சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர். – 54 – துரை கருணா

05-08-2016 10:47 PM

பெரியார் இத­ய­மும் அரசின் நிலை­யும்!

எம்.ஜி.ஆர்: நான் இன்­னொன்­றையும் இங்கே சொல்­லிக்­கொள்ள விரும்­பு­கிறேன். அய்யா பெரியார் அவர்­க­ளு­டைய இருதயம் பற்றி உறுப்­பினர் சுப்பு சொன்­னார்கள். அதை எப்­ப­டி­யா­வது எடுத்து பாது­காக்க வேண்டும் என்ற உண்­மையை வெளி­யிட்டேன். அதற்கு பிறகு என்ன நேர்ந்­தது என்­பது தெரியும். ஆனால் இப்­போது அந்த இருதயம் இருக்­கி­றது என்­ப­தும், அதுவும் இந்த செக்­க­ரட்­டே­ரி­யட்­டி­லேயே இருக்­கி­றது என்­ப­தையும் நான் இங்கே மகிழ்ச்­சியோடு தெரி­வித்­துக்­கொள்­கிறேன். அது விரை­­விலே ஈரோட்­டிலே இருக்­கின்ற அய்யா பெரி­யா­ரின் ­நினை­வா­ல­யத்­திலே வைக்­கப்­படும் என்­ப­தையும் நான் மகிழ்ச்­சி­யோடு தெரி­வித்துக் கொள்­கிறேன். இந்த நிலை உரு­வா­வ­தற்கு கார­ண­மாக இருந்­த­வர்­க­ளுக்­கும், இதை முயற்சி செய்து கொண்­டு­வ­ரு­வ­தற்கு உதவி செய்த நண்­பர்­க­ளுக்கும் நான் இந்த நேரத்­திலே எனது பாராட்டைத் தெரி­வித்­துக்­­கொள்ளக் கட­மைப்­பட்­டி­ருக்­கிறேன். 

துரை முருகன் (திமு­க): ஈரோட்­டிலே நமது முத­ல­மைச்­சர­வர்கள் பேசி­ய­தற்கு பிறகு சி.எம்.சி. ஆஸ்­பத்­திரி டைரக்­­ட­ராக இருப்­பவர் அப்­ப­டிப்­பட்ட இருத­யம் இங்கே இல்லை. நாங்கள் எடுத்து வைக்­கவும் இல்லை என்று அவர் ஒரு அறிக்கை விட்டார். ப.உ.ச. அவர்கள் கூட என் மீது கோபம் இருந்தால் பர­வா­யில்லை. அய்­யா­வு­டைய இருத­யத்தை கொடுத்­து­வி­டுங்­கள் என்று சொன்னார். இதற்­கி­டை­யிலே அந்த ஆஸ்­பத்­தி­ரியின் டைரக்டர் இப்­ப­டிப்­பட்ட ஒரு அறிக்­கையை விடு­கி­றாரே அவர் மீது சர்க்கார் நட­வ­டிக்கை எடுக்­குமா என்­பதை அறிய விரும்­பு­கி­றேன்.

எம்.ஜி.ஆர்: உறுப்­பினர் துரை­மு­ருகன் நல்ல யோசனை சொன்­ன­தற்­காக அவர்­களை பாராட்டக் கட­மைப்­பட்­டி­ருக்­கிறேன். அதை விசா­ரிப்­ப­தற்கு நான் அதி­கா­ரி­களை ஏற்பாடு செய்­தி­ருக்­கிறேன். அந்த அதி­கா­ரிகள் விசா­ரிப்­பார்கள் என்று சொல்­லிக்­கொள்­கிறேன். அதற்­காக போட்டோ ஸ்டெட் காப்பிகள் எல்லாம் கூட இருக்­கின்­றன.   நாம் எல்­லோரும் நினைத்­து­நி­னைத்து வணங்கி பாராட்­டக்­கூ­டிய ஐயா அவர்­களின் இருதயம் அவர்கள் இறந்து விட்­டா­லும் இந்த தமி­ழ­கத்தில் பல்­லா­யிரம் ஆண்­டு­க­ளாக இருக்க வேண்டும் என்­ப­தற்­காக அதை எப்­ப­டி­யா­வது காப்­பாற்ற வேண்டும் என்­ப­தற்­காக மருத்­து­வர்­களின் யோச­னை­களை கேட்டு அதை எப்­ப­டி­யா­வது காத்து வைக்க வேண்டும் என்­ப­துதான் என் ஆசை. எதிர்­கட்­சியில் இருந்­தாலும் அல்­லது வேறு எங்­கி­ருந்­தாலும் நிபு­ணர்கள் யோச­னைகள் சொன்னால் அது மிக­வும்  உ­த­வி­யா­க இருக்கும் என்று சொல்லி – நிச்­ச­ய­மாக இரண்டு டாக்­டர்கள் அறிக்கை விட்­டி­ருக்­கி­றார்கள். ஒருவர் அல்­ல,  தினத்­தந்­தியில் செய்­தி வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கி­றது. அந்த குறிப்­பு­களை வைத்­துக்­கொண்டு செய்­யலாம். ஆகவே இதை பாது­கா­த்துத் தந்­த­வர்­க­ளுக்கு நன்றி கூறு­வது மட்­டு­மல்­லாமல் தவ­றான செய்தி வெளி­யிட்­ட­வர்கள் மீது நட­வ­டிக்கை எடு­க்­க, அவர்கள் எப்­படி தவறு செய்­தார்­கள், எதனால் செய்­தார்கள் யார் தவ­றான செய்­தி­யைக் கொடுத்­தார்கள் என்­ப­தை­யெல்லாம் தெரிந்து கொள்ள நிச்­ச­ய­மாக அதி­காரிகளை கொண்டு ஒரு விசா­ரனண வைக்­கப்­ப­டும்.

துரை முருகன் : அது ஐயா அவர்­களின் இருத­யம்தான் என்று எப்­படிச் சொல்­ல­ மு­டி­யும்?

எம்.ஜி.ஆர் : சி.எம்.சி. ஆஸ்­பத்­தி­ரியில் யார் அந்த நேரத்தில் அறுவை செய்யும் பொறுப்பில் இருந்­தார்­க­ளோ, அந்த புத்­த­கத்தில் இருக்­கிற குறிப்­புகள் எல்லாம் அப்­ப­டியே இருந்­தி­ருக்­கி­றது. அந்த புத்­தகம் கிடைத்­தி­ருக்­கி­றது. அந்த புத்­த­கத்தில் குறிப்­புகள் இருக்­கின்­றன. எடுத்து வைத்­தி­ருக்­கி­றார்கள். நவம்­பரில் விபரம் கிடைத்­தி­ருக்­கி­றது. அதை கொண்டு வந்து சேர்த்து எங்கே வைப்­பது என்று முடிவு செய்வ­து ­வரை பொருந்­தி­ருந்தேன்.

மேலும் நம்­பிக்­கையில்லா தீர்­மா­னத்தின் போது எந்­தெந்த புள்­ளி­வி­­வ­ரங்­களை நான் தர­வேண்­டும் என்று நீங்­க­ள் விரும்­பு­வீர்­களோ அந்த புள்­ளி­வி­வ­ரங்­களை என்­னிடம் இருக்­கிற அளவில் நான் கூற முன் ­வ­ருவேன். 

யாரா­வது லஞ்­சம் பெற்­ற­வர்கள் என் கட்­சியில் இருப்­பார்கள் என்றால் நான் ஒவ்­வொ­­ரு­வ­ரையும் கேட்­டுக்­கொள்­கிறேன். தய­வு­செய்து இங்கே என்­னி­டம்  நீங்கள் சொல்ல வேண்டாம். அப்­படி இங்கே சொன்­னாலும் எனக்கு கவ­லை­யில்லை. இங்­கே சொல்­லுங்கள் அல்­லது தனி­யாக சொல்­லுங்கள். நிச்­ச­ய­மாக நட­வ­டிக்கை எடுக்­கிறேன் என்று கூறி ஆளுநர் அவர்­க­ளது உரையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்­டுக்­கொள்­கிறேன்.

கிட்­டப்பா (திமு­க) : முதல் அமைச்சர் அவர்கள் இங்கே தன்­னு­டைய உரையை சிறப்­பாக நிகழ்த்­தி­யி­ருக்­கி­றார்கள். பல எதிர்­கட்சித் தலை­வர்கள் நம் தமி­ழ­கத்­தி­லுள்ள நக்­ஸலைட் கைதி­களை விடு­தலை செய்­ய­வேண்­டி­ய­தற்­கான அவ­சி­யத்தை இங்கே எடுத்து விளக்­கி­னார்கள்.....

வி.கே. கோதண்­ட­ரா­மன்: நமது பெரு­ம­திப்­பிற்­கு­ரிய முதல் அமைச்சர் அவர்கள் பதி­ல­ளிக்க கூடிய நேரத்தில் ஒன்றை கூறி­னார்கள். தொழிற்­சங்­கங்­களின் மூல­மா­கத்தான் தொழி­லா­ளர்­களை எடுக்க வேண்டும் என்­ப­தில் எங்­க­ளுக்கு அதிக அக்­கறை உண்டு என்று எந்த அடிப்­ப­டையில் தொழிற்­சங்­கங்கள் சார்பில் எடுக்க முடியும்? அது உண்­மையில் நடை­மு­றையில் சாத்தி­ய­மா­னதா? ஒவ்­வொரு தொழிற்­சா­லை­யிலும் பல தொழிற் சங்­கங்கள் உண்டு. அப்­படி பல தொழிற்­சங்­கங்கள் இருக்கக் கூடிய இந்த நிலையில் தொழிற்­சங்­கங்கள் சார்பில் அவர்கள் மூலம் தொழி­லா­ளர்­களை எடுக்க வேண்டும் என்று கூறு­கி­றார்­களா?

எம்.ஜி.ஆர் : நான் சொன்ன கருத்தை அவர்கள் வேறு­வி­த­மாக புரிந்து கொண்­டி­ருக்­கி­றார்கள் என்று கரு­து­கிறேன். அதை விளக்­க­வேண்­டிய கடமை எனக்­கி­ருக்­கி­றது. வேலைக்கு எடுத்­துக்­கொள்­கிற தொழில் அதி­பர்கள் சங்­கங்­களை அலட்­சியம் செய்­து­விட்டு தனித்­த­னி­யாக அந்த தொழி­லா­ளர்­க­ளிடம் கையெ­ழுத்து வாங்கி சேர்த்­துக்­கொள்­கிற முறையை மாற்­று­வ­தற்கு வழி கண்­டு­பி­டிக்க வேண்டும் என்­பது தான் என் கருத்து.

மாமன்ற உறுப்­பி­னர்கள் என்­னு­டைய விளக்­கத்­திற்குப் பிற­கு, இங்கு கொடுக்­கப்­பட்­டி­ருக்­கின்ற திருத்­தங்­களை திரும்ப பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்று கேட்­டுக்­கொள்­கிறேன்.

து. ராம­சா­மி: விவ­சா­யி­க­ளு­டைய பிரச்­னை­களை பற்றி எடுத்துக் கூறி­யி­ருந்தேன். அவர்­க­ளு­டைய கடன்­களை ரத்­து செய்ய வேண்டும் என்ற கோரிக்­கையை பற்றி சொல்­லி­யி­ருந்தேன். அதை­ பற்றி முத­ல­மைச்சர் அவர்கள் எதுவும் அறி­விக்­க­வில்லை? என்ன அறி­விக்­கி­றார்கள் என்­பதை அறிய விரும்­பு­கி­றேன்.

எம்.ஜி.ஆர் : இம்­மாதம் 24, 25–ம் தேதி­களில் டெல்­லியில் நடை­பெறும் என்.டி.சி.கூட்­டத்­திற்கு செல்லுகிறேன். எத்­தனை கோடி ரூபாய் ஒதுக்­கப்­ப­டும் என்­கின்ற பிரச்னை வரும்­போ­து, நம்­மு­டைய  விவ­சா­யி­க­ளு­டைய பிரச்­னை­களை பற்றி கண்­டிப்­பாக பேசுவேன், எங்­க­ளுக்­குள்ள முழு சக்­தியும் உப­யோ­கித்­து,அத்­தனை ஆற்­றல்­க­ளையும் பயன்­ப­டுத்தி நம் கோரிக்­கை­களை அங்கு எடுத்துரைப்போம்.

கூத்­தக்­குடி ச. சண்­மு­கம் (கம்­யூ) : அது­வரை ஏலம் நடக்­குமா? ஜப்தி நடக்­குமா?

எம்.ஜி.ஆர் : உறுப்­பினர் அவர்கள் கேட்­கின்ற கேள்­வியின் கருத்து அவர்­க­ளுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். வச­தி­யு­ள்­ளவர்கள் தந்து தீர வேண்டும். ஏழை விவ­சா­யிகள் துன்­பு­றுத்­தப்­பட மாட்­டார்கள் என்­பதை தெரி­வித்­துக்­கொள்­கிறேன்.

பொ. உத்­தி­ரா­ப­தி (கம்­யூ) : முத­ல­மைச்சர் அவர்கள் நாகை நாடா­ளு­மன்ற உறுப்­பினர் முரு­கையன் கொலை சம்­பந்­த­மாக பேசி­னார்கள். இதைப்­பற்றி நான் பேசும்­போ­து, இந்தக் கொலை சம்­பந்­த­மாக இன்னும் அவ­ரு­டைய மனை­வி­யிடம் விசா­ரிக்க வில்லை. 7–ம் தேதி துப்பு துலக்கும் நாய் காட்­டி­ய­வர்­க­ளையும் கைது செய்­ய­வில்லை. அவர்­களை விசா­ரிக்­கவும் இல்லை.

எம்.ஜி.ஆர் : நான் எனது பேச்­சி­லேயே குறிப்­பிட்டேன். இதை பற்றி விரி­வாக விசா­ரிக்­கப்­படும் என்று அதற்கு மேல் நான் சொல்­லக்­கூ­டாது.

ரா. உமாநாத் (கம்­யூ) : அவர் சொல்ல விரும்­பு­வ­து, அவர் நேற்­றைக்கு பேசி­ய­போ­து என்ன சொன்னார் என்­றால், மூன்று பேர்­களிடம் இப்­போது ஒரு­வர்தான் பொறுப்பு என்று சொல்லும் படி போலீசார் மிரட்­டு­வ­தாக சொன்­னார்கள். இதை ஸ்பெ­ஸீபிக்காக சொன்­னார்கள். அதற்கு முத­ல­மைச்சர் அவர்கள் என்ன சொல்­லு­­கி­றார்கள் என்­ப­தைத்தான் இப்­போது கேட்­கி­றார்கள்.

எம்.ஜி.ஆர் : இது­பற்றி நிரூ­பிப்­பார்­க­ளே­யானால் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

– தொட­ரும்Trending Now: