சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 389– எஸ்.கணேஷ்

23-04-2019 07:32 PM

நடி­கர்­கள் : விஷால், ஆர்யா, ஜி.எம். குமார், ஜனனி அய்­யர், மதுஷாலினி, அம்­பிகா, அனந்த் வைத்­தி­ய­நா­தன் மற்­றும் பலர்.

இசை : யுவன் சங்­கர் ராஜா, ஒளிப்­ப­திவு : ஆர்­தர் ஏ. வில்­சன், எடிட்­டிங் :  சுரேஷ் அர்ஸ், தயா­ரிப்பு : ஏஜி­எஸ் என்­டர்­டெ­யின்­மென்ட், வச­னம் : எஸ்.ராம­கி­ருஷ்­ணன், திரைக்­கதை, இயக்­கம் : பாலா.

வால்­டர் வணங்­கா­முடி (விஷால்) மற்­றும் கும்­பு­ட­றேன் சாமி (ஆர்யா) இரு­வ­ரும் ஸ்ரீகாந்­தின் (அனந்த் வைத்­தி­ய­நா­தன்) இரு மனை­வி­க­ளின் பிள்­ளை­கள். திருட்­டையே தொழி­லாக கொண்ட இரு­வ­ரும் எப்­போ­தும் சண்­டை­யிட்­டுக் கொள்­கி­றார்­கள். வால்­ட­ரின் அம்­மா­வான மாயம்மா (அம்­பிகா) தம் குடும்­பத்­தொ­ழி­லான திருட்டை செய்­யும்­படி மகனை வற்­பு­றுத்­து­கி­றாள். கலை­யார்­வம் கொண்ட வால்­ட­ருக்கோ குற்­றங்­க­ளி­லி­ருந்து ஒதுங்கி நடி­க­னாக வேண்­டும் என்று ஆசை. ஏரியா மக்­க­ளின் நன்­ம­திப்பை பெற்­றி­ருக்­கும் ஜமீன்­தாரை (ஜி.எம்.குமார்) அனை­வ­ரும் ’ஹைனஸ்’ என அன்­பாக அழைக்­கி­றார்­கள். தனி­யா­ளாக வாழும் ஜமீன்­தார் வால்­டர், கும்­பு­ட­றேன் சாமி இரு­வ­ரை­யும் தனது குடும்­ப­மா­கவே நடத்­து­கி­றார். வால்­ட­ரின் கலை­யார்­வத்­துக்கு ஊக்­க­ம­ளிக்­கி­றார்.

கும்­பு­ட­றேன் சாமி­யி­டம் சவா­லில் ஜெயிப்­ப­தற்­காக போலீஸ் கான்ஸ்­ட­பிள் பேபி (ஜனனி அய்­யர்) வீட்­டுக்கு திரு­டச் செல்­லும் வால்­டர் தனது இள­கிய மன­தால் மாட்­டிக்­கொள்­கி­றான். பேபியை விரும்­பத் தொடங்­கும் வால்­டர் பேபி­யி­ட­மி­ருந்து கும்­பு­ட­றேன் சாமி திரு­டிய வாக்­கி­ -– டாக்­கியை மீட்­டுக்­கொ­டுத்து பேபி­யின் வேலையை காப்­பாற்­று­கி­றான். பேபி­யும் வால்­டரை விரும்­பு­கி­றாள். கல்­லூ­ரி­யில் படிக்­கும் தேன்­மொழி (மது ஷாலினி) தன்னை விடா­மல் பின்­தொ­ட­ரும் கும்­பு­ட­றேன் சாமியை முத­லில் வெறுத்­தா­லும் பின்­னர் விரும்­பத் தொடங்­கு­கி­றாள்.

ஜமீன்­தாரை அவ­மா­னப்­ப­டுத்­தும் இன்ஸ்­பெக்­டரை இரு­வ­ரு­மாக சேர்ந்து அலைக்­க­ழித்து பழி­வாங்­கு­கி­றார்­கள். போலீஸ் ஜீப்பை வால்­டர் கடத்­திச்­சென்று காட்­டில் மறைத்து வைக்க அதற்­காக கும்­பு­ட­றேன் சாமியை போலீஸ் ஸ்டேஷ­னுக்கு கொண்டு சென்று விசா­ரிக்­கி­றார்­கள். பிளேடை முழுங்­கி­விட்­ட­தாக போலீசை ஏமாற்றி தனது காத­லி­யான தேன்­மொ­ழியை சந்­திக்­கும் கும்­பு­ட­றேன் சாமி, பின்­னர் விடு­த­லை­யா­கி­றான்.

கல்வி விழிப்­பு­ணர்­வுக்­காக பள்ளி ஒன்­றுக்கு வருகை தரும் ‘அக­ரம் பவுண்­டே­ஷன்’ நடி­கர் சூர்­யா­வின் முன்­னி­லை­யில் தன் கலை­யார்­வத்தை வெளிக்­காட்ட ஜமீன்­தார் மூல­மாக வால்­ட­ருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்­கி­றது. நவ­ர­சத்­தை­யும் தனது முக­பா­வ­னை­கள் மூலம் வெளிப்­ப­டுத்­தும் வால்­ட­ரின் நடிப்­புத் திற­மை­யைக் கண்டு அனை­வ­ரும் பாராட்­டு­கி­றார்­கள். பின்­னர் ஜமீன்­தா­ரி­டம் பேசும் கும்­பு­ட­றேன் சாமி வால்­ட­ரின் திற­மையை புகழ்­வ­தோடு வால்­ட­ரின் மேல் உள்ள பாசத்­தை­யும் ஒத்­துக்­கொள்­கி­றான். ஜமீன்­தா­ரின்  சொத்­துக்­களை ஏமாற்ற நினைக்­கும் கும்­பலை மாயம்மா தலை­மை­யில் மக்­கள் விரட்­டி­ய­டிக்­கி­றார்­கள்.

சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டும் கடத்­தல்­கா­ரனை (ஆர்.கே.) அம்­ப­லப்­ப­டுத்­து­கி­றார் ஜமீன்­தார். இத­னால் தனது பண்­ணையை இழப்­ப­வன் போலீஸ் காவ­லில் வைக்­கப்­ப­டு­கி­றான். கும்­பு­ட­றேன் சாமி தேன்­மொ­ழியை ஜமீன்­தா­ரி­டம் அறி­மு­கப்­ப­டுத்­து­கி­றான். ஜமீன்­தார் தனது நிலத்­திற்­காக சண்­டை­யி­டும் எதி­ரி­யின் மக­ளான தேன்­மொ­ழியை பிரிந்து விடு­மாறு கும்­பு­ட­றேன் சாமி­யி­டம் சொல்­கி­றார். இதனை ஏற்க மறுப்­ப­வன் குடும்­பம் இல்­லா­த­தால் அன்­பின் அருமை புரி­ய­வில்லை எனக்­கூறி ஜமீன்­தாரை கடு­மை­யாக திட்டி வெளி­யே­று­கி­றான். கும்பு டறேன் சாமிக்கு ஆத­ர­வாக பேசு­வ­தால் வால்­ட­ரை­யும் வெளி­யேற்­று­கி­றார் ஜமீன்­தார். மது­போ­தை­யில் இருக்­கும் ஜமீன்­தாரை மாலை­யில் சந்­திக்­கும் இரு­வ­ரும் சமா­தா­னப்­ப­டுத்­து­கி­றார்­கள். அவர்­கள் மேல் உள்ள பாசத்­தால் நிலத்தை விட்­டுக் கொடுத்து திரு­ம­ணத்தை பேசி முடிக்­கி­றார்.

சிறிது நாட்­கள் கழித்து வெளி­யில் வரும் கடத்­தல்­கா­ரன் ஜமீன்­தாரை கடத்தி துன்­பு­றுத்தி தூக்­கில் தொங்­க­விட்டு கொல்­கி­றான். நடந்த கொடு­மையை அறிந்து அதிர்ச்­சி­யா­கும் சகோ­த­ரர்­கள் இரு­வ­ரும் அவனை பழி­வாங்­கத் துடிக்­கி­றார்­கள். கும்­பு­ட­றேன் சாமி தனது முயற்­சி­யில் தோற்று காயத்­தோடு திரும்­பி­னா­லும், வால்­டர் எதி­ரியை வீழ்த்­து­கி­றான். ஜமீன்­தா­ரின் இறுதி யாத்­திரை தொடங்­கு­கி­றது. ஜமீன்­தா­ரின் உட­லுக்கு கீழே கட்­டி­வைக்­கப்பட்­டி­ருக்­கும் எதிரி சிதை எரி­யும் போது உயி­ரோடு எரிந்து சாம்­ப­லா­கி­றான். வால்­ட­ரும், கும்­பு­ட­றேன் சாமி­யும் வெறி­யோடு நட­ன­மா­டு­கி­றார்­கள்.