பாகிஸ்தானை வென்றது இந்தியா

25-06-2017 08:26 AM


லண்டன்:

உலக ஹாக்கி லீக் அரையிறுதி சுற்றில் இந்திய அணி, பாகிஸ்தானை 6-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

லண்டனில், ஆண்களுக்கான உலக ஹாக்கி லீக் அரைஇறுதி சுற்று நடக்கிறது. இதில், அர்ஜென்டினா, மலேசியா, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட மொத்தம் பத்து ணிகள் இடம் பெற்றன. இந்தியா இடம் பெற்ற ‘பி’ பிரிவில் நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, பாகிஸ்தான், கனடா ஆகிய நாடுகள் இடம் பெற்றன. லீக் சுற்றில் ஸ்காட்லாந்து, கனடா, பாகிஸ்தான் அணிகளை வென்றது. அதே நேரம் நெதர்லாந்திடம் 1-3 என வீழ்ந்தது. இருந்தும் ப்பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த இந்தியா, கால்இறுதிக்கு முன்னேறியது. பரபரப்பான கால்இறுதியில் இந்திய அணி கடுமையாக போராடி 2-3 என மலேசியாவிடம வீழ்ந்தது.

இதையடுத்து, கோப்பை வாய்ப்பை இழந்த இந்திய அணி, 5 முதல் 8 வரையிலான இடத்துக்கு போட்டியிடுகிறது. இன்று நடந்த போட்டியில் இந்திய அணி, தனது பரம எதிரி பாகிஸ்தானை சந்தித்தது. இதில் சிறப்பான திறமை வெளிப்படுத்திய இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஏற்கனவே, லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் கனடா அணி, 7-3 என்ற கோல் கணக்கில் சீனாவை வென்றது.

இந்த வெற்றியால் இன்று மாலை நடக்கும் 5, 6வது இடத்துக்கான போட்டியில் இந்தியா, கனடா அணிகள் மோதுகின்றன.Trending Now: