ஆஸியுடனான 4வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி 358 ரன்கள் குவிப்பு

10-03-2019 07:31 PM

மொஹாலி,

ஆஸ்திரேலியாவுடனான 4வது 1 நாள் கிரிக்கெட் போட்டியில் ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா,  ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அம்பதி ராயுடு, மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி ஆகியோருக்கு பதிலாக கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார் ஆகிய வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றனர்.

ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் இந்திய அணியின் இன்னிங்ஸை தொடங்கினர். இந்த ஜோடி இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியது. தவான் தொடக்கம் முதலே பவுண்டரி களாக அடித்து துரிதமாக ரன் சேர்த்து வந்தார். மறுமுனையில் ரோஹித் சர்மா தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இருவரும் அரைசதம் அடித்து அதிரடியாக ரன் குவிக்கத் தொடங்கினர். அதனால், முதல் விக்கெட் பாட்னர்ஷிப் 150 ரன்களையும் கடந்தது.

95 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா பவுண்டரி அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்தது.

பிறகு, தவானுடன் ராகுல் ஜோடி சேர்ந்தார். ரோஹித் ஆட்டமிழந்த போதும் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த தவான் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 16-வது சதத்தை கடந்தார்.

சதம் அடித்த பிறகு பவுண்டரியிலே ரன் குவித்து வந்த தவான் 143 ரன்களில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். மொத்தம் 115 பந்துகளை எதிர்கொண்ட அவர் 18 பவுண்டரிகள், 3 சிக்ஸர் அடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் இது தவானின் அதிகபட்ச ஸ்கோராகும்.

அதன்பிறகு, கோலி 7 ரன்கள், நிதானமாக விளையாடிய ராகுல் 26 ரன்கள் என குறுகிய நேரத்தில் ஆட்டமிழந்தனர். இதனால், ரன் ரேட் சற்று குறைந்தது.

ரிஷப் பந்த் களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்.

சங்கர் 26 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

பூம்ரா கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து அசத்தினார்.

விஜய் சங்கர் கடைசி கட்டத்தில் அதிரடி காட்ட நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்களை குவித்தது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளும், ரிச்சர்ட்ஸன் 3 விக்கெட்டுகளும், ஸாம்பா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸி. அணி விளையாடி வருகிறது.

ஆஸி. அணி பேட்டிங்

31 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது ஆஸி அணி.

31வது ஓவரில் ரன் ரேட் 5.81இல் விளையாடி வருகிறது ஆஸி. ஆனால், இந்திய அணியின் ரன் ரேட் 9.42 இருக்கிறதுTrending Now: