ஜூனியர் ஹாக்கி: இந்தியா வெற்றி

31-07-2016 01:16 AM

மார்லோவ் : இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஹாக்கி போட்டியில் அஜய் யாதவ், வருண் குமார் தலா 2 கோல் அடித்து கைகொடுக்க இந்திய ஜூனியர் அணி 7–1 என்ற கணக்கில் இமாலய வெற்றி பெற்றது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய ஜூனியர் ஆண்கள் அணி ஸ்காட்லாந்து (2), இங்கிலாந்து (4) அணிகளுடன் விளையாடுகிறது. ஸ்காட்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2–0 என தொடரை கைப்பற்றியது. தற்போது இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டு விளையாடுகிறது. இதன் முதலாவது போட்டி நேற்று நடந்தது. மார்லோவ் நகரில் இப்போட்டி நடைபெற்றது.

துவக்கம் முதலே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி அசத்தினர். இதில் ‘கோல் மழை’ பொழிந்த இந்திய அணி 7–1 என இமாலய வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணிக்கு அஜய் யாதவ் (27, 43வது), வருண் குமார் (32,35வது), மன்பிரீத் (15வது), குர்ஜந்த் சிங் (38வது), சிம்ரன்ஜீத் சிங் (40வது) ஆகியோர் கோல் அடித்தனர். இங்கிலாந்து அணிக்கு எட் ஹோலர் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார்.Trending Now: