கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக கூட்டணி வெற்றி பெறும் - எல்.கே.சுதீஷ் பேட்டி

22-05-2019 12:53 PM

சென்னை,

கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

கூட்டணிக் கட்சியினருக்கு பாஜக தலைவர் அமித் ஷா டில்லியில் நேற்று மாலை விருந்து அளித்தார். அதில் கலந்து கொண்ட தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் இன்று சென்னை திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எல்.கே. சுதீஷ் கூறியதாவது:

கடந்த முறை தேர்தலின் போது அதிமுக தோல்வி அடையும் என வெளியான கருத்து கணிப்புகள் பொய்யானது போலவே, இந்த முறையும் கருத்து கணிப்புகள் பொய்யாகி, அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.

தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் மத்திய அமைச்சரவையில் சேர்வது குறித்து கட்சி தலைமை முடிவு எடுக்கும்.

இவ்வாறு, தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் பேட்டியில் கூறினார்.Trending Now: