காலப்­பெட்­ட­க­மாக இருக்க வேண்­டும்! – -இயக்­கு­நர் ஆர். கண்­ணன்

05-03-2019 06:24 PM

இயக்­கு­நர் மணி­ரத்­னம் பள்­ளி­யி­லி­ருந்து வந்­த­வர் இயக்­கு­நர் ஆர். கண்­ணன். ‘ஜெயம் கொண்­டான்,’ ‘கண்­டேன் காதலை,’ ‘வந்­தான் வென்­றான்,’ ‘சேட்டை,’ ‘இவன் தந்­தி­ரன்’ போன்ற படங்­களை இயக்­கி­யுள்­ளார். இவர், தற்­போது அதர்வா நடிப்­பில் விரை­வில் வெளி­யா­க­வி­ருக்­கும் ‘பூம­ராங்’ படத்தை எழுதி, இயக்­கித் தயா­ரித்­தி­ருக்­கி­றார். அவ­ரி­டம் பேசி­ய­தி­லி­ருந்து…

* அது என்ன ‘பூம­ராங்’?

18-ம் நுாற்­றாண்­டில் தமி­ழர்­கள் கண்­டு­பி­டித்த ஆயு­தம்­தான் ‘பூம­ராங்.’ அதற்கு ‘வளரி’ என்று பெய­ரிட்­டார்­கள். ‘பூம­ராங்,’ எதி­ரி­யைப் போய்த் தாக்­கி­விட்டு, பயன்­ப­டுத்­தி­ய­வ­ரின் கைக்கே திரும்ப வந்­து­வி­டும். அப்­ப­டி­யொரு தொழில்­நுட்­பத்தை உரு­வாக்­கி­ய­வர்­கள் நம் முன்­னோர். ‘பூம­ராங்’ என்­ப­தி­லி­ருந்து அந்த ஐடி­யாவை மட்­டும் எடுத்­துக்­கொண்டு அதில், விதி­யின் தத்­து­வத்­தைப் பொருத்தி இந்­தத் திரைக்­க­தையை எழு­தி­யி­ருக்­கி­றேன். நாம் நல்­லது செய்­தால், அது எந்த விதத்­தி­லா­வது நம்­மைக் காப்­பாற்­றும். அதே போல் மற்­ற­வர்­க­ளுக்கு தீங்கு செய்­து­விட்டு நன்­றாக வாழ்ந்­திட முடி­யாது. நீங்­கள் செய்த தீமை, என்­றைக்­கா­வது ஒரு நாள் வேறு ரூபத்­தில் வந்து உங்­க­ளைத் தாக்­கும். படத்­தின் தலைப்­புக்­கான விளக்­க­மா­கக் கதை இருந்­தா­லும், திரைக்­க­தை­யில் இன்­றைய முக்­கி­யப் பிரச்னை ஒன்­றைக் கையாண்­டி­ருக்­கி­றேன்.

* ‘பூம­ராங்’ எந்த சமூ­கப் பிரச்­னையை பேசு­கி­றது?

 இயற்கை இல­வ­ச­மா­கத் தரு­கிற தண்­ணீ­ருக்­கா­க­வும், காற்­றுக்­கா­க­வும் நாம் போராட வேண்­டிய நிலைமை வந்­தி­ருக்­கி­றது என்­பதை யார் மன­தை­யும் புண்­ப­டுத்­தா­மல் மிக அழ­காக இதில் சொல்­லி­யி­ருக்­கி­றேன். ‘இவன் தந்­தி­ர’­னாக இருந்­தா­லும் சரி, ’பூம­ராங்’ பட­மாக இருந்­தா­லும் இன்­றைய வெற்­றி­யோடு ஒரு திரைப்­ப­டம் நின்­று­வி­டக்­கூ­டாது என்று நினைக்­கி­றேன். இன்­னும் 25 வரு­டங்­கள் கழித்து இந்த படங்­க­ளைப் பார்க்­கும் அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்கு, ‘ஓ! அந்­தக் கால­கட்­டத்­தில் இன்­ஜி­னி­ய­ரிங் படித்த மாண­வர்­க­ளுக்கு இவ்­வ­ளவு நடந்­தி­ருக்­கி­றதா?’  என்று எண்­ணிப் பார்க்­கிற காலப்­பெட்­ட­க­மாக இந்த படங்­கள் இருக்க வேண்­டும் என்று நினைக்­கி­றேன். வெறும் காதல் படங்­க­ளி­டம் இந்­தத் தகு­தியை நீங்­கள் எதிர்­பார்க்க முடி­யாது.

* அதர்வா கேரக்­டரை பற்றி சொல்­லுங்­கள்!

அதர்வா மென்­பொ­ருள் துறை­யால் பாதிக்­கப்­பட்ட ஒரு இளை­ஞ­னாக வரு­கி­றார். மென்­பொ­ருள் துறை­யில் எவ்­வ­ளவு முடி­யுமோ அவ்­வ­ளவு பிழிந்து எடுத்து வேலை வாங்­கி­விட்டு, ஆயி­ரம் பேர், ஐநுாறு பேர் என்று புரா­ஜக்ட் முடிந்­த­தும் கறி­வேப்­பிலை மாதிரி தூக்­கிப் போட்டு விடு­வார்­கள். அவர்­க­ளுக்­குப் பதி­லாக, வேலைக்­காக அல்­லா­டிக்­கொண்­டி­ருக்­கும் புதிய பட்­ட­தா­ரி­களை எடுத்­துக்­கொள்­வார்­கள். எக்ஸ்­பீ­ரி­யன்ஸ் உடை­ய­வர்­களை வேலை­யில் வைத்­தி­ருந்­தால் இன்­னும் அதிக சம்­ப­ளம் தர­வேண்­டி­யி­ருக்­கும் என்­பது தான் இதற்­குக் கார­ணம். இப்­படி தூக்கி வீசப்­பட்ட மூன்று இளை­ஞர்­கள், இனி­மேல் எந்த வெள்­ளைக்­கார நிறு­வ­னங்­க­ளுக்­கும் கூஜா துக்­கு­வ­தில்லை என்று முடி­வெ­டுத்த பின்பு அவர்­கள் மூவ­ரும் கையி லெடுக்­கும் ஆயு­தம் என்ன, அவர்­க­ளுக்கு அதர்வா எப்­ப­டித் தலைமை வகிக்­கி­றார் என்ற விதத்­தில் அவ­ரது கதா­பாத்­தி­ரத்தை வடி­வ­மைத்­தி­ருக்­கி­றேன். இந்­தக் கதா­பாத்­தி­ரத்­துக்கு அதர்வா கச்­சி­த­மா­கப் பொருந்­தி­யி­ருக்­கி­றார். நடிப்பு, ஆக்­க்ஷன் காட்­சி­கள் இரண்­டி­லுமே ரசி­கர்­க­ளைக் கவர்­வார். இரண்டு கதா­நா­ய­கி­க­ளும் கதா­பாத்­தி­ரங்­க­ளாக நம் மன­தில் அழுந்­தப் பதிந்து விடு­வார்­கள்.

* உங்­கள் படங்­க­ளில் இடம்­பெ­றும் ஆக்­க்ஷன் காட்­சி­க­ளுக்கு ஏன் இவ்­வ­ளவு சிரத்தை எடுக்­கி­றீர்­கள்?

காதல் காட்­சி­க­ளும் சண்­டைக்­காட்­சி­க­ளும் திரைக்­க­தை­யில் சரி­யான சூழ்­நி­லை­யில், சரி­யான இடத்­தில் இடம் பெற்­றால்­தான் அது ரசி­கர்­க­ளைக் கவ­ரும். இந்த இரண்டு அம்­சங்­க­ளும் திணிப்­பா­கவோ மிகை­யா­கவோ இருக்­கவே கூடாது. ‘பூம­ராங்’­கில் இடம்­பெ­றும் ஆக்­க்ஷன் காட்­சி­கள் இன்­றைய இளை­ஞர்­க­ளின் கோப­மாக வெளிப்­பட்­டி­ருக்­குமே தவிர, ஒரு ஹீரோ­வின் சண்­டை­யாக இருக்­காது.

* டிரெய்­ல­ரில் தீக்­கா­யத்­தால் வெந்து உருக்­கு­லைந்த கதா­நா­ய­க­னின் முகம் வந்து செல்­கி­றது. அது­தான் படத்­தின் கிளை­மாக்சா?

கதை தொடங்­கு­வ­தற்­கான ஒரு சின்ன புள்­ளி­தான் அந்த காட்சி. அதைப்­பற்றி விரி­வா­கச் சொல்­லி­விட்­டால் சஸ்­பென்ஸ் போய்­வி­டும். பாதிக்­கப்­ப­டு­வது நாய­கனா மற்­றொரு முதன்­மைக் கதா­பாத்­தி­ரமா என்­ப­தும் இப்­போது புதி­ரா­கவே இருக்­கட்­டுமே.

* படத்தை முடித்த பிறகு ஒவ்­வொரு முறை­யும் உங்­கள் குரு மணி­ரத்­னத்­துக்­குத் திரை­யிட்­டுக் காட்­டு­வீர்­களா?

மணி சார் பிரி­வியூ காட்சி பார்ப்­ப­தை­விட பார்­வை­யா­ளர்­க­ளு­டன் அமர்ந்து படம் பார்க்­கவே விரும்­பு­வார். படத்­தொ­குப்பு நடந்து கொண்­டி­ருக்­கும்­போது மட்­டும்­தான் படத்­தைப் பார்க்க நேர்ந்­தால் கருத்­துச் சொல்­வார். திரை­ய­ரங்கு வந்­த­பி­றகு பார்த்­து­விட்டு கருத்து சொல்ல மாட்­டார். படம் பார்த்து விட்டு வெளியே வரும்­போது அவ­ரது முகம் அவ­ரது திரை அனு­ப­வத்­தைச் சொல்­லி­வி­டும்.

Trending Now: