இலங்கையில் 3 சர்ச்சுகள், 3 சொகுசு ஹோட்டல்களில் குண்டுகள் வெடிப்பு: 207 பேர் பலி, 450 பேர் காயம்

21-04-2019 10:07 AM

கொழும்பு

இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள், குடியிருப்பு பகுதிகள் என 8 இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. குண்டுவெடிப்பில் சிக்கி இதுவரை 207 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இன்று பிற்பகலில் தெகிவலை மிருக கண்காட்சி சாலை அருகில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் 7வது குண்டு வெடித்தது.

இலங்கை தலைநகர் கொழும்பு அருகே தெமடகொட பகுதியில் மதியம் 2:50 அளவில் 8வது குண்டு வெடித்தது.

ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ மக்கள் தேவாலயங்களில் பிரார்த்தனைக்காக இன்று காலை கூடினார்கள். 

கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம், நீர்கொழும்புவில் உள்ள புனித செபாஸ்டியன் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பில் உள்ள மற்றொரு தேவாலயம் என 3 தேவாலயங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தன. 

இன்று காலை 8.45 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பில் உள்ள தேவாலயத்தில் குண்டு வெடிப்பில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். 50 க்கு மேற்பட்டவர்கள் இங்கு உயிரிழந்தனர்

இதைத்தவிர ஷாங்கிரிலா, சின்னாமோன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி என மூன்று நட்சத்திர ஓட்டல்களிலும் கூட வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.

இந்த 6 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் இதுவரை 156 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களில் 50 பேர் வெளிநாட்டவர், குண்டு வெடிப்புகளில் ,400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.  காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.Trending Now: