கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 175

14-04-2019 08:15 PM

கண்ணதாசன் சுவீகாரம் எடுத்த ‘சந்திரநாத்!’

‘கன்­னி­யின் காதலி’ என்ற படத்­தில், ‘கலங்­கா­திரு மனமே, உன் கன­வெல்­லாம் நன­வா­கும் ஒரு தினமே’ என்ற பாடல் எழுதி,  திரை உல­கில் பாட­லா­சி­ரி­யாக 1949ம் ஆண்டு அறி­மு­க­மா­னார் கண்­ண­தா­சன். ‘கவி­ஞர்’ என்ற அடை­மொழி, அவர் அப்­போ­தி­ருந்து திரா­விட இயக்­கத்­தில் அவ­ருக்­குக் கிடைத்­தது.

ஆனால், அந்த இயக்­கத்­தி­ன­ருக்­குத் திரை உல­கத்­தில் வர­வேற்பு இருந்த கால­கட்­டத்­தில், அவ­ரால் கதை,- வச­ன­கர்த்­தா­வாக வாய்ப்­பு­கள் பெற முடிந்­ததே தவிர, பாட­லா­சி­ரி­ய­ராக பிர­கா­சிக்க முடி­ய­வில்லை.  இந்த நிலை­யில், ‘மாலை­யிட்ட மங்கை’ என்ற படத்தை 1958ம் ஆண்டு தயா­ரித்­தார் கண்­ண­தா­சன். அப்­படி செய்­த­தற்­கான முக்­கிய கார­ணம், ‘சுதந்­தி­ர­மாக, தன்­னு­டைய கற்­ப­னைக்கு ஏற்­ற­வாறு பாடல்­கள் எழு­த­லாம் என்­ப­து­தான்’ என்று அவர் கூறி­யி­ருக்­கி­றார்.  

அப்­ப­டி­யும், ‘செந்­த­மிழ் தேன்­மொ­ழி­யாள்’ என்ற ‘மாலை­யிட்ட மங்­கை’­­யின் வெற்­றிப்­பா­டல், இந்தி மெட்­டுக்­குத்­தான் அவ­ரால் எழு­தப்­பட்­டது. அது, ‘ஆன்’ என்ற படத்­தில், ‘மொஹப்­பத் சூமே ஜின்கே ஹாத்’ என்ற பாட­லின் மெட்­டி­லி­ருந்து பெறப்­பட்­டது!   அது­மட்­டு­மல்ல. வங்­கா­ளத்­தின் மிகப் பிர­ப­ல­மான நாவ­லா­சி­ரி­ய­ரும் தேசி­ய­வா­தி­யு­மான சரத்­சந்­திர சட்­டோ­பாத்­தி­யா-­­வின் ‘சந்­தி­ர­நாத்’ நாவ­லைத் தழு­வித்­தான் ‘மாலை­யிட்ட மங்கை’ எடுக்­கப்­பட்­டது. இவற்­று­டன், ஆரி­யர், வந்­தே­றி­கள், பார்ப்­ப­னர்­கள் என்று கண்­ண­தா­சன் சார்ந்த இயக்­கத்­தி­னர் தமிழ்­நாட்­டின் வீதி­தோ­றும் அர்ச்­சனை செய்­து­வந்த பிரி­வைச் சேர்ந்த டி.ஆர். மகா­லிங்­கத்தை பட­நா­ய­க­னா­கத் தேர்ந்­தெ­டுத்­தார் கண்­ண­தா­சன். மகா­லிங்­கத்­தின் குர­லில்­தான் ‘செந்­த­மிழ் தேன்­மொ­ழி­யாள்’, ‘நான் அன்றி யார் வரு­வார்’ முத­லிய  ‘மாலை­யிட்ட மங்­கை’­­யின் வெற்­றிப்­பா­டல்­கள் ஒலித்­தன.

அறி­வுத் தேட­லும் சத்­திய வேட்­கை­யும் இருந்த கண்­ண­தா­ச­னுக்கு, ஆரம்­பம் முதலே வங்­கம் என்­றால் ஒரு ஈர்ப்பு, வங்க எழுத்­தா­ளர்­கள் என்­றால் ஒரு அலா­தி­யான பிரி­யம், பிரேமை. எட்­டாம் வகுப்பு வரை படித்­த­வ­ருக்கு பங்­கிம் சந்­தி­ரர், சரத்­சந்­தி­ரர் போன்ற வங்க எழுத்­தா­ளர்­க­ளின் கதை­கள் ஒரு புதிய திசை­யைக் காட்­டின.

வங்க எழுத்­துக்­கள், தமிழ்­நாட்டு வாச­கர்­க­ளுக்கு 1900ம் ஆண்­டி­லி­ருந்தே கிடைக்க ஆரம்­பித்­து­விட்­டன.   வங்­கத்­தின் எழுத்­துக்­களை முதன்­மு­த­லில் தமி­ழில் தந்­த­வர்­க­ளில் முக்­கி­ய­மா­ன­வர், மகேஷ்­கு­மார் சர்மா. தமி­ழ­ரான இவர், சமஸ்­கி­ருத பண்­டி­தர். வங்க இலக்­கி­யத்­தின் உயிர்த்­து­டிப்பை நன்­றாக அறிந்து, பங்­கிம் சந்­தி­ர­ரின் ‘ஆனந்த மடம்’, சந்­தி­ர­சே­கர் ஆகிய நாவல்­களை  தமி­ழில் மொழி பெயர்த்­தார்.

‘ஆனந்த மட’த்­தில் இடம்­பெற்ற ‘வந்தே மாத­ரம்’ கீதத்தை, தமி­ழின் தேசிய மகா­க­வி­யான சுப்­பி­ர­ம­ணிய பார­தி­யார் மொழி­பெ­யர்த்­தார். த.நா.குமா­ர­சாமி, த.நா. சேனா­பதி சகோ­த­ரர்­கள்,  வங்­காள மொழி­யி­லி­ருந்து சரத்­சந்­தி­ரரை தமி­ழில் மொழி­பெ­யர்த்­தார்­கள். சரத்­சந்­தி­ர­ரின் நாவல்­கள் தமிழ்­நாட்­டில் அடைந்த பிர­ப­லத்­தைக் கண்டு, அவ­ரு­டைய வங்­காள நாவல்­க­ளின் இந்தி மொழி­பெ­யர்ப்­பு­க­ளி­லி­ருந்து இன்­னும் பலர் தமி­ழில் கொடுத்­தார்­கள்.  இத­னால் எல்­லாம், கண்­ண­தா­சன் இளை­ஞ­ராக வளர்ந்­து­கொண்­டி­ருந்த கால­கட்­டத்­தில், அவர் சரத்­சந்­தி­ர­ரின் கதை­க­ளைப் படிக்க நிறைய வாய்ப்­பு­கள் கிடைத்­தன. இந்­தப் போக்­கின் தொடர்ச்­சி­யா­கத்­தான் சரத்­சந்­தி­ர­ரின் ‘சந்­தி­ர­நாத்’ என்ற குறு­நா­வலை, தன்­னு­டைய முதல் தயா­ரிப்­பிற்­கான திரைக்­க­தையை அமைக்க அவர் தேர்ந்­தெ­டுத்­தார்.

‘‘நான் கண்­ண­தா­சன் பிலிம்ஸ் என்ற படக் கம்­பெ­னி­யைத் துவக்­கி­னேன். நிறைய பாடல்­கள் எழு­த­வேண்­டும் என்ற வெறி­யி­ருந்த நேரம். சரத்­சந்­திர சாட்­டர்­ஜி­யின் ‘சந்­தி­ர­நாத்’ என்ற கதை­யைத் தழுவி ‘மாலை­யிட்ட மங்கை’ என்ற கதையை எழு­தி­னேன். மிகுந்த கஷ்­டத்­தி­லி­ருந்த டி.ஆர்.மகா­லிங்­கத்தை ஒப்­பந்­தம் செய்­தேன். மகா­லிங்­கத்தை ஜனங்­கள் ஒப்­புக்­கொள்­வார்­களா என்று சிலர் சந்­தே­கம் கிளப்­பி­னார்­கள். திரா­வி­டம் பற்­றிப் பாட்­டுப்­போட்டு, படத்­தின் ஆரம்­பத்­தி­லேயே  மகா­லிங்­கத்­தைப் பாட வைத்­து­விட்­டால் நம்­மு­டைய நண்­பர்­கள் ஒப்­புக்­கொண்­டு­வி­டு­வார்­கள் என்­றேன் நான்,’’ என்று, ‘எனது சுய­ச­ரி­தம்’ என்ற நூலில் கண்­ண­தா­சன் குறித்­தி­ருக்­கி­றார்.

ஆனால், முதல் பாட்டை மட்­டும் கொண்டு கண்­ண­தா­சன் தன்­னு­டைய அக்­கா­லத்­திய திரா­விட நண்­பர்­க­ளைத் திருப்தி செய்­ய­வில்லை. படத்­தின் தொடக்­கத்­தி­லேயே ஒரு ‘திரா­வி­ட’க்­கு­டும்­பத்­தைக் காட்­டி­னார். அதன் தலை­வர் வேத­நா­ய­கம், திரா­விட ஒற்­றுமை உள்­ளம் கொண்­ட­வ­ராம். தன் நான்கு பிள்­ளை­க­ளுக்கு முறையே, தமிழ், தெலுங்கு, மலை­யாள, கன்­ன­டப் பெண்­களை கட்டி வைத்­தி­ருப்­ப­வர். இந்த வீட்­டில் வேலைக்­காரி போல் வந்து, பெண் பிள்ளை பிறக்­காத குடும்­பத்­தில் வளர்ப்­புப் பெண் போல் வளர்ந்­த­வள்­தான், படக்­க­தை­யின் நாயகி சரசு (சரத்­சந்­தி­ர­ரின் நாவ­லில் சரயு). சுரசு வேடத்­தில் பண்­ட­ரி­பாய் நடித்­தார்.

ஏழ்­மை­யான குடும்­பத்­தில் பிறந்து, வச­தி­யான ஒரு குடும்­பத்­தில் வீட்டு வேலை பார்க்­கும் பெண்­ணாக, ‘மாலை­யிட்ட மங்­கை’­­யின் நாய­கியை கண்­ண­தா­சன் சித்­த­ரித்­தார்.  இந்­தப் பொதுத்­தன்மை சரத்­சந்­தி­ர­ரின் நாயகி சர­யு­விற்­கும் பொருந்­தி­யி­ருந்­தா­லும், வங்­காள குறு­நா­வ­லின் சந்­தர்ப்­ப­மும் சூழ்­நி­லை­க­ளும் முற்­றி­லும் வேறு­வி­த­மா­னவை. கண்­ண­தா­ச­னின் கதை நாய­கன், முத­லி­யார் பிரிவை சேர்ந்­த­வன். சரத்­சந்­தி­ர­ரின் நாய­கன், பிரா­மண வகுப்­பைச் சேர்ந்­த­வன். அவன் காசிக்கு வரும் போது, தன்­னு­டைய குடும்­பத்­திற்கு வைதீ­கக்­கா­ரி­யங்­கள் செய்­யும் புரோ­கி­த­ரின் வீட்­டில் வேலை செய்­ப­வ­ளா­கத்­தான் நாயகி சர­யு­வின் தாயைக் காண்­கி­றான். சரயு அவ­ளு­டைய தாய்க்கு உத­வி­யாக வேலை செய்­கி­றாள்.

கண்­ண­தா­ச­னுக்கு இரண்டு தலை­மு­றைக்கு முந்­தைய எழுத்­தா­ளர் என்று சரத்­சந்­தி­ர­ரைக் கொள்­ள­லாம். பத்­தொன்­ப­தாம் நூற்­றாண்­டின் இறு­தி­யிலோ அடுத்த நூற்­றாண்­டின் தொடக்­கக் காலங்­க­ளிலோ நடை­பெ­று­வ­தாக சித்­த­ரிக்­கப்­பட்ட ‘சந்­தி­ர­நாத்’­­தில், கதா­நா­ய­கன் நாய­கியை மணக்­கும் போது, அவள் பத்து வயது சிறுமி. சந்­தி­ர­நாத் செய்­து­கொள்­வது பால்ய விவா­கம். கண்­ண­தா­சன் ‘மாலை­யிட்ட மங்கை’ எடுத்த 1950கள், பால்ய விவா­கத்தை எதிர்த்து படங்­கள் வந்­து­கொண்­டி­ருந்த கால­கட்­டம்!

சரத்­சந்­த­ர­ரின் ‘சந்­தி­ர­நாத்’ கோல்­கட்­டா­வில் உயர் படிப்பு படித்­த­வன். தன்­னு­டைய தந்­தை­யின் மர­ணத்­திற்­குப் பின் அவ­ருக்­கான கிரி­யை­க­ளைச் செய்ய சொந்த ஊருக்கு வரு­கி­றான். அங்கே அவ­னு­டைய சித்­தப்­பா­வு­டன் அவ­னுக்கு ஒத்­துக் போக­வில்லை. அவ­னு­டைய குடும்ப இல்­லம் அவ­னு­டைய தாய்­மா­மா­வின் பரா­ம­ரிப்­பில் இருக்­கி­றது. இந்த வகை­யி­லான மாமி, ஹர­காலி என்­ப­வள்,

நாய­கி­யின் நல­னுக்கு விரோ­த­மாக செயல்­ப­டு­வ­ப­வ­ளாக சரத்­சந்­தி­ர­ரால் சித்­த­ரிக்­கப்­ப­ டு­கி­றாள். கண்­ண­தா­சன் காட்­டும் ‘மாலை­யிட்ட மங்­கை’­­யின் நாய­கன் சந்­துரு, லண்­ட­னுக்­குச் சென்று படித்­து­விட்டு வந்­த­வன்.  சித்­தப்­பா­வும் சித்­தி­யும் தன்­னு­டைய மதிப்­புக்கு உகந்­த­வர்­கள் என்­றும், அத்­தைக்கு முன்­கோ­பம் அதி­கம், மாமா அத்­தைக்­குப் பயந்­த­வர் என்று, அவனே அவர்­க­ளு­டைய குணா­தி­ச­யங்­க­ளைக் குறிப்­பி­டு­கி­றான்.

‘சந்­தி­ர­நாத்’ நாவ­லில், நாயகி சர­யு­விற்­குப் போட்­டி­யாக, சந்­தி­ர­நாத்­தின் மாமி­யி­னு­டைய சகோ­த­ர­ரி­யின் மகள் அமைந்­தி­ருக்­கக்­கூ­டும் என்­ப­து­போல் ஜாடை­யாக ஒரு வாக்­கி­யம் இருக்­கி­றது. அதை பெரி­து­ப­டுத்தி, திரைக்­க­தை­யின் ஒரு முக்­கிய அம்­ச­மாக கண்­ண­தா­சன் ‘மாலை­யிட்ட மங்­கை’­­யின் கதை­யை பின்­னி­னார்.  

‘மாலை­யிட்ட மங்­கை’­­யில், கதா­நா­ய­கன் சந்­து­ரு­வின் அத்தை மக­ளான கம­லத்­திற்கு அவன் மீது காதல். சந்­து­ரு­வும் கம­லத்­தைப் பார்த்து,  ‘செந்­த­மிழ் தேன் மொழி­யாள், நிலா­வென சிரிக்­கும் மலர்க்­கொ­டி­யாள்’ என்று பாடு­வ­தோடு நிறுத்­த­வில்லை, ‘பைங்­கனி

இத­ழில் பழ­ர­சம் தரு­வாள், பரு­கிட தலை­கு­னி­வாள்’ என்று பாடு­கி­றான். ஆனால் வீட்டு வேலைக்­கா­ரன் சுட­லை­யி­டம் நாய­கன் கூறு­கி­றான் - ‘‘கம­லத்தை நான் விரும்­ப­வும் இல்லை, வெறுக்­க­வும் இல்லை’’!

சினி­மாக் கதை­யில் இப்­ப­டி­யெல்­லாம் வரும் என்­ப­தைக் குறிப்­ப­தைப்­போல கண்­ண­தா­சன் ஒரு காட்­சி­யும்  வைத்­தி­ருக்­கி­றார். சந்­து­ரு­வும் கம­ல­மும் தனியே பேசிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள்...

‘‘சந்­துரு :-- நீ நட­னம் ஆடு­கி­ற­போது, உன்­னு­டன் பலர் ஆடு­கி­றார்­களே, அவர்­கள் யார்?’’

‘‘கம­லம் --: அவர்­கள் மட்­டும்­தான் உங்­கள் கண்­க­ளுக்­குத் தெரி­கி­றார்­களா? ....’’ அவர்­கள் என் தோழி­கள்.

‘‘சந்­துரு --: தோழி­கள்....வான் கோழி­கள்.’’

‘‘கம­லம் : -- நான்?’’

‘‘சந்­துரு : -- நீ ஒளி­வீ­சும் நட்­சத்­தி­ரம்.’’

‘‘கம­லம் :  -- வேண்­டாம், நட்­சத்­தி­ரம் என்­றால் பல­ருக்­குத் தொல்லை’’ தர­வேண்­டி­யி­ருக்­கும்!

‘‘சந்­துரு : -- நான் சினிமா நட்­சத்­தி­ரத்தை சொல்­ல­வில்லை!’’

இத்­த­கைய அத்தை மகள் கம­லம், சந்­துரு கல்­யா­ணம் செய்­து­கொண்டு வரும் சர­சுவை முத­லில் வெறுக்­கி­றாள். பிறகு சர­சு­வின் நல்ல உள்­ளத்­தைப் பார்த்து அவ­ளு­டைய நலத்தை எவ்­வ­கை­யே­னும் போற்­றிப் பாது­காக்­கும் பெண்­ணாக மாறி­வி­டு­கி­றாள் என்று ‘மாலை­யிட்ட மங்­கை’­­யில் ஒரு புதிய அம்­சத்தை பல­மாக சேர்த்­தார் கண்­ண­தா­சன்.

சர­சு­வாக பண்­ட­ரி­பாய் நடிக்க, அவ­ரு­டைய நிஜ­வாழ்க்கை தங்­கை­யான மைனா­வதி கம­ல­மாக நடித்­தது, இந்த சித்­த­ரிப்­புக்கு துணை­போ­னது. முத­லில் மைனா­வதி நடித்த பாத்­தி­ரத்­தில் எம்.என்.ராஜம் நடித்­தார். ஷூட்­டிங்­குக்கு சொன்­ன­படி வர­வில்லை என்று அவ­ரைத் தூக்­கி­விட்டு, சுர­சு­வாக நடித்த பண்­ட­ரி­பா­யின் தங்­கை­யான மைனா­வ­தியை நடிக்­க­வைத்­தார் கண்­ண­தா­சன். ‘சந்­தி­ர­நாத்’ நாவ­லில், ‘உன் தாய் ஒழுக்­கக்­கே­டான முறை­யில் நடந்­து­கொண்­ட­வள்’ என்று கூறி, கர்ப்­ப­மாக இருக்­கும் நாயகி சரயு வீட்டை விட்டு வெளி­யேற்­றப்­ப­டு­கி­றாள். அதே போன்ற குற்­றச்­சாட்டு ‘மாலை­யிட்ட மங்­கை’­­யி­லும் வைக்­கப்­ப­டு­கி­றது. இவை, ‘ராமா­ய­ண’த்­தின் உத்­தர காண்­டத்­தில் வண்­ணா­னின் வார்த்­தை­க­ளைக்­கேட்டு, கர்ப்­ப­வ­தி­யான சீதை நாடு கடத்­தப்­ப­டும் கதைக்­கூ­றோடு தொடர்­பு­டை­யவை. சரத்­சந்­தி­ரர் இதை தெளி­வா­கவே முன்­வைக்­கி­றார். கண்­ண­தா­ச­னும், ‘நேற்­றிரா வேளை­யிலே’ என்ற வரி­க­ளின் வாயி­லாக இதைத் தெளி­வு­ப­டுத்­து­கி­றார். இந்த நிலை­யில், நாய­க­னின் மனம் எந்த அள­வுக்கு கல்­லாக மாறு­கி­றது என்­பதை, சரத்­சந்­தி­ரர் காட்­டும் வழி­யி­லேயே கண்­ண­தா­ச­னும் சித்­த­ரிக்­கி­றார்.

சரத்­சந்­தி­ர­ரின் நவீ­னத்­தில், வீட்­டை­விட்டு வெளி­யேற்­றப்­பட்ட நாயகி,  தான் சிறு­மி­யாக வளர்ந்த காசி நக­ரத்­திற்­குத் திரும்பி வரு­கி­றாள். அவள் நாதி­யற்று, தன்­னந்­த­னி­யா­ளா­கத் தெரு­விலே நிற்­கி­றாள். அப்­போது, சது­ரங்க விளை­யாட்­டில் பித்­துப் பிடித்த கைலாஷ் சந்­திரா என்ற வய­தான பிரா­ம­ண­ரால்,   அவள் தாயா­கத் தத்­தெ­டுத்­துக் கொள்­ளப்­ப­டு­கி­றாள்!

சர­யு­விற்­குப் பிறக்­கும் பிஸ்­வேஸ்­வர்­தான் இந்த தள்­ளாட்­டக் கிழ­வ­ரின் வாழ்க்­கையை மீண்­டும் மலர வைக்­கி­றான். அறு­பத்தி ஐந்து வயது கைலாஷ் சந்­திரா, ஒரு இளம் பெண்­ணுக்­கும் அவ­ளுக்­குப் பிறக்­கும் குழந்­தைக்­கும் தரு­வா­க­வும் நிழ­லா­க­வும் திக­ழும் நாவ­லின் இந்­தப் பகுதி, கண்­க­ளில் நீரை வர­வ­ழைக்­கக்­கூ­டிய அற்­பு­த­மான பகுதி.  எங்­கெல்­லாமோ திரிந்­த­பின், காசிக்கு மீண்­டும் வரும் சந்­தி­ர­நாத், சர­யு­வை­யும், இன்­னும் குறிப்­பாக அவ­ளி­டம் தனக்­குப் பிறந்த பிள்­ளை­யை­யும் ஏற்­றுக்­கொண்டு ஊர் திரும்­பு­கி­றான்.

சர­யு­வும் அவள் பிள்­ளை­யும் தன்­னை­விட்­டுச் சென்­ற­பின், அவர்­க­ளுக்கு அடைக்­க­லம் தந்த கிழ­வர், தானே அடைக்­க­லம் அற்­ற­வ­ராக ஆகி­றார்! பாலை­யில் திரிந்­த­வ­ருக்கு ஒரு பசுஞ்­சோலை கிடைத்­த­பின், எல்­லாம் கானல் நீரா­கிப்­போன கதை இது. மார் மீதும் தோள் மீதும் தான் வளர்த்த பிஸ்­வேஸ்­வர் எழு­திய கடி­தத்தை எல்­லோ­ருக்­கும் படித்­துக்­காட்­டிய படியே, காசி நக­ரத்து வயோ­தி­கர் தன்­னு­டைய அந்­திம நாட்­க­ளைக் கழிக்­கி­றார்.

இவற்­றுக்­கெல்­லாம் மாறு­பட்டு, தமிழ் சினி­மா­விற்­குத் தேவைப்­ப­டு­கிற வழக்­க­மான உச்­சக்­கட்ட காட்சி ‘மாலை­யிட்ட மங்­கை’­­யில் அமைந்­தது. என்­ன­தான் இலக்­கி­யத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்­டி­ருந்­தா­லும், சினிமா என்­கிற ஊட­கம்  கணி­ச­மான முத­லீடு தொடர்­பு­டை­யது என்­ப­தால், அதன் தேவை­க­ளும் எதிர்­பார்ப்­பு­க­ளும் வித்­தி­யா­ச­மா­னவை. இத­னால்­தான், இலக்­கி­யங்­களை சார்ந்த சினிமா படைப்­பு­கள், சில வகை­க­ளில் கலக்­கி­யங்­க­ளாக மாறி­வி­டு­கின்­றன.

எப்­ப­டி­யும், தனக்­குப் பிடித்த ஒரு கதா­சி­ரி­ய­ரின் படைப்பை அஸ்­தி­வா­ர­மா­கக் கொண்டு, தன்­னு­டைய முதல் தயா­ரிப்பை எடுக்­கும் திருப்தி கண்­ண­தா­ச­னுக்­குக் கிடைத்­தது.  ‘‘மாலை­யிட்ட மங்கை’’ படப்­பி­டிப்பு நாட்­கள் என் மனதை விட்டு அக­லா­தவை. அந்­தப் படம் வந்த பிற­கு­தான் என் தொழி­லில் இருந்த மந்த நிலை மாறி, வெகு வேக­மான முன்­னேற்­றம் பிறந்­தது,’’ என்­பார் கண்­ண­தா­சன்.

மூலக்­க­தை­யில் அமைந்த பல நுட்­பங்­கள் திரைப்­ப­டத்­தில் இல்லை என்­றா­லும், எடுத்த வரை வெற்றி கிடைத்­தது. இன்­னும் சில ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு, ‘சேஷ் பரி­சய்’ என்ற  சரத்­சந்­தி­ர­ரின் இன்­னொரு கதையை ‘வானம்­பா­டி’­­யாக எடுத்து வெற்றி காண்­பார் கண்­ண­தா­சன்.

(தொட­ரும்)