டேவிஸ் கோப்பை: பயஸ் நீக்கம்

15-08-2017 03:12 AM

புதுடில்லி, 

டென்னிஸ் தொடருக்கான இந்திய அணியில் இருந்து சீனியர் வீரர் பயஸ் நீக்கப்பட்டுள்ளார். யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா, கனடா அணிகள் மோதும் டேவிஸ் கோப்பை டென்னிஸ், உலக குரூப் பிளே ஆப் சுற்றுப் போட்டி வரும் செப். 15 - 17ல் கனடாவின் எட்மன்டன் நகரில் நடக்கவுள்ளது. இப்போட்டிக்கான 6 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்து. இதில் சீனியர் வீரர் லியாண்டர் பயஸ், 44, தேர்வு செய்யப்படவில்லை. கடைசியாக இவர், கடந்த ஏப்ரல் மாதம் பெங்களூருவில் நடந்த உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய&ஓசியானா குரூப் -1 இரண்டாவது சுற்றுப் போட்டிக்கு தேர்வானார். ஆனால் இவருக்கு 4 பேர் கொண்ட விளையாடும் அணியில் இடம் கிடைக்கவில்லை.
இம்முறை தேர்வு செய்யப்படாததால், டேவிஸ் கோப்பை இரட்டையர் பிரிவில் அதிக வெற்றிகளை பதிவு செய்து புதிய உலக சாதனை படைக்கும் வாய்ப்பை இழந்தார் பயஸ். இப்பட்டியலில் பயஸ், முதலிடத்தை (தலா 42 வெற்றி) இத்தாலியின் நிகோலாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பயஸ் தேர்வு செய்யப்படாததற்கு, இந்திய அணியின் விளையாடாத கேப்டன் பூபதியுடன் ஏற்பட்டுள்ள மனக்கசப்பும் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு காயம் காரணமாக தேர்வு செய்யப்படாத யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி, இம்முறை வாய்ப்பு பெற்றுள்ளனர். இதேபோல ராம்குமார் ராமநாதன், ரோகன் போபண்ணா அணியில் இடம் பிடித்துள்ளனர். மாற்று வீரர்களாக ஸ்ரீராம் பாலாஜி, பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் தேர்வாகினர்.

இந்திய அணி: யூகி பாம்ப்ரி, ராம்குமார் ராமநாதன், சாகேத் மைனேனி, ரோகன் போபண்ணா. மாற்று வீரர்கள்: ன்னேஸ்வரன், ஸ்ரீராம் பாலாஜி..

வி ளையாடாத கேப்டன்: மகேஷ் பூபதி.Trending Now: