மா­கும் நாள் தொலை­வில் இல்லை. ஆகவே ஆட்டோ கம்­பெ­னி­கள் மறு­படி ஒரு விசு­வ­ரூ­பம் எடுத்து ஒரு பங்­குச்­சந்­தை­யில் நன்கு பரி­ண­மிக்க வாய்ப்­பு­கள் இருக்­கின்­றன. நீண்ட நாட்­கள் தொலை­நோக்­குப் பார்­வை­யோடு ஆட்டோ கம்­பெ­னி­க­ளின் பங்­கு­களை வாங்கி வைத்­தி­ருப்­பது ஒரு நல்ல காரி­ய­மா­கும்.

ரிசர்வ் வங்கி வட்டி விகி­தங்­கள் குறைப்பு

பல­ரும் எதிர்­பார்த்­த­ப­டியே ரிசர்வ் வங்கி கடந்த வார பாலிசி அறி­விப்­பில் 25 புள்­ளி­கள் சத­வீ­தம் வட்டி விகி­தத்தை குறைத்­தது. கடந்த 6 மாத­மாக வட்டி விகி­தங்­கள் ரிசர்வ் வங்­கி­யால் குறைக்­கப்­பட்­டது வரு­வது எல்­லோ­ருக்­கும் தெரிந்­ததே. என்.பி.எப்.சி., நிறு­வ­னங்­கள் பல தள்­ளாட்­டத்­தில் இருப்­ப­தால் அது பற்­றிய அறி­விப்­பு­கள் அதா­வது அவர்­க­ளுக்­கான ஏதா­வது பேக்­கேஜ் அறி­விக்­கப்­ப­டும் என எதிர்­பார்த்­தது இந்த ரிசர்வ் வங்கி பாலிசி அறி­விப்­பில் நடக்­க­வில்லை.

என்.பி.எப்.சி. கம்­பெ­னி­கள்

என்.பி.எப்.சி.,  கம்­பெ­னி­க­ளில் சிறிது ஆட்­டம் கண்­டி­ருப்­பது உண்­மை­தான். குறிப்­பாக டி.எச்.எப்.எல்., தனது 960 கோடி என்­சிடி களின் முதிர்வு தொகையை ஜுன் முதல் வாரம் திருப்­பிக் கொடுக்க வேண்­டி­ய­தாக இருந்­தது, இதை தற்­போது இரண்­டா­வது வரம் தரு­கி­றேன் என்று பொது­மக்­க­ளுக்கு அஷ்­யூ­ரன்ஸ் கொடுத்­துள்­ளது. இது­போல இன்­னும் சில கம்­பெ­னி­க­ளும் தள்­ளா­டு­கின்­றன. ஆத­லால் என்.பி.எப்.சி. கம்­பெ­னி­க­ளில்  முத­லீடு செய்­தி­ருப்­ப­வர்­கள் வெளி­யே­று­வது நல்­லது.

ரிசர்வ் வங்கி வட்டி விகி­தத்தை குறைத்­த­தால்  என்ன நடக்­கும்?

ரிசர்வ் வங்கி வட்டி விகி­தங்­களை குறைத்­த­தால் வங்­கி­க­ளி­டையே கடன்­க­ளுக்­கான வட்டி விகி­தம் குறை­வ­தற்­கான வாய்ப்­பு­கள் அதி­கம். அதே­ச­ம­யம் மக்­க­ளி­டையே பணப்­பு­ழக்­கம் குறை­வாக இருப்­ப­தால் டெபா­சிட்­கான வட்டி விகி­தங்­களை வங்­கி­கள் குறைத்­தால் இருக்­கும் டெபா­சிட்­க­ளும் எங்கு எடுத்­துச் செல்­லப்­பட்டு விடுமோ என்ற பயம் வங்­கி­க­ளி­டையே இருக்­கி­றது. ஆத­லால் கடன் களுக்­கான வட்டி விகி­தங்­கள் குறைக்­கப்­ப­டுமா என்ற ஐயம் இருக்­கி­றது.

அடுத்த வாரம் எப்­படி இருக்­கும்?

மோடி கவர்­மெண்ட் வந்­தி­ருப்­ப­தால் பல பாலிசி முடி­வு­கள் விரை­வில் எடுக்­கப்­ப­ட­லாம், அவை சந்­தை­களை நீண்ட நாட்­கள் போக்­கில் மகிழ்ச்­சி­யாக வைத்­தி­ருக்­க­லாம். ஷார்ட் டெர்ம் ஆக சந்­தை­களை பார்த்­தால் சந்­தை­கள் மேலும், கீழு­மா­கத் தான் இருக்­கும்.

மெட் டிபார்ட்­மெண்ட் இந்த வரு­டம் 96 சத­வீ­தம் தான் மழை இருக்­கும் என கணித்­துள்­ளது. இது ஒரு சிறிய பாத­க­மான விஷ­யம் ஆகும்.

மேலும், அடுத்த வாரம் பண­வீக்க பற்­றிய டேட்டா, பேக்­டர் அவுட்­புட் பற்­றிய டேட்­டாக்­கள் வர­வி­ருக்­கின்­றன. இவை­யும் சந்­தை­யின் போக்கை தீர்­மா­னிக்­கும்.

உங்கள் சந்தேகங்களுக்கு

உங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள், எழுத வேண்டிய ஈமெயில் முகவரி: sethuraman.sathappan@gmail.com.  

ப்ளாக்: sethuramansathappan.blogspot.com.   மொபைல்: 098 204 51259. இந்த தொடரின் பழைய பகுதிகளை படிக்க www.startupfundingsources.comTrending Now: