சென்னை அணியை வாங்­கிய விஜயகாந்த் மகன்

27-07-2017 09:19 AM

சென்னை :

 பேட்­மின்­டன் லீக் போட்­டி­க­ளில் சென்னை ஸ்மாஷர்ஸ் அணியை நடி­கர் விஜ­ய­காந்த் மகன் விஜ­ய­பி­ர­பா­க­ரன் வாங்­கி­னார். இந்த அணி­யில் சிந்து, சாய்னா உட்­பட இளம் பேட்­மின்­டன் நட்­சத்­தி­ரங்­கள் இருந்­த­னர். இந்­நி­லை­யில் விரை­வில் தொடங்க உள்ள ஸ்னுாக்­கர் லீக் போட்­டித் தொட­ரில், சென்னை ஸ்டிரிக்­கர்ஸ் அணி­யை­யும் விஜய பிர­பா­க­ரன் வாங்­கி­யுள்­ளார். இந்த அணி­யில் இந்­தி­யா­வின் நம்­பர் ஒன் ஸ்னுாக்­கர் மற்­றும் பில்­லி­யர்ட்ஸ் வீரர் பங்­கஜ் அத்­வானி, வித்­யா­பிள்ளை, தர்­மிந்­தர் லில்லி, பைசல்­கான், பாண்டு ரங்­கையா ஆகி­யோர் இடம் பெற்­றுள்­ள­னர். இந்த அணி­யின் தலை­மைப் பயிற்­சி­யா­ள­ராக கிஷோர் கொரானா நிய­மிக்­கப்­ப ட்­டுள்­ளார். பங்­கஜ் அத்­வானி ஆண்­ட­கள் பிரி­வில் 16 முறை உலக ஸ்னுாக்­கர் மற்­றும் பில்­லி­யர்ட்ஸ் பிரி­வில் உலக சாம்­பி­யன் பட்­டம் வென்­றுள்­ளார். வித்­யா­பிள்ளை இந்த ஆண்டு மக­ளிர் உலக ஸ்னுாக்­கர் சாம்­பி­யன்­ஷிப் போட்­டி­க­ளில் வெற்றி பெற்­ற­வர். சென்னை ஸ்டிக்­கர்ஸ் அணி­யில் முழுக்க முழுக்க இந்­திய வீரர்­கள் மட்­டுமே இடம் பெற்­றுள்­ள­னர். இந்­தப் போட்­டி­கள் வரும் ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை குஜ­ராத் மாநி­லம் அக­ம­தா­பாத் நக­ரில் நடை­பெ­ற­வுள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
Trending Now: