ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 17–4–19

16-04-2019 04:50 PM

இளை­ய­ரா­ஜாவை உசுப்­பி­விட்ட அலட்­சிய பேச்சு!

(சென்ற வாரத் தொடர்ச்சி)

ஜி.கே. வெங்­க­டே­ஷின் குழு­வில் கிடைத்த அனு­ப­வத்­தோடு, கே.வி.மகா­தே­வன், எம்.எஸ்.வி., வி. குமார், சலீல் சவுத்ரி மற்­றும் மலை­யா­ளத்­தில் தட்­சி­ணா­மூர்த்தி ஆகி­யோ­ரி­டம் பணி­யாற்­றிய அனு­ப­வ­மும் இளை­ய­ரா­ஜா­விற்­குத் துணை­பு­ரிந்­தது. தான் திரை­யு­ல­கிற்கு வந்த காலத்­தில் கொடி­கட்­டிப் பறந்து கொண்­டி­ருந்த எம்.எஸ்.வி.யின் நாதத்­தின் தன்­மை­க­ளை­யும், அத­னின்று மாறுa­பட்டு ஒலிக்­க­வேண்­டிய உத்­தி­க­ளை­யும் நன்­றாக உணர்ந்­து­கொண்டு, சுய­மான கற்­பனை பலத்­து­டன் நுழைந்­தார்.

ஆரம்­பத்­தில் இளை­ய­ராஜா ஒரு பத்­தி­ரி­கைக்கு அளித்த பேட்­டி­யில் சொன்­ன­து…‘‘­­ஒரு பாட்டை எவ்­வ­ளவு இனி­மையா கொண்டு வர­ணும்­க­ற­து­ல­தான் என் கவ­னம் இருந்­தது. சக்­சஸ் ஆகுமா பெயி­லி­யர் ஆகு­மாங்­கற பய­மெல்­லாம் எனக்­கில்லை.” வெற்றி, தோல்­வி­யைக் குறித்து கவலை இல்­லாத ஒரு தனிப்­ப­டைப்­பா­ளி­யின் உள்­ளத்­தில் அலை அலை­யாக இன்ப ரசம் எழுப்­பிய இசை வடி­வங்­கள், எந்­த­வித குறுக்­கீ­டும் இல்­லா­மல் பொது அரங்­கத்­திற்கு வரும் போது கேட்­போ­ரின் காது­க­ளுக்கு ஜீவ­னுள்ள கீதங்­க­ளா­கப் பர­வ­சப்­ப­டுத்­தத்­தானே செய்­யும்?

தன் முதல் பட­மான ‘அன்­னக்­கி­ளி’­­யில், “அன்­னக்­கி­ளியே உன்­னத்­தே­டுதே” என்று ஜானகி உரு­கி­ய­போது பாட்­டின் ஒவ்­வொரு வரி­யி­லும் அதை கன­ப­ரி­மா­ணத்­தோடு தொடர்ந்த இணைப்பு இசை­யி­லும் ஒரு ஈர்ப்­பும் இனி­மை­யும் பெருக்­கெ­டுத்­தன. குறிப்­பாக… ஒன்று, இரண்டு, மூன்­றா­வது சர­ணங்­க­ளில் முறையே “உறங்­காத” என்­றும், “மழை­பெய்ஞ்சா” என்­றும், “புள்­ளி­போட்ட” என்­றும் ஜானகி இழுக்­கும் சுக­மும், அதற்கு முத்­தாய்ப்பு வைக்­கும்­போது தபேலா தத்தி வரும் நேர்த்­தி­யும் என்ன ஒரு இனிமை. “மச்­சானை பாத்­தீங்­களா” பாட­லில் இது­போ­லவே அவ­ரின் இசை­வ­ளம் நன்கு தெரி­யும். “கஸ்­தூரி கலை­மான்­களே”, “தல­வாழை இலை­போ­டுங்க” இப்­போ­தும் என் காது­க­ளில் தாள­மிட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றது.

“என்­னவோ படத்­துக்கு பாட்டு மட்­டும் போட்­டால் ஆச்சா… ஆளைப் பார்க்­க­லாம் ரீ-–ரிக்­கார்­டிங்­கில்…” என்­றார் ஒரு­வர் இளை­ய­ரா­ஜா­வின் காது­ப­டவே. அவ­ரும் இசை­ய­மைப்­பா­ளரே (ஒரு பத்­தி­ரி­கை­யில் வெளி­யா­னது)

“இந்த அலட்­சி­யப்­பேச்சே என்­னுள் இருந்த சக்­தியை உசுப்பி விட்­டது” என்­ற­வர், 14 ரீல்­க­ளுக்­கும் நானே இசை­ய­மைத்­தேன் என்­பா­ராம். (ஆம்! இசை­ய­மைப்­பா­ளர்­தானே பின்­னணி  இசை­யை­யும் அமைக்க வேண்­டும் என்று கேட்டு விடா­தீர்­கள். சில இசை­ய­மைப்­பா­ளர்­கள் மெட்டை போட்­டு­வி­டு­வ­தோடு சரி… மெட்­டின் ஸ்வரங்­க­ளை­கூட சிலர் அறி­ய­மாட்­டார்­கள்… கூட இருக்­கும் உத­வி­யா­ளர் த‘ன்­னன்­னா’வை ஸ்வரம் எழு­திக்­கொள்­ள­வேண்­டும்… இன்­னொ­ரு­வர் பின்­னணி இசை போடு­வார்­கள்.)

வானொ­லி­யி­லி­ருந்­தும், இசைத்­தட்­டு­க­ளி­லி­ருந்­தும், திரு­மண வீடு­கள் மற்­றும் திரு­விழா ஒலிப்­பெ­ருக்­கி­க­ளி­லி­ருந்­தும் ஒலித்த “மச்­சா­னை­பாத்­தீங்­க­ளா”­­வும், “அன்­னக்­கி­ளியே உன்­னத்­தே­டு­தே”­­வும் காற்­றின் அலை­வ­ரி­சையை ஆக்­கி­ர­மித்­துக் கொண்­டி­ருந்­தன. ஏதோ வெற்­றிப்­பா­டல் என்­ப­தால் மட்­டு­மல்ல, காதுள்­ள­வர்­க­ளுக்கு இது ஒரு புதிய நாதம் என்று புரிந்­தது.

“லாலி லாலி­லலோ…” என்று அன்­னத்­தின் தேடலை அறி­விக்­கும் ஜான­கி­யின் குயில்­பாட்­டி­லும், தன்­னு­டைய நாய­கன் இன்­னொ­ருத்­தி­யின் மண­வா­ளன் ஆகப்­போ­கி­றான் என்ற ஏக்­கச்­சு­மையை ஓரம்­கட்டி வைத்­து­விட்டு ‘‘நம்ம வீட்­டுக்­கல்­யா­ணம்” என்று அவ­ளது துள்­ளலை எதி­ரொ­லிக்­கும் பாட்­டி­லும் இசை­யின் வண்­ணங்­களை எண்­ணங்­க­ளு­டன் கலந்து திரைக்கு அளிக்­கக்­கூ­டி­ய­வர் வந்­து­விட்­டார் என்று பறை­சாற்­றி­யது.

நட்­சத்­திர ஆதிக்­க­மும், வண்ண ஊர்­வ­லங்­க­ளும், பிர­ப­லங்­க­ளின் அணி­வ­குப்­பும் கொண்ட படங்­க­ளுக்கு இடையே, கறுப்பு – வெள்ளை ‘அன்­னக்­கிளி’ ஜெயித்­த­தென்­றால் வண்­ண­மும் வாச­மும் கொண்ட இளை­ய­ரா­ஜா­வின் இசை­யும் ஒரு கார­ணம். அந்த ஆண்டு வெளி­வந்த படங்­க­ளில் நூறு நாட்­கள் ஓடி­ய­தோடு வெள்ளி விழா கண்ட ஒரே படம் ‘அன்­னக்­கிளி.’

‘அன்­னக்­கி­ளி’­­யைத் தொடர்ந்து இளை­ய­ராஜா இசை­ய­மைத்த ஒரு சில படங்­கள் வெற்றி பெற­வில்லை. ‘உற­வா­டும் நெஞ்­சம்’ என்­றொரு படம். இந்த படத்தை இயக்­கி­யது ‘அன்­னக்­கிளி’ பட இயக்­கு­னர்­கள் தேவ­ராஜ்- மோகன். சிவ­கு­மார், ஸ்ரீகாந்த், தேங்­காய் சீனி­வா­சன், எஸ்.வி. சுப்­பையா என்று அதே ‘அன்­னக்­கிளி’ வரிசை இதி­லும்.

இந்த படத்­தில் ‘தேவார’ ஓது­வார் லால்­குடி சுவா­மி­நா­தனை சுந்­த­ரேச தீட்­சி­தர் என்­ப­வ­ரோடு இணைத்­துப் பாட வைத்­தி­ருந்­தார் இளை­ய­ராஜா.

இந்த படத்­தில் அது ஒரு புதுமை. இந்த படத்­தில் வரும் “ஒரு நாள் உன்­னோடு ஒரு நாள்” என்ன ஒரு கனி­வான வார்ப்பு. “ஒரு நாள்” என்று தொடங்கி “திரு நாள்” என்று முடி­யும் பல்­ல­வி­யின் களிப்­பில் ஒரு சுக­மான சங்­க­மத்­தின் வளை­யம் நிறைவு பெறும். இந்த பட­மும் “பாலூட்டி வளர்த்த கிளி” என்று இன்­னொரு பட­மும் ஏனோ வெற்றி பெற­வில்லை.Trending Now: