சென்செக்ஸ் 140 புள்ளிகள், நிப்டி 67 புள்ளிகள் உயர்வு

22-05-2019 07:31 PM

மும்பை,

   இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தை குறியீட்டெண்கள் ஏற்றத்துடன் தொடங்கின. மாலை நேர வர்த்தகத்திலும் சென்செக்ஸ் ஏற்றத்துடன் முடிந்தது .

இந்திய பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் துவங்கும் பொழுதே சென்செக்ஸ் ஏற்றத்துடன் தொடங்கியது. மாலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 140.41 புள்ளிகள் உயர்ந்து 39,110.21 புள்ளிகளில் நிலைபெற்றது.

தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிப்டி 28.80 புள்ளிகள் உயர்ந்து 11,737.90 புள்ளிகளில் நிலைபெற்றது.

இன்டஸ்இன்ட் வங்கி நிறுவன பங்குகளின் விலை 4.84 சதவீதம் உயர்ந்தது.

இதைத்தொடர்ந்து சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், கோல் இந்தியா, டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஹீரோ மோட்டோ கார்ப், ஓஎன்ஜிசி, எச்டிஎஃப்சி, வேதாந்தா, எல் அண்ட் டி, கொடக் பாங்க், மாருதி ஆக்சிஸ் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2.92 சதவீதம் உயர்ந்துள்ளன.

மறுபக்கம் யெஸ் வங்கி, ஐடிசி, பவர் கிரிட், டிசிஎஸ் மற்றும் எச்.யூ.எல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2.34 சதவீதம் சரிந்தது.

இந்திய ரூபாயின் மதிப்பு

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை (22-05-2019) வர்த்தகம் துவங்கியதும் அமெரிக்க டாலருக்கு எதிரான நாணய மாற்றின் போது 5 காசுகள் அதிகரித்து ரூ. 69.67  காசுகளாக இருந்தது.

இன்று மாலையில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.69.66 காசுகளாக நிலைபெற்றது.

நேற்று வர்த்தக இறுதியில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.72 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.Trending Now: