பார்த்தது படித்தது ரசித்தது – சுதாங்கன் – 09–6–19

06-06-2019 08:40 PM

மீண்­டும் மோடி இந்­தி­யா­வின் பிர­த­ம­ரா­கி­யி­ருக்­கி­றார். மோடி இந்­தி­யா­வின் பிர­த­ம­ரா­கக் கூடாது என்­ப­தில் இந்த தேர்­த­லில் உலக நாடு­கள் கூட அக்­கறை கொண்­டது. தேர்­த­லுக்கு பத்து நாட்­க­ளுக்கு முன்­னால், அமெ­ரிக்­கா­வின் உள­வுத்­துறை சி.ஐ.ஏ. ஒரு கருத்­துக் கணிப்பை வெளி­யிட்­டது. அதில் மோடி படு­மோ­ச­மான தோல்­வியை தழு­வு­வார் என்று வெளி­யிட்­டது.

அமெ­ரிக்­கா­வின் ‘டைம்’ பத்­தி­ரிகை மோடியை  நாட்­டைப் பிடிப்­ப­வர் அதா­வது DIVIDER OF THE NATION  என்று அட்­டைப்­பட கட்­டு­ரையே வெளி­யிட்­டது.

மோடியை இந்­துத்­து­வா­வின் பிர­தி­நி­தி­யா­கவே அயல்­நா­டு­கள் சித்­தி­ரித்­தன. இங்­குள்ள சிறு­பான்மை இனத்து மத­போ­த­கர்­க­ளும் அப்­ப­டிச் சொல்­லியே தனி­மைப்­ப­டுத்த முயன்­றார்­கள்.

தமி­ழ­கம், கேரளா, ஆந்­தி­ரா­வைத் தவிர இவர்­க­ளின் இந்த பிர­சா­ரம் எடு­ப­ட­வில்லை. உ.பி., ஒடிசா, கர்­நா­ட­கம், மேற்கு வங்­கம் மாநி­லங்­க­ளில்  இந்­தப் பிர­சா­ர­மெல்­லாம் எடு­ப­ட­வே­யில்லை. குறிப்­பாக மேற்கு வங்­கத்­தில் சிறு­பான்மை மக்­கள் குறிப்­பாக, இஸ்­லா­மி­யர்­கள் இருந்த பகு­தி­யி­லெல்­லாம் பா.ஜ. கட்சி பெரும் வெற்­றி­யைப் பெற்­றி­ருக்­கி­றது.

 உ.பியில் மோடி­யின் வெற்­றியை இஸ்­லா­மி­யர்­கள் ஊர்­வ­ல­மா­கச் சென்று கொண்­டா­டிய காட்­சி­க­ளைக் கண்­டோம்.  பெரும்­பா­லான இந்­திய மக்­கள் மோடியை இந்­தி­யா­வின் ஒரு நம்­பிக்­கை­யான முக­மா­கவே பார்த்­தார்­கள். பண­ம­திப்­பீ­டி­ழத்­தல், ஜி.எஸ்.டி வரி போன்­ற­வற்றை விட  இந்­தத் தேசத்­தின் பாதுக்­காப்­பிற்கு மோடி தேவை என்­ப­தையே இந்­திய மக்­கள் உணர்த்­தி­யி­ருக்­கி­றார்­கள். அதை­விட எதிர்க்­கட்­சி­க­ளில் இந்­திய மக்­க­ளுக்கு ஒரு நம்­பிக்­கை­யான முகமே தெரி­ய­வில்லை என்­ப­து­தான் உண்மை.

  ராகுல் காந்­தியை அவர்­கள் ஒரு வலு­வான தலை­வ­ரா­கப் பார்க்­க­வில்லை, எதிர்க்­கட்­சி­கள் மகா கூட்­டணி என்­பது உத்­தி­ர­பி­ர­தே­சத்­தோடு நின்று போனது. அகி­லே­ஷூம், மாயா­வ­தி­யும் தங்­கள் இரு கட்சி கூட்­ட­ணியை மகா­கூட்­ட­ணி­யாக சொல்­லிக்­கொண்­டார்­கள்.

 ஒவ்­வொரு மாநி­லத் தலை­வ­ருக்­கும் பிர­தம நாற்­காலி கனவு இருந்­தது. அத­னால் அவர்­க­ளால் காங்­கி­ரஸ் கட்­சி­யின் ராகுல் காந்­தியை தலை­வ­ராக ஏற்­றுக் கொள்ள முடி­ய­வில்லை.

தமி­ழ­கத்­தில் திமுக தலை­வர் ஸ்டாலின்­மட்­டுமே ராகுல் காந்­தி­யின் பெயரை பிர­த­மர் பத­விக்கு முன்­மொ­ழிந்­தார். அதை வழி­மொ­ழிய இந்­தி­யா­வில் எந்­தத்­த­லை­வ­ரும் தயா­ராக இல்லை.

 ராகுல் காந்­தியை ஒரு முதிர்ச்­சி­ய­டைந்த தலை­வ­ராக எதிர்க்­கட்­சி­கள் பார்க்­க­வில்லை  என்­பது தெளி­வா­னது. அவர்­க­ளின் எண்­ணத்தை பிர­தி­ப­லிக்­கும் வித­மாக, அவர் காங்­கி­ர­சின் கோட்­டை­யான அமேதி தொகு­தி­யி­லேயே தோற்­றி­ருக்­கி­றார்.

  காந்­தி­யின் வழி­காட்­டு­த­லோடு, நாடு முழு­வ­தும் சுதந்­திர இயக்­கத்தை  நடத்தி ஜவ­ஹர்­லால் நேருவை கொண்ட இயக்­கம் காங்­கி­ரஸ். அந்­தக் கட்சி இப்­போது தன்னை சுய­ப­ரி­சோ­தனை செய்து கொள்ள வேண்­டிய பரி­தாப நிலை­யில்­தான் இருக்­கி­றது.

 2014ல் காங்­கி­ரஸ் படு­தோல்வி அடைந்­தது. இந்­தியா முழு­வ­தும் அவர்­க­ளுக்கு 44 இடங்­களே கிடைத்­தன. இந்த 2019 தேர்­த­லில் 52 இடங்­களை பெற்­றி­ருக்­கி­ருக்­கி­றது. காங்­கி­ர­சின் வீழ்ச்சி என்­பது 1970களி­லேயே தொடங்­கி­விட்­டது. இந்­திரா காந்தி பிர­த­ம­ரா­ன­தும், மாநி­லங்­க­ளில் பல­மாக இருந்த தலை­வர்­க­ளை­யெல்­லாம் நீக்­கி­னார்.

கட்­சிக் காட்­டுப்­பாட்டை மீறி தன்­னு­டைய வேட்­பா­ளர் வி.வி.கிரியை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிறுத்தி, கட்­சி­யின் அதி­கா­ர­பூர்­வ­மான வேட்­பா­ள­ரான சஞ்­சீவ ரெட்­டியை தோற்­க­டிக்க வைத்­தார்.  அப்­போதே காங்­கி­ரஸ் கட்சி மாநி­லங்­க­ளில் சரி­யத் தொடங்­கி­யது. மாநி­லக் கட்­சி­களை  அகில இந்­திய கட்­சி­யின் கிளை­க­ளாக மட்­டுமே பார்த்­தார் இந்­திரா காந்தி. காங்­கி­ரஸ் இரண்­டாக பிரிந்­தது.

 மாநில காங்­கி­ரஸ் தலை­மை­க­ளில் கோஷ்டி பூசல்­கள் தலை­தூக்­கின.  டில்லி தலை­மைக்கு பல்­லக்கு தூக்­கும் தலை­வர்­கள் மாநி­லத்­தில் பெரும் தலை­வர்­க­ளாக வலம் வந்­தார்­கள். உட்­கட்சி ஜன­நா­ய­கம் என்­பதை காங்­கி­ரஸ் மறந்து வெகு நாளா­கி­றது.

காங்­கி­ரஸ் கட்­சி­யின் பிள­வுக்­குப் பிறகு 1971 பாகிஸ்­தான் போர் நில­வ­ரம் இந்­திரா காந்­தியை மீண்­டும் பிர­த­ம­ராக்­கி­யது.  பெரும்­பான்மை பலம் கிடைத்த அதி­கார ஆண­வத்­தில் இந்­திரா காந்தி எமர்­ஜென்­சியை கொண்டு வந்­தார். அத­னால் 1977ம் ஆண்டு காங்­கி­ரஸ் ஆட்­சியை இழந்­தது. அப்­போது ஆட்சி அமைத்த ஜனதா கட்­சி­யின் தலை­வர்­க­ளில் பதவி ஆசை, கோஷ்டி மோதல்­களே மீண்­டும் இந்­திரா காந்­தியை 1980களில் அரி­ய­ணை­யில் ஏற்­றி­யது. 1984களில் இந்­திரா காந்­தி­யின் படு­கொ­லை­யும், 1991ல் ராஜீவ் காந்­தி­யின் படு­கொ­லை­யும் காங்­கி­ர­சுக்கு செயற்கை சுவா­சம் அளித்­தன.

 நேரு குடும்­பத்­தைச் சாராத நர­சிம்ம ராவ் பிர­த­ம­ரா­னார். அதே சம­யம் அவர்  சோனியா காந்­தி­யின் ஏவல் பிர­த­ம­ராக இல்­லா­மல் தனித்து செயல்­பட்­டார். பெரும்­பான்­மை­யில்­லா­ம­லேயே ஐந்து வரு­டங்­கள் திற­மை­யான ஆட்­சி­யைத் தந்­தார். அவ­ரு­டைய கண்­டு­பி­டிப்­புத்­தான்  பொரு­ளா­தார நிபு­ண­ராக இருந்த மன்­மோ­கன் சிங்.

இந்­தி­யா­வில் இன்று அந்­நிய மூல­த­னம் பெரு­கி­ய­தற்­கும், பன்­னாட்டு நிறு­வ­னங்­கள் இந்­தி­யா­வில் காலூன்­ற­வும் நர­சிம்ம ராவ் அர­சு­தான் கார­ண­மாக இருந்­தது. வழக்­க­மாக காங்­கி­ரஸ் கட்­சி­யின் ஒரு பிர­த­மர் இறந்­து­போ­னால், அவ­ரது உடலை காங்­கி­ரஸ் கட்சி அலு­வ­ல­கத்­தில்­தான் வைப்­பார்­கள். ஆனால் நர­சிம்ம ராவுக்கு அந்த மரி­யாதை கூட மறுக்­கப்­பட்­டது. டில்­லி­யி­லேயே அவர் உடல் அடக்­கம் செய்­யப்­ப­டக்­கூ­டாது என்­ப­தில் சோனியா தலை­மை­யி­லான காங்­கி­ரஸ் உறு­தி­யோடு இருந்­தது. அவ­ரது உடல் ஐத­ரா­பாத்­தில்­தான் அடக்­கம் செய்­யப்­பட்­டது. அப்­போது சோனி­யா­வுக்கு கிடைத்த  ஒரு விசு­வா­சி­தான் பிர­த­மர் மன்­மோ­கன் சிங்.

2004 – 2009 ஆண்­டு­க­ளில்­தான் காங்­கி­ரஸ் ஆட்சி வர­லாறு காணாத ஊழல் புகார்­களை சந்­தித்­தது.  இந்­திய அர­சி­ய­லுக்கு காங்­கி­ரஸ்  ஒரு பொருட்டே இல்லை என்­கிற நிலை­மையை 2014 தேர்­த­லில் காங்­கி­ரஸ் சந்­தித்­தது. இந்த தேர்­தல் அதை மறு­ப­டி­யும் உறு­தி­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

கட்­சி­யில் தலை­வி­ரித்­தா­டும் ஜால்­ராக்­க­ளின் எண்­ணிக்கை பெருக்­க­மும், முது­கெ­லும்­பற்ற கொள்­கை­க­ளும் இன்று காங்­கி­ரஸ் கட்­சியை அத­ல­பா­தா­ளத்­தில் தள்­ளி­யி­ருக்­கி­றது. காங்­கி­ரஸ் கட்­சி­யின் மேல்­மட்­டத்­தில்  இந்த ஜால்­ராக்­க­ளின் கூட்­டம் கடந்த பல ஆண்­டு­க­ளா­கவே கோலோச்சி வரு­கி­றது. நேரு குடும்­பத்­திற்கு துதி பாடியே காங்­கி­ரசை காப்­பாற்ற எப்­போ­தும்  ஒரு பெருங்­கூட்­டம் தலை­மைக்கு நெருக்­க­மா­கவே இருந்து வந்­தது.  இதற்கு சிறந்த உதா­ர­ணம் 1975 எமர்­ஜென்சி காலத்­தில்   தேவ காந்த் பரூவா `இந்­தி­ரா­தான் இந்­தியா; இந்­தி­யா­தான் இந்­திரா ‘ என்று எழுப்­பிய கோஷம். இத­னால் அப்­போது சஞ்­சய் காந்தி ஒரு அதி­கா­ர­மில்­லாத பிர­த­ம­ரா­கவே செயல்­பட்­டார் என­பதை நாடு பார்த்­தது.

1984ம் வரு­டம் இந்­திரா காந்தி படு­கொலை செய்­யப்­பட்­டார். அப்­போது அர­சி­ய­லில் இருந்த ஒதுங்கி இருந்­த­வர் ராஜீவ் காந்தி. அப்­போ­தும் கூட காங்­கி­ரஸ் தலை­வர்­க­ளால் நேரு குடும்­பம் அல்­லாத ஒரு­வரை யோசித்­துப் பார்க்­கவே முடி­ய­வில்லை.

2017ல் ராகுல் காந்­தியை கட்­சி­யின் தலை­வ­ராக்­கி­னார்­கள். 2014ல் அவரை முன்­னி­றுத்­தி­ய­தால் காங்­கி­ரஸ் கட்­சிக்கு எந்­தப் பல­னும் இல்லை என்­பதை காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் உண­ர­வே­யில்லை.  இந்த தேர்­த­லில் நரேந்­திர மோடிக்கு எதி­ரான பிர­த­மர் வேட்­பா­ள­ராக ராகுல்­காந்­தி­யையே காங்­கி­ரஸ் நம்­பி­யது. இது போதா­தென்று 2019ம் ஆண்டு பிரி­யங்கா காந்தி வதே­ராவை கட்­சி­யின் பொதுச் செய­லா­ள­ராக்­கி­னார்­கள். அவர் தன் பாட்டி இந்­திரா காந்­தி­யைப் போல இருந்­த­தால் அவ­ரால் வாக்கு வங்­கி­களை இழுக்க முடி­யும் என்று நம்­பி­னார்­கள்.

2014ம் ஆண்டே நேரு குடும்­பத்து வாரி­சு­க­ளின் மீது நம்­பிக்­கை­யில்லை என்று இந்­திய மக்­கள் தெளி­வாக சொல்­லி­விட்­டார்­கள். ஆனா­லும் சோனியா, ராகுல் காந்தி இரு­வ­ருமே தங்­கள் சுய­லா­பத்­திற்­காக கட்­சியை விட்­டுக்­கொ­டுக்­கத் தயா­ராக இல்லை. கட்சி படு­தோல்­வி­ய­டைந்­துமே அவர்­கள் கட்­சித் தலைமை பொறுப்பை விடு­வ­தாக இல்லை. பிரிட்­டன், ஆஸ்­தி­ரே­லியா போன்ற நாடு­க­ளில் ஒரு கட்­சித் தலை­வர் தேர்­த­லில் தோல்வி அடைந்­தால், அவர்­கள் உடனே அந்­தப் பத­வியை ராஜி­னாமா செய்­து­வி­டு­வார்­கள்.  இப்­போது 2019 தேர்­த­லும் நேரு குடும்­பத்­தின் மீது நம்­பிக்கை இல்லை என்­ப­தையே உறுதி செய்­தி­ருக்­கி­றது. அமே­தி­யில் ராகுல் தோல்­வியே அடைந்­து­விட்­டார்.

அமே­தி­யும் உத்­தி­ர­பி­ர­தே­ச­மும் காங்­கி­ர­சின் ஆதார சுவாச பூமி. இங்­கேயே இரு முறை காங்­கி­ரஸ் கட்சி படு­தோல்வி கண்­டி­ருக்­கி­றது.  இந்த தேர்­த­லுக்கு பிறகு ராகுல்­காந்தி கட்­சி­யின் செயற்­குழு கூட்­டத்­தில் தன் பத­வியை ராஜி­னாமா செய்­வ­தாக அறி­வித்­தார். ஆனால் மேலி­டத்து கூஜாக்­களோ அதை அனு­ம­திக்­க­வில்லை. கார­ணம் காங்­கி­ர­சில் வலு­வான தலைமை முகமே இல்லை என்­ப­து­தான் உண்மை.

 ஒரு கட்­சி­யின் தலை­வ­ருக்­கான தகுதி கூட தனக்­கில்லை என்­பதை ராகுல் காந்தி இந்த கூட்­டத்­தில் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார். மத்­திய பிர­தே­சத்­தில் கமல்­நாத்­தும், ராஜஸ்­தா­னில் அசோக் கெலட்­டும், இங்கே தமிழ்­நாட்­டில் ப.சிதம்­ப­ர­மும் தங்­கள் வாரி­சு­க­ளுக்கு இடம் வாங்­கு­வ­தில் காட்­டிய முனைப்பு கட்­சி­யின் வெற்­றி­யில் காட்­ட­வில்லை என்று சொல்­லி­யி­ருக்­கி­றார்.

அப்­ப­டி­யா­னால் இவர் அந்த சிபா­ரி­சு­களை ஒரு கட்சி தலை­வ­ராக எப்­படி ஏற்­றுக்­கொண்­டார்? தன் கட்­சி­யிலே ஒரு உறு­தி­யான முடிவை எடுக்க முடி­யாத இவ­ரால் எப்­படி இந்­தியா போன்ற ஒரு தேசத்தை கட்டி ஆள முடி­யும் என்­கிற கேள்­வி­யும் இந்­திய மக்­கள் முன் எழா­மல் இல்லை. ஒரு பெரிய தேசிய கட்­சி­யான காங்­கி­ரஸ் தன்னை சுய­ப­ரி­சோ­தனை செய்ய வேண்­டிய ஆபத்­தான, அவ­ச­ர­மான நிலை­யில் இருக்­கி­றது.

Trending Now: