ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 08–5–19

07-05-2019 07:11 PM

இளை­ய­ரா­ஜா­வி­டம் பார­தி­ராஜா போட்ட பந்­த­யம்!

1977-ம் ஆண்­டின் இளைய ராஜா­வைப் பற்றி சொல்­லும் போது பார­தி­ரா­ஜாவை பற்றி சொல்­லா­மல் இருக்க முடி­யாது. இளைய ராஜா­வும் பார­தி­ரா­ஜா­வும் திரைத்­து­றைக்கு வரு­வ­தற்கு முன்­பி­ருந்தே நல்ல நண்­பர்­கள். பார­தி­ரா­ஜா­வின் இயற்­பெ­யர் சின்­ன­சாமி. பிறந்த ஊர் தேனி மாவட்­ட­தில் உள்ள அல்லி நக­ரம். இளை­ய­ரா­ஜா­வின் பண்­ணைப்­பு­ரத்­திற்கு மலே­ரியா தடுப்பு அதி­கா­ரி­யாக வந்­த­போது நட்பு ஏற்­பட்­டது. பார­தி­ரா­ஜா­விற்கு சினிமா கனவு உண்டு. இயக்­கு­னர் ஆக­வேண்­டும் என்­றல்ல. நடி­கர் ஆக­வேண்­டும் என்­று­தான் ஆசை. சிவா­ஜி­க­ணே­சன் நடிப்பை அணு அணு­வாக ரசித்த பார­தி­ராஜா அவ­ரைப்­போ­லவே பெரிய நடி­கர் ஆக­வேண்­டும் என்று விரும்­பி­னார்.

இதன் கார­ண­மா­கவே தன் வேலையை விட்டு சென்­னைக்கு வந்­தார். சரி­யான வாய்ப்பு கிடைக்­கா­த­தால் பெட்­ரோல் பங்க் ஒன்­றில் வேலைக்­குச் சேர்ந்­தார். பின் பய­னி­யர் மெட்­ராஸ் என்ற மோட்­டார் கம்­பெ­னி­யில் வேலைக்­குச் சேர்ந்­தார். அப்­போது அவ­ருக்கு சம்­ப­ளம் 120 ரூபாய். இளை­ய­ராஜா, கங்­கை­அ­ம­ரன், பாஸ்­கர் ஆகி­யோர் சென்னை வந்­த­போது பார­தி­ரா­ஜா­வு­டன் ஒரே அறை­யில்­தான் இருந்­த­னர்.

புட்­டண்ணா கன­கல் இயக்­கத்­தில் வெளி­வந்த ‘சர­பஞ்­சரா’ என்ற கன்­னட படத்தை ராஜ­கு­மாரி திரை­ய­ரங்­கத்­தில் (இப்­போது ஷாப்­பிங் சென்­டர்) பார்த்த பார­தி­ராஜா பிர­மித்­துப்­போ­னார். நடி­க­னாக வேண்­டும் என்ற ஆசை­யில் இருந்த பார­தி­ரா­ஜா­விற்கு இயக்­கு­னர் ஆக வேண்­டும் என்ற ஆசைக்கு வித்­தூன்­றிய படம். புட்­டண்­ணா­வி­டம் தான் உதவி இயக்­கு­ன­ரா­கச் சேர­வேண்­டும் என்று உறு­தி­யோடு இருந்­தார். இந்த நிகழ்ச்சி நடந்த நேரத்­தில் இளை­ய­ராஜா ஜி.கே.வி.யிடம் பணி­யாற்­றிக்­கொண்­டி­ருக்­கி­றார். ஜி.கே.வி.க்கு புட்­டண்ணா நல்ல பழக்­கம் என்­ப­தால் ஜி.கே.வி.யிடம் இது பற்றி இளை­ய­ராஜா கூறி­யி­ருக்­கி­றார். யார் அந்த பார­தி­ராஜா என்று அவர் கேட்க தன் சித்­தப்பா மகன், அண்­ணன் முறை­யாக வேண்­டும் என்று சொல்­லி­யி­ருக்­கி­றார். இளை­ய­ராஜா, மற்­றும் ஜி.கே.வி. ஆகி­யோ­ரின் மூலம் புட்­டண்­ணா­வி­டம் பார­தி­ராஜா உதவி இயக்­கு­ன­ராக சேர்ந்­தார்.

எப்­போ­தும் போல கடற்­க­ரை­யோ­ர­மாக நடந்து செல்­லும் பார­தி­ரா­ஜா­வும், இளை­ய­ரா­ஜா­வும் ஒரு நாள் சென்­ற­போது, பார­தி­ராஜா ஒரு பந்­த­யம் போட்­டி­ருக்­கி­றார். யாரு­டைய பெயர் முத­லில் திரை­யில் வரும் என்று பார்க்­க­லாம் என்று. புட்­டண்ணா இயக்­கிய ‘இரு­ளும் ஒளி­யும்’ என்ற படத்­தில் உதவி இயக்­கு­ன­ராக பணி­யாற்­றிய பார­தி­ரா­ஜா­வின் பெயர் திரை­யில் உதவி இயக்­கு­னர் என்று பெயர் போடப்­பட்­டது. இசை­யைக் கற்­றுக்­கொள்­ளும் ஆர்­வத்­தில் மட்­டுமே இருந்த இளை­ய­ராஜா இது­பற்றி எது­வும் கவ­லை­கொள்­ள­வில்லை. ஆனால் பார­தி­ராஜா இயக்­கு­னர் ஆவ­தற்கு முன்பே இளை­ய­ராஜா இசை­ய­மைப்­பா­ளர் ஆகி­விட்­டார் என்­பது வேறு விஷ­யம்.

ஒரு சில ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு

கே.ஆர்.ஜி. ‘சொந்த வீடு’ என்ற படத்தை தயா­ரிக்க முன்­வந்­தார். இந்த படத்­தின் இயக்­கு­னர் பொறுப்பை பார­தி­ரா­ஜா­விற்கு வழங்­கி­னார். கதை ஆர். செல்­வ­ராஜ், இசை வி. குமார் என்­றும் முடி­வா­னது. ஆனால் ஏனோ ஒரு சில கார­ணங்­க­ளால் தடை­பட்­டது. பார­தி­ரா­ஜா­வின் முதல் படத்­திற்கு இசை­ய­மைப்­பா­ள­ராக இளை­ய­ரா­ஜா­தான் அமை­ய­வேண்­டும் என்ற காலத்­தின் கட்­டா­யம் போலும். இளை­ய­ரா­ஜா­வின் முதல் பிர­வே­சத்தை சாத்­தி­ய­மாக்க அவ­ருக்கு கிடைத்த பஞ்சு அரு­ணா­ச­லம் போல பார­தி­ரா­ஜா­விற்கு எஸ்.ஏ. ராஜ்­கண்ணு கிடைத்­தார். சப்­பா­ணி­யும், மயி­லும், பரட்­டை­யும் தங்­க­ளது கிரா­மப்­ப­ரி­வா­ரங்­க­ளு­டன் பார­தி­ராஜா வைத்த கோணங்­க­ளில் வலம் வரத்­தொ­டங்­கி­னார்­கள். ‘16 வய­தி­னிலே’ உரு­வா­கிக் கொண் டி­ருந்­தது.Trending Now: