அமெரிக்க கிராண்ட் ஸ்லாம் பேட்மின்டன் சாம்பியன் பட்டம் வென்றார் பிரணாய்

25-07-2017 08:30 AM


அமெரிக்காவில்  கிராண்ட் ஸ்லாம் தங்க கோப்பைக்கான பேட்மின்டன் போட்டிகள் நடந்தது. இதற்கான இறுதி போட்டியில் இந்தியா வீரர்கள் காஷ்யப், பிரணாய் இருவரும் மோதினர்.

இரு இந்திய வீரர்கள் பட்டம் பெற மோதியதால் போட்டியில் விறுவிறுப்பு அதிகமாக இருந்தது. இந்த போட்டியில் பிரணாய் 21-15, 20-22, 21-12 என்ற செட் கணக்கில் காஷ்யப்பை வீழ்த்தினார். முதல் செட்டை வென்ற பிரணாய் 2வது  செட்டில் அதிர்ச்சிகரமாக காஷ்யப்பிடம் தோல்வியுற்றார். பட்டத்தை வெல்ல போவது யார் என்பதை முடிவு செய்ய நடந்த 3வது செட்டில் பிரணாய் அற்புதமாக விளையாடி 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இந்த போட்டியில் வென்ற பிரணாய் பெற்ற 3வது கிராண்ட் ஸ்லாம் பிரிக்ஸ் தங்க கோப்பை இது. மேலும் கடந்த 21 மாதங்களில் பிரணாய் இப்போதுதான் இறுதி போட்டியில் நுழைந்து வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன்பு நடந்த அரை இறுதி போட்டியில் பிரணாய் 21-14, 21-19 என்ற செட் கணக்கில் வியட்னாமின் டின்மின்னை வீழ்த்தினார். மற்றொரு அரை இறுதியில் காஷ்யப் 15-21, 21-5, 21-16 என்ற செட் கணக்கில் கொரியாவின் வாங்ஹீயை வீழ்த்தினார்.Trending Now: