பஞ்சவடி ஆஞ்சநேயர்! – ஜன.9. அனுமன் ஜெயந்தி

05-01-2016 08:43 PM

புதுச்­சேரி அரு­கி­லுள்ள பாப்­பஞ்­சா­வடி பஞ்­ச­வ­டி­யில் 36 அடி உயர விஸ்­வ­ரூப ஆஞ்­ச­நே­யர் அருள்­பா­லிக்­கி­றார்.

தல வர­லாறு: பல நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்பு, இப்­ப­கு­தி­யில் சித்­தர்­க­ளும், முனி­வர்­க­ளும் தவம் செய்து வந்­துள்­ள­னர். இங்­கி­ருந்­த­ப­டியே பல ரிஷி­கள் வேத­சாஸ்­தி­ரங்­களை உப­தே­சம் செய்துள்­ள­னர். இதன் அடிப்­ப­டை­யில், இங்கு ஆஞ்­ச­நே­யர் கோயில் திருப்­பணி ஆரம்­பிக்­கப்­பட்­டது. சிலை அமைக்க 150 டன் எடை­யுள்ள கருங்­கல், செங்­கல்­பட்டு அரு­கே­யுள்ள சிறு­தா­மூ­ரில் கிடைத்­தது. இதைக் கொண்டு மகா­ப­லி­பு­ரம் அரு­கே­யுள்ள கேளம்­பாக்­கத்­தில் முத்­தையா ஸ்தபதி பஞ்­ச­முக ஆஞ்­ச­நே­யர் சிலையை உரு­வாக்­கி­னார்.

 சிலை பிர­திஷ்­டைக்கு முன்­பாக 11 கிலோ எடை­யுள்ள யந்­தி­ரம் தயார் செய்து அதை திருப்­பதி, காஞ்­சி­பு­ரம், சிருங்­கேரி, அஹோ­பி­லம் ஆகிய புண்­ணி­யத் த­லங்­க­ளுக்கு கொண்டு சென்று பூஜை செய்த­னர். ஆஞ்­ச­நே­ய­ரின் சிலைக்கு அடி­யில் வைத்து ஜூன் 12, 2003ல் சிலை பிர­திஷ்டை செய்யப்­பட்­டது. இந்த ஆஞ்­ச­நே­ய­ருக்­கு ‘­ஜ­ய­மங்­கல பஞ்­ச­முக ஆஞ்­ச­நே­யர்’ என்று பெயர் சூட்­டப்­பட்­டது. 

பஞ்­ச­முக தத்­து­வம்: ராம­ருக்­கும் ராவ­ண­னுக்­கும் போர் நடந்த போது, ராவ­ணன் ஆயு­தங்­களை இழந்­தான். ராமர் அவனை ‘இன்று போய் நாளை வா’ என்­றார். ராமர் இவ்­வாறு செய்தது தன்னை திருத்­து­வதற்­குத்­தான் என்­பதை ராவ­ணன் உண­ர­வில்லை. ‘மயில் ராவ­ணன்’ என்ற மற்­றொரு அசு­ர­னது துணை­யு­டன் மீண்­டும் போருக்கு கிளம்­பி­னான். ராமரை அழிப்­ப­தற்­காக மயில் ராவ­ணன் கொடிய யாகத்தை நடத்த திட்­ட­மிட்­டான்.

 அப்­போது ஆஞ்­ச­நே­யர், நர­சிம்­மர், ஹயக்­கி­ரீ­வர், வரா­கர், கரு­டன் ஆகி­யோரை வணங்கி அவர்­க­ளின் சக்­தி­யை­யும், முகங்­க­ளை­யும் பெற்­றார். பஞ்­ச­மு­கத்­து­டன் விஸ்­வ­ரூ­பம் எடுத்து மயில் ராவ­ணனை அழித்­தார்.

தல சிறப்பு: பஞ்­ச­வடி ஆஞ்­ச­நே­யரை வழி­ப­டு­ப­வர்­க­ளுக்கு நர­சிம்­ம­ரின் அரு­ளால் எடுத்த செயல்­க­ளில் வெற்­றி­யும், லட்­சுமிகடாட்­ச­மும் உண்­டா­கும். ஹயக்­கி­ரீ­வ­ரின் அரு­ளால் உண்­மை­யான அறி­வாற்­றல், ஆன்­மிக பல­மும், வரா­க­ரின் அரு­ளால் மனத்­து­ணி­வும் ஏற்­ப­டும். கரு­ட­னின் அரு­ளால் நோய்கள் தீரும். வானர முகத்­தின் அரு­ளால் மன அமை­தி­யும், சகல சவு­பாக்­கி­யங்­க­ளும் கிடைக்­கும்.

கோயில் அமைப்பு: 12 ஏக்­கர் பரப்­பில் தெற்கு பார்த்து கோயில் அமைந்துள்­ளது. விநா­ய­க­ருக்­கும்,  சீதா, ராமர், மற்­றும் அவ­ரது சகோ­த­ரர்­க­ளுக்­கும் சந்­நிதி உள்­ளது. மூல­வ­ருக்கு மேல் 118 அடி உயர விமா­னம், அதன் மீது 5 அடி உயர கல­சம் இருக்­கி­றது. இவ­ருக்கு அபி­ஷே­கம் செய்ய 1008 லிட்­டர் பால் தேவை. இங்கு 1200 கிலோ எடை­யுள்ள மணி உள்­ளது. இதனை ஒலித்­தால் 8 கி.மீ. தூரம் ஒலி கேட்­கும். 18 மீட்­டர் அக­ல­மும், 40 மீட்­டர் ஆழ­மும் கொண்ட தீர்த்­தக்­கி­ண­றும் இருக்­கி­றது.

ராமர் பாதுகை: இக்­கோ­யி­லில் ராம­ரின் பாது­கை­கள் வழி­பாட்­டிற்­காக வைக்­கப்­பட்­டுள்­ளன. சுமார் 100 ஆண்டு பழ­மை­யான சந்­தன மரத்­தால் செய்யப்­பட்­டது. இதற்கு 1.25 கிலோ எடை­யுள்ள தங்க கவ­சம் சாத்­தப்­பட்­டுள்­ளது.

மிதக்­கும் கல்: சீதையை மீட்­ப­தற்­காக ராமர், ராமேஸ்­வ­ரத்­தில் இருந்து இலங்கை சென்­ற­போது, சேது சமுத்­தி­ரத்­தில் பாலம் அமைக்­கப்­பட்­டது. நளன், நீலன் என்ற வீரர்­கள் இந்த பாலப்­ப­ணியை நடத்­தி­னர். இதில் நளன், தேவ­சிற்­பி­யான விஸ்­வ­கர்­மா­வின் மகன். விஸ்­வ­கர்மா தன் மனை­விக்கு,‘‘என்­னைப்­போ­லவே உனக்­கொரு மகன் பிறப்­பான். எனக்­கு­ரிய திறமை அனைத்­தும் அவ­னி­ட­மும் இருக்­கும்,’’ என வரம் கொடுத்­தார். இத­னால், இவ­னால் கட­லி­லும் பாலம் கட்ட முடிந்­தது. ராம­ருக்கு உதவி செய்ய, பாலம் கட்ட பயன்­ப­டுத்­திய கற்­களை மிதக்­கச் செய்து, 

அசை­யா­மல் பாது­காத்­தான் கட­ல­ர­சன் சமுத்­தி­ர­ரா­ஜன். மிதக்­கும் கல்­லின் ஒரு பகுதி தரி­ச­னத்­திற்கு வைக்­கப்­பட்­டுள்­ளது. எட்டு கிலோ எடை­யுள்ள இந்­தக்­கல்லை தண்­ணீர் நிறைந்த பாத்­தி­ரத்­தில் இட்டு பூக்­க­ளால் அலங்­க­ரித்­துள்­ளார்­கள். லட்டு லிங்­கம்: ஆஞ்­ச­நே­யர் சிவ­னின் அம்­சம் என்­ப­தற்­கேற்ப இக்­கோ­யி­லில் ‘லட்டு லிங்­கம்’ செய்து பக்­தர்­க­ளின் தரி­ச­னத்­திற்­காக வைக்­கப்­பட்­டது. 

திறப்பு நேரம்: காலை 7 - இரவு 8.

இருப்­பி­டம்: புதுச்­சே­ரி­யி­லி­ருந்து (10 கி.மீ) 

திண்­டி­வ­னம் செல்­லும் வழி­யில் பஞ்­ச­வடி அமைந்­துள்­ளது.

போன்: 9442502446, 0413 - 267 1232,  267 8823.Trending Now: