இந்திய அணிக்கு 35 வீரர்கள் ஹாக்கி இந்தியா அறிவிப்பு

26-08-2017 09:21 AM


பெங்களூர் : 

இந்திய ஹாக்கி அணி வரும் அக்டோபர் 11 முதல் 22ம் தேதி வரை ஹீரோ ஆசிய கப் ஹாக்கிப் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளது. வங்கதேசத்தில் நடைபெற உள்ள இந்தப் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான், சீனா, கொரியா உட்பட பல்வேறு நாடுகளின் ஹாக்கி அணிகளும் கலந்து கொள்கின்றன. இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணியைத் தேர்வு செய்வதற்காக 35 பேர் கொண்ட இந்திய அணியை ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.

பெங்களூரில் உள்ள ஹாக்கி பயிற்சி மையத்தில் வரும் 26ம் தேதி முதல் 35 வீரர்களுக்கும் பயிற்சிகள் தொடங்கவுள்ளது. இதில் கடந்த ஆண்டு ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற, இளையோர் அணியைச் சேர்ந்த 13 வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த 35 வீரர்களுக்கும் பெங்களூரில் உள்ள ஹாக்கி முகாமில் 40 நாட்கள் பயிற்சி வழங்கப்படும். இளையோர் கோப்பையை வென்ற குழுவில் இருந்த கோல் கீப்பர் விகாஸ் தாஹியா, தடுப்பாட்டக்காரர்கள் திஸ்பான் திர்கே, ஹர்மன் பிரீத் சிங், குருடந்தர் சிங், வருண்குமார், நடுக்கள ஆட்டக்காரர்கள் ஹர்ஜித் சிங், மன்பிரீத் ஜூனியர், நீலகண்ட சர்மா, சுமித், மன்தீப் சிங், குர்ஜந்த் சிங், சிம்ரன்ஜீத்சிங், அர்மான் குரேஷி, சூரஜ்கர்கெரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சீனியர்களில் பிரதீப்மோர், பிரேந்திர லக்ரா, கோதாஜித் சிங், சுரேந்தர்-குமார், ருபீந்தர் பால் சிங், ஜஷ்ஜிட் சிங் குலார், அமித் ரோஹிதாஸ், சிங்லென்சனா சிங், உத்தப்பா, சத்பீர் சிங், சர்தார் சிங், ஹர்ஜித்சிங், ராமன்தீப் சிங், எஸ்.வி.சுனில், தல்வீந்தர்சிங், அபான் யூசுப், நிக்கின் திம்மையா, லலித் உபாத்யாய் உட்பட 22 பேர் உள்ளனர்.Trending Now: