உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் நுழைந்தார் சிந்து

26-08-2017 09:25 AM


கிளாஸ்கோ : 

உலக பேட்மின்டன் சாம் பியன்ஷிப் போட்டி-கள் ஸ்காட்லாண்டில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகின்றன. காலிறுதி போட்டிகள் நேற்று நடைபெற்றது. காலிறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், தென் கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் சன்வான் 21-14, 21-18 என்ற நேர் செட்களில், ஸ்ரீகாந்த்தை தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

* இந்தியாவின் சிந்து, சீனாவின் சன் யூவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் சிந்து 21-14, 21-9 என்ற நேர் செட்களில் சன் யூவைத் தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார்.

* பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நேவால், ஸ்காட்லாந்தின் கில்மோரை எதிர்த்து விளையாடினார்.

இந்தியாவின் மற்ற பேட்மின்டன் வீரர்களான அஜய் ஜெயராம், சாய் பிரனீத் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய ஆட்டங்களில் முறையே சீனாவின் சென்னிடமும், சீன தைபேயின் சூவிடமும் வெற்றியைப் பறி கொடுத்து வெளியேறினர்.Trending Now: