ஹாக்கி: இந்திய பெண்கள் தோல்வி

10-08-2016 02:17 AM

ரியோ டி ஜெனீரோ : ஒலிம்பிக் ஹாக்கி லீக் போட்டியில் இந்தியா 0–3 என இங்கிலாந்திடம் பரிதாபமாக தோற்றது.

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனீரோவில் 31வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், 36 ஆண்டுகளுக்குப் பின் இந்திய பெண்கள் ஹாக்கி அணி பிரதான சுற்றுக்கு முன்னேறியது. இதனால் இந்திய அணி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்தொடரில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. தொடக்க லீக் ஆட்டத்தில் ஜப்பானை இந்தியா எதிர்கொணடது. இப்போட்டியின் தொடக்கத்தி 0–2 என பின்தங்கியிருந்த இந்திய அணி பின் எழுச்சி பெற்று 2–2 என ஆட்டத்தை சமன் செய்தது.

இந்த நிலையில், இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை நேற்று எதிர்கொண்டது. தொடக்கம் முதலே இங்கிலாந்து வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அலை, அலையாய் தாக்குதல் நடத்த இந்திய வீராங்கனைகள் சமாளிக்க முடியாமல் திணறினர். 25வது நிமிடத்தில் இங்கிலாந்து முதல் கோலை பதிவு செய்தது. ஆன்ஸ்லே பீல்ட கோல் அடித்து அணிக்கு முன்னிலை ஏற்டுத்திக் கொடுத்தார். அடுத்த 2வது நிமிடத்தில் அதாவது ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் இங்கிலாந்தின் நிக்கோலே கோல் அடிக்க இங்கிலாந்து 2–0 என முன்னிலை பெற்றது. 33வது நிமிடத்தில் அலெக்சாண்ட்ரா, தன்பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். இதையடுத்து இங்கிலாந்து 3–0 னெ முன்னிலை பெற்றது. அஏதாடு, இந்த நேரத்தில் இந்திய வீராங்கனை தீபிகா தாக்கூர், ‘எல்லோ கார்டு’ பெற்று வெளியேற இந்திய அணி 10 பேருடன் விளையாடியது. கடைசி வரை போராடிய இந்திய அணியால் ஒருகோல் கூட திருப்பி அடிக்க முடியவில்லை. இதையடுத்து இந்தியா 0–3 என்ற கோல் கணக்கில் பரிதாபமாக தோற்றது.Trending Now: