தொடரை வென்றது ஆஸி.,: மேக்ஸ்வெல் சதம் விளாசல்

28-02-2019 12:50 AM


பெங்களூரு:

இந்தியாவுக்கு எதிரான 2வது ‘டுவென்டி&20’ போட்டியில் மேக்ஸ்வெல் 55 பந்தில் 113 ரன் விளாச 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸி., 2&0 என முழுமையாக தொடரை கைப்பற்றி அசத்தியது.

ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 2 ‘டுவென்டி&20’ மற்றும் 5 ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளது. முதலில் ‘டுவென்டி&20’ தொடர் நடக்கிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆஸி., 1&0 என முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், 2வது மற்றும் கடைசி போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதனால், இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

மீண்டும் ‘டாஸ்’ வென்ற ஆஸி,., கேப்டன் ஆரோன் பின்ச் வழக்கம் போல் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் மூன்று மாறங்கள் செய்யப்பட்டன. ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவரது இடத்தில் தவான் களம் இறங்கினார். கடந்த போட்டியில் அறிமுக வாய்ப்பு பெற்ற மயங் மார்கண்டே, விசாகப்பட்டினத்தில் சொதப்பலாக பந்து வீசிய உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு தமிழகத்தின் விஜய் சங்கர், சிதார்த் கவுல் வாய்ப்பு பெற்றனர். அதே நேரம் ஆஸி., அணியில் மாற்றம் ஏதும் இல்லை.

இந்திய அணிக்கு ராகுல், தவான் இருவரும் துவக்கம் தந்தனர். ஒருமுனையில் தவானா தடுமாற, மறுமுனையில் மண்ணின் மைந்தன் ராகுல் தனக்கே உரிய பாணியில் விளையாடி அசத்தினார். ரிச்சர்ட்சன், கம்மின்ஸ் இருவரது ஓவரில் ராகுல் தலா இரண்டு சிக்சர்கள் விளாசினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 61 ரன் (7.1 ஓவர்) சேர்த்த நிலையில், கூல்டர் நைல் வேகத்தில் ராகுல் சரிந்தார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், இவர் 47 ரன் (26 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து வெளியேறினார். அடுத்து கேப்டன் கோஹ்லி களம் வந்தார்.

தொடர்ந்து சொதப்பி வந்த தவான் 14 ரன் (24 பந்து, 1 பவண்டரி) எடுத்த நிலையில், பெஹ்ரன்டர்ப் பந்தில் ஸ்டாய்னிசிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், இந்த கேட்ச் குறித்து 3வது நடுவரிடம் கள நடுவர்கள் முறையிட்டனர். இதில், தரையில் பட்ட பின்னரே ஸ்டாய்னிஸ் வசம் பந்து சென்றது தெளிவானது. இதை பல முறை பார்த்த 3வது நடுவர் என்ன யோசித்தாரோ என தெரிவில்லை ‘அவுட்’ என அறிவித்தார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும் இந்திய அணிக்கு சாதகமாகவே நைமந்தது. ஆமைவேகத்தில் விளையாடி வந்த தவான் பெவிலியின் திரும்பினார். மீண்டும் ரிஷாப் பன்ட் (1) தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்தார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய கோஹ்லியுடன்தோனி இணைந்தார். கடந்த போட்டியில் சொதப்பிய தோனி, இந்த முறை எடுத்தவுடன் ‘டாப்கியரில்’ எகிறி அசத்தினார். மறுமுனையில் கோஹ்லி ‘ருத்ரதாண்டவம்’ ஆடினார். எதிரணி பவுலர்கள் எப்படி வீசினாலும் பவுண்டரி, சிக்சர் என விளாச ஸ்கோர் ராககெட் வேகத்தில் பறந்தது. இந்த நேரத்தில் தோனியும் தன்னை இணைத்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இந்த இருவரை ஆஸி., பவுலர்கள்ல் கட்டுப்படுத்த முடியவில்லை.

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி, ‘டுவென்டி&20’ போட்டியில் தனது 20வது அரைசதத்தை பதிவு செய்தார். இவர் 29 பந்தில் அரைசதம் விளாசினார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 100 ரன் சேர்த்த நிலையில், கம்மின்ஸ் பந்தில் தோனி ஆட்டமிழந்தார். தோனி 40 ரன் (23 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். கடைசி ஓவரில் களம் வந்த தனேஷ் கார்த்திக் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் விளாசினார். கம்மின்ஸ் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் கோஹ்லி சிக்கர் அடிக்க இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. கோஹ்லி 72 (38 பந்து, 2 பவுண்டரி, 6 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 8 (3 பந்து, 2 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர். கடைசி 6 ஓவரில் இந்தியா 91 ரன்கள் எடுத்தது. ஆஸி., தரப்பில் பெஹ்ரன்டர்ப், கூல்டர் நைல், கம்மின்ஸ், ஷார்ட் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

கடின இலக்கை துரத்திய ஆஸ்., அணிக்கு ஸ்டாய்னிஸ் (7), கேப்டன் ஆரோன் பின்ச் (8) சொதப்பினர். பின் இணைந்த ஷார்ட், மேக்ஸ்வெல் ஜோடி இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கிறது. ஷார்ட் 28 பந்தில் 5 பவுண்டரி உட்பட 40 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 28 பந்தில் அரைசதம் அடித்தார். இவருக்கு ஹேண்ட்ஸ்கோம்ப் கம்பெனி கொடுக்க ஆஸி., வெற்றி பாதைக்கு சென்றது. தொடர்ந்து அசத்திய மேக்ஸ்வெல் 50 பந்தில் சதம் அடித்தார். கடைசி ஓவரில் 9 ரனன் தேவைப்பட சிதார்த் கவுல் பந்துவீச வந்தார். இந்த ஓவரின் 4வது பந்தில் ஆஸி., வெற்றி ரன்னை எடுத்தது. ஆஸி., 19.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 113 (55 பந்து, 7 பவுண்டரி, 9 சிக்சர்), ஹேண்ட்ஸ்கோம்ப் (20) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய தரப்பில் விஜய் சங்கர் அதிகபட்சமாக 2 விக்கெட் சாய்த்தார். சதம் விளாசிய மேக்ஸ்வெல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகளைக் கொண்ட தொடரை ஆஸி., 2&0 என முழுமையாக கைப்பற்றி சாதித்தது.


Trending Now: