எதுக்கெல்லாம் கடன் வாங்கக் கூடாது! – குட்டிக்கண்ணன்

22-05-2019 02:11 PM

வீட்­டுக்­குத் தேவை­யான பொருள்­கள்  வாங்­கு­வ­தில் ஆரம்­பித்து, குழந்­தை­க­ளின் பள்ளி, கல்­லூ­ரிக் கட்­ட­ணத்­தைக் கட்­டு­வது வரை பெரும்­பா­லா­ன­வர்­க­ளின் வாழ்க்கை, கடன் வாங்­கு­வ­தி­லும், வாங்­கிய கட­னைத் திரும்ப செலுத்­து­வ­தி­லுமே கழிந்­து­கொண்­டி­ருக்­கி­றது. கடனே வாங்­கக் கூடாது என்­பது சரி­யான அணு­கு­முறை அல்ல என்­றா­லும், எடுத்­த­தற்­கெல்­லாம் கடன் வாங்­கு­வ­தும் மகா தவறு.  எந்­தெந்­தக் கார­ணங்­க­ளுக்­காக நாம் கடன் வாங்­கு­வ­தைத் தவிர்க்­க­லாம் என்­பதை விவ­ரிக்­கி­றார் பொரு­ளா­தார நிபு­ணர் முத்­து­கி­ருஷ்­ணன்

முத­லீடு

மனை வாங்­கு­வ­தாக இருந்­தா­லும், பங்­குச் சந்­தை­யில் பங்­கு­களை வாங்­கு­வ­தாக இருந்­தா­லும் கடன் வாங்கி முத­லீடு செய்­யவே கூடாது. பொது­வாக ஜன­வரி, பிப்­ர­வரி மற்­றும் மார்ச் மாதங்­க­ளில் பணத் தேவை அதி­க­மாக இருக்­கும். பெரும்­பா­லான வங்­கி­கள் இந்த சம­யத்­தில்­தான் ஆபர்­களை அள்ளி வீசும். தனி­ந­பர் கட­னைத் தேடி வந்து தரு­வார்­கள். கேட்­கா­மலே கிடைக்­கி­றது என்­ப­தற்­கா­கக் கடன் வாங்கி முத­லீடு செய்ய கூடாது. தனி­ந­பர் கடன் பாது­காப்­பற்­றது, சுமார் 14 முதல் 20 சத­வீ­தம் வரை இந்த வகைக் கட­னுக்கு வட்டி விதிப்­பார்­கள். இது மாதி­ரி­யான பிரச்­னை­களை தவிர்க்க வேண்­டும் என்­றால், சேமிக்­கும் பணத்தை வைத்து, நிதி ஆண்­டின் ஆரம்­பத்­தி­லி­ருந்து முத­லீ­டு­களை மேற்­கொள்­வது நல்­லது.

கடன் வாங்கி முத­லீடு செய்­வ­தில் இருக்­கும் மிக முக்­கி­ய­மான பிரச்னை என்­ன­வெ­னில், நாம் செய்­யும் முத­லீ­டு­கள் வரு­மா­னத்­தைக் கொடுக்­கா­மல், நஷ்­டத்தை ஏற்­ப­டுத்­தி­விட்­டால், கட­னுக்­கான வட்­டி­யும், முத­லீட்­டின் மீதான நஷ்­ட­மும் ஒரு­ சேர நம் கழுத்தை இறுக்க ஆரம்­பித்­து­வி­டும்.

நம்­மில் பலர் நிலம் வாங்க வேண்­டும், சொந்­த­மாக வீடு கட்ட வேண்­டும் என்று ஆசைப்­ப­டு­கி­றோம். இன்­றைய சூழ்­நி­லை­யில், நடுத்­தர மக்­க­ளால் கடன் மூல­மா­கத்­தான் சொந்த வீட்­டைக் கட்­டிக்­கொள்ள முடி­கி­றது.  முறை­யான வரு­மா­னம் இருக்­கும்­பட்­சத்­தில், வீடு கட்­டு­வ­தற்­காக கடன் பெறு­வது சரி. ஆனால், நிலத்­தில் முத­லீடு செய்­வ­தற்­கா­கக் கடன் பெறு­வதை நிச்­ச­யம் தவிர்க்க வேண்­டும். ஏனெ­னில், அவ­ச­ரத் தேவைக்­கா­கப் பணம் வேண்­டும் என்­றால், நிலத்தை உடனே விற்று பண­மாக்க முடி­யாது.

சுற்­றுலா

வரு­டத்­துக்கு ஒரு­மு­றை­யா­வது, சுற்­றுலா  போக வேண்­டும் என்­பது பல­ரு­டைய ஆசை­யாக இருக்­கும். ஆனால், அதற்­காக சேமிக்­கி­றோமா என்­றால், இல்லை என்­ப­து­தான் பெரும்­பா­லா­ன­வர்களின் பதில். இன்­றைய நிலை­யில் வங்­கி­கள் சுற்­றுலா செல்­வ­தற்­கா­க­வும் கடன்­க­ளைக் கொடுக்க ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. அப்­ப­டியே இல்­லை­யென்­றா­லும் இருக்­கவே இருக்­கி­றது கிரெ­டிட் கார்டு என்­ப­து­தான் பல­ரின் பொது­வான எண்­ணம். கடன் வாங்­கிப் பய­ணிப்­ப­தால் சுகத்­துக்கு மாறாக, பணச் சுமை­தான் அதி­க­ரிக்­கும்.

பய­ணம் என்­பது திடீர் தேவை­க­ளுக்­குள் வராது என்­ப­தா­லும், திட்­ட­மி­ட­லுக்­குப் போது­மான கால அவ­கா­சம் இருக்­கும் என்­ப­தா­லும், சுற்­றுலா பய­ணத்­தைத் தொடங்­கு­வ­தற்கு ஒரு சில மாதங்­க­ளுக்கு முன்­பாக பட்­ஜெட் போடு­வது அவ­சி­யம். அதற்­கான தொகை கையில் இருக்­கும்­பட்­சத்­தில் கவலை இல்லை. இல்­லாத பட்­சத்­தில், அந்த தொகை­யைச் சேமிக்­கும் வழி­மு­றை­களை வகுத்­துக் கொள்­ளுங்­கள். குறிப்­பிட்ட கால அவ­கா­சத்­துக்­குள் தொகை­யைச் சேமித்­துக் கொண்டு சுற்­று­லா­வுக்­குக் கிளம்­புங்­கள்.

திரு­ம­ணம்

நம் கலா­சார முறைப்­படி, திரு­ம­ணம் என்­பது மிகப்­பெ­ரிய செலவு வைக்­கக்­கூ­டிய ஒரு விஷ­யம். அதை சமா­ளிக்க முடி­யா­மல்­தான் பெரும்­பா­லான குடும்­பங்­கள் கடன் தொல்­லை­யில் சிக்­கிக் கொள்­கின்­றன. கல்­யா­ணத்­துக்­காக கடன் வாங்­கி­விட்டு, அதை காலம் முழுக்க கட்­டிக் கொண்­டி­ருப்­ப­வர்­க­ளை­யும் அன்­றா­டம் பார்க்­கி­றோம்.

திரு­ம­ணத்­தைக் கார­ணம் காட்டி கடன் சுமையை அதி­க­ரித்­துக்­கொள்­வது,  திரு­ம­ணத்­துக்­குப் பிற­கான வாழ்க்கை முறை­யில் மிகப்­பெ­ரிய குழப்­பத்தை கண­வன் மனை­விக்­குள் ஏற்­ப­டுத்­தும். எனவே, கடன்­களை அதி­கப் படுத்­து­வ­தை­விட, திரு­ம­ணச் செல­வு­க­ளைச் சிக்­க­னப்­ப­டுத்­திக்­கொள்­வது புத்­தி­சா­லித்­த­னம்.

ஆடம்­பர வாழ்க்கை

நம் அரு­கில் இருப்­ப­வர்­க­ளின் வாழ்க்கை முறை­யைப் பார்த்­துப் பார்த்தே நாம் வாழ்ந்து பழ­கி­விட்­டோம். பக்­கத்து வீட்­டுக்­கா­ரர் ஏ.சி வாங்­கி­னால், நாமும் வாங்க வேண்­டும் என்று நினைக்­கி­றோம். அவர் காஸ்ட்­லி­யான ஸ்மார்ட்­போன் வாங்­கி­னால், நாமும் அதிக விலை­யில் ஸ்மார்ட்­போன் வாங்கி, வாழ்க்கை முறையை ஆடம்­ப­ரப்­ப­டுத்­திக்­கொள்­கி­றோம். விலை அதி­கம் கொண்ட வீட்டு உப­யோ­கப் பொருள்­கள், ஐபோன் என அனைத்­தை­யும் காசு கொடுத்து வாங்­கி­னால் பர­வா­யில்லை. இ.எம்.ஐ மூலம் வாங்­கு­வ­தில்­தான் பிரச்னை அதி­கம் இருக்­கி­றது.

முத­லில் அதிக கடன் வாங்­கி­விட்டு, சரி­யா­கக் கட்­டா­மல் விடும்­போது உங்­க­ளின் கிரெ­டிட் ஸ்கோர் பாதிக்­கப்­ப­டும். வீட்­டுத் தேவை­க­ளுக்­கான பொருள்­களை வாங்­கு­வது செலவு கணக்­கில்­தான் சேரும். செலவு செய்­வ­தற்­கா­கச் சம்­பாத்­தி­யத்­தைத்­தான் அதி­கப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டுமே தவிர, கடன் சுமையை பெருக்­கிக் கொள்­ளக்­கூ­டாது.

ஆக, கடன் வாங்­கு­வ­தற்கு முன்­பாக, இந்த கடனை வாங்­கு­வது சரியா என ஒரு முறைக்கு பல­முறை யோசித்­துச் செயல்­ப­டு­வது நல்­லது.

Trending Now: