சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர். – 50 – துரை கருணா

08-07-2016 09:56 PM

அவை மரபை காப்பாற்ற வேண்டும்!

1979ம் ஆண்டு பிப்­ர­வரி மாதம் தமி­ழக சட்­ட­ச­பை­யில் ஆளு­நர் உரைக்கு நன்றி தெரி­விக்­கும் தீர்­மா­னத்­தின் மீது நடை­பெற்ற விவா­தங்­க­ளுக்கு பதி­ல­ளித்து முத­ல­மைச்­சர் எம்.ஜி.ஆர். பேசி­யது :–

எம்.ஜி.ஆர்: இந்த அரசை பொறுத்த வரை­யில் எப்­ப­டி­யா­வது அதற்கு மாற்­றம் கண்டு தொழிற்­சங்­கத்­தின் மூல­மா­கத்­தான் தொடர்பு கொண்டு தொழி­லா­ளர்­களை வேலைக்கு எடுத்­துக்­கொள்ள வேண்­டு­மென்ற முறை வலுப்­பட வேண்­டு­மென்­றும் அது தான் இந்த நாட்­டில் தொழிற் கொள்­கை­யாக இருக்க வேண்­டு­மென்ற வகை­யில் இதற்கு என்­னென்ன வழி­மு­றை­களை காண முடி­யுமோ அதை செய்­வ­தற்கு நாங்­கள் முயன்று கொண்­டி­ருக்­கி­றோம் என்­ப­தை­யும் நான் இங்கே உத்­த­ர­வா­த­மாக சொல்ல விரும்­பு­கி­றேன்.

அதே போல் விவ­சா­யி­களை பொறுத்­த­வ­ரை­யில் ஒரு கொள்­கையை நான் இங்கே வெளி­யிட்டு தீர வேண்­டும். விவ­சா­யி­க­ளுக்­காக அதி­க­மாக மேடை­யிலே பேசி­ய­வன் நான். விவ­சா­யி­க­ளுக்கு என்­னென்ன நன்­மை­கள் தேவை என்­ப­தைப்­பற்றி பல ஆண்­டு­க­ளாக நான் பேசிய பேச்­சுக்­கள் ஏடு­க­ளிலே இருப்­ப­வற்றை மதிப்­பிற்­கு­ரிய உறுப்­பி­னர்­கள் படித்­துப் பார்க்க வாய்ப்­பி­ருந்து படித்­தால் நான் என்­னென்ன சொல்­லி­யி­ருக்­கி­றேன் என்­பதை அவர்­கள் புரிந்து கொள்ள முடி­யும்.

அதை இந்­தத் தமி­ழக அரசு செய்­யக் கூடாதா என்­றால், செய்­வ­தற்­காக எந்­தெந்த வகை­யில் நாங்­கள் முயல வேண்­டுமோ அந்த வகை­யில் தொடர்ந்து முயற்சி செய்து வரு­கி­றோம். 

வரு­கின்ற 24, 25ம் தேதி­க­ளில் டில்­லி­யில் நடை­பெ­ற­யி­ருக்­கிற என்.டி.சி. மீட்­டிங்­கில் நான் கலந்து கொள்ள இருக்­கிற நேரத்­தில் இவை­க­ளைப் பற்றி, விவ­சா­யி­கள் பிரச்­னை­க­ளைப் பற்றி, தமி­ழ­கத்­தி­னு­டைய கருத்து அங்கே எடுத்து வைக்­கப்­ப­டும். 

இது­போன்ற விவ­சா­யப் பிரச்­னை­கள், விவ­சாய தொழி­லா­ளர்­கள், அந்த. மாநி­லங்­க­ளின் முத­ல­மைச்­சர்­கள் என்ற வகை­யில் நாங்­கள் கலந்து உரை­யாடி அதன் பிறகு 24, 25ம் தேதி­க­ளில் எங்­கள் கருத்தை ஒட்­டு­மொத்­த­மாக சொல்ல இருக்­கி­றோம்.

விவ­சா­யி­கள் மீது போடப்­பட்டு இருக்­கும் வழக்­கு­கள் வாபஸ் வாங்­கப்­ப­ட­வில்­லையே, சில தொழி­லா­ளர்­க­ளின் மீது போடப்­பட்டு இருக்­கும் வழக்­கு­கள் விலக்­கப்­ப­ட­வில்­லையே என்­ப­தெல்­லாம் தொழி­லா­ளர்­கள் பிரச்­னை­யில் ஈடு­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கு மன வருத்­தத்­தைத் தரும் என்­பதை நான் உண­ரா­மல் இல்லை. 

வன்­மு­றை­யில் ஈடு­பட்­ட­வர்­களை விடு­தலை செய்­வது எப்­படி என்று நான் பிரச்­னையை எடுத்து வைத்து அதைப் பற்றி நான் பல முறை பேசி இருப்­பதை மாமன்­றம் மறந்து இருக்­காது என்­ப­தை­யும் என்­னு­டைய முதல் சட்­ட­மன்­றக் கூட்­டத்­தொ­ட­ரில் நான் சொன்ன கருத்­துக்­களை மீண்­டும் நினை­வுப்­ப­டுத்­திக் கொண்­டால் தான் என்ன கருத்­தோடு இருக்­கி­றேன் என்­பதை இங்கே உள்­ள­வர்­கள் நன்கு தெரிந்து கொள்ள முடி­யும் என்­ப­தை­யும் நான் சுட்­டிக் காட்ட விரும்­பு­கி­றேன்.

அதோடு விவ­சா­யி­கள் பிரச்னை வரு­கி­ற­போது எல்­லாம் இங்கே மாமன்ற உறுப்­பி­னர்­கள் பலர் அர­சுக்கு எச்­ச­ரிக்கை விடு­வது போல் கருத்­துக்­களை எடுத்து வைத்­தார்­கள். அர­சி­யல் கொள்கை ஏது­மின்றி, வேறு எந்­தக் கொள்­கை­யும் இன்றி விவ­சா­யி­க­ளின் பிரச்­னையை வைத்­துக் கொண்டு, விவ­சா­யி­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள நிலை­மையை உடனே தடுத்து நிறுத்­தா­விட்­டால், அத­னு­டைய விளை­வு­கள் எப்­படி இருக்­கும் என்று எடுத்­துக் காட்­டி­யி­ருப்­பதை நிச்­ச­ய­மாக இந்த அரசு கவ­னிக்­கும் என்று கூறி, அதற்­காக இந்த அர­சின் சார்­பில் அவர்­க­ளுக்கு நன்றி கூறிக் கொள்ள கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.

அதே நேரத்­தில் நாங்­க­ளும் தீவி­ர­மாக இதைப்­பற்­றிச் சிந்­தித்­துக் கொண்டு இருக்­கி­றோம் என்­றா­லும், நான் முதன் முத­லில் முத­ல­மைச்­ச­ராக பதவி ஏற்ற உடனே இங்கே நான் குறிப்­பிட்­ட­தை­யும் மீண்­டும் குறிப்­பிட விரும்­பு­கி­றேன். 

வரி கொடுக்­காதே என்ற பிர­சா­ரம், வரி வாங்­கும் அதி­கா­ரி­களை தாக்கி, அடித்து துரத்தி, கட்­டிப் போடு­வது போன்ற நிலை­மை­கள் நாட்­டிலே இருக்­கு­மா­னால் அது ஒரு வேளை ஏழை எளிய விவ­சா­யி­க­ளு­டைய மன­திலே ஏற்­பட்டு இருக்­கிற ஆத்­தி­ரத்­தின் விளை­வாக இருக்­கக்­கூ­டும் என்­றா­லும் கூட, சட்­டம் ஒழுங்கை மக்­கள் மத்­தி­யில் செயல்­ப­டுத்த முடி­யாத நிலையை உரு­வாக்­கு­கி­ற­வர்­கள் யாராக இருந்­தா­லும் அவர்­களை அரசு மன்­னித்து விட்டு விட வேண்­டும் என்­பதை இங்கே இருக்­கும் மாமன்ற உறுப்­பி­னர்­கள் யாரும் நிச்­ச­ய­மாக ஒப்­புக் கொள்ள மாட்­டார்­கள் என்று நான் நம்­பு­கி­றேன். 

அப்­ப­டிப்­பட்ட நிலை­மை­களை வேடிக்கை பார்த்­துக் கொண்டு ஒரு அரசு இருக்­கும் என்­றால் அந்த அரசு உண்­மை­யி­லேயே சட்­டத்தை காப்­பாற்ற விரும்­ப­வில்லை என்று பொருள். 

விவ­சா­யி­கள் பிரச்­னை­யில் நியா­யம் இருந்­தா­லும் கூட வன்­மு­றையை, அரா­ஜ­கத்தை, தவ­றான காரி­யங்­களை செய்ய மக்­க­ளைத் துாண்டி விடு­வ­தற்கு அவர்­க­ளுக்கு துணிச்­சல் உண்­டாக்­கும் என்­ப­தும் அத­னால் இந்த நாட்­டின் ஜன­நா­யக வளர்ச்சி வேகம் குறைந்து விடும் என்­பதை கொஞ்­சம் வேத­னை­யோ­டும் வேறு வழி­யின்­றி­யும் எடுத்­துக்­காட்ட விரும்­பு­கி­றேன். அந்த வகை­யில் தமி­ழக அரசு அப்­ப­டிப்­பட்ட வன்­முறை பிர­சா­ரங்­களை அனு­ம­திக்­காது. ஆனா­லும் ஏழை எளிய விவ­சா­யி­கள் எத்­தனை நாளைக்கு அவர்­கள் பட்­டினி கிடக்க முடி­யும், அவர்­கள் வாழ்க்­கைக்கு என்ன உத்­த­ர­வா­தம் என்­கிற கேள்­விக்கு இந்த அரசு பதில் சொல்­லி­யாக வேண்­டும்.

ஏழை­க­ளுக்­காக ஒரு அரசு தேவை என்று சொல்லி, ஏழை­க­ளு­டைய, பெரும்­பான்மை மக்­க­ளு­டைய, வறு­மைக்­கோட்­டிற்கு கீழே உள்­ள­வர்­க­ளு­டைய வாக்­கு­க­ளைப் பெற்று ஆட்­சிக்கு வந்த பிறகு அவர்­க­ளைப் பற்­றிச் சிந்­திக்­கா­மல் திட்­ட­மி­டா­மல் இருப்­பது நிச்­ச­ய­மாக தமி­ழக அர­சுக்கு மட்­டு­மல்ல; எந்த அர­சுக்­கும் உகந்­த­தாக இருக்க முடி­யாது; ஒரு தவ­றான கொள்­கைக்­குச் சொந்­தக்­கா­ரர்­க­ளாகி விடு­வோம் என்­ப­தை­யும் நான் உணர்ந்­தி­ருக்­கி­றேன்.

அந்த வகை­யில் ஒன்றை நான் குறிப்­பிட்­டுச் சொல்ல விரும்­பு­கி­றேன். விவ­சா­யி­கள் இது­வ­ரை­யில் எவ்­வ­ளவு கஷ்­டங்­கள் பட்­டி­ருக்­கி­றார்­கள் என்­ப­தை­யும், கடன்­கா­ரர்­க­ளாகி இருக்­கி­றார்­கள் என்­ப­தை­யும் தமி­ழக அரசு உணர்ந்­தி­ருக்­கி­றது. சென்ற முறை நான் டில்­லிக்கு சென்­ற­போது கூட இதைப்­பற்றி பேசி­யி­ருக்­கி­றேன் என்­ப­தை­யும் மீண்­டும் இதைப்­பற்றி பேச இருக்­கி­றோம் என்­ப­தை­யும் இங்கே தெரி­வித்­துக் கொள்ள நான் கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.

குறித்த விலைக்கு ஏன் அரசே எடுத்­துக்­கொள்ள கூடாது என்று கேட்­டால் 50 லட்­சம் டன் அரி­சிக்கு எத்­தனை கோடி ரூபாய் என்று கணக்­கிட்­டுப் பார்த்­தால், அதை எந்த நிர்­வா­கத்­தின் பெய­ரால் எப்­படி வாங்க முடி­யும், எப்­ப­டித் திருப்­பிக் கொடுக்க முடி­யும், அதை எப்­படி காப்­பது என்­ப­தை­யும் எண்­ணிப்­பார்த்­தால் அது ஒரு சாதா­ரண விஷ­ய­மல்ல என்­பதை இங்கே இருக்­கிற மாமன்ற உறுப்­பி­னர்­கள் எல்­லாம் தெரிந்­து­கொள்­வார்­கள்.

அதோடு எங்கே வேண்­டு­மென்­றா­லும் அரி­சியை எடுத்­துக்­கொண்டு போக­லாம் என்ற நிலையை ஏற்­ப­டுத்­தி­விட்டு, தற்­காப்­புக்­காக 20 சத­வீ­தத்தை அர­சுக்கு தர வேண்­டு­மென்ற ரீதி­யில் இருக்­கி­றதே தவிர, அது கூட ஓர­ள­வுக்கு பிறகு நிறுத்­தப்­பட இருக்­கி­றது என்­பதை அர­சின் சார்­பிலே தெரி­வித்­துக் கொள்ள விரும்­பு­கி­றேன்.

இங்கே வேடிக்­கை­யாக பேசி­ய­வர்­கள் இருக்­கி­றார்­கள். மற்­ற­வர்­களை அவ­மா­னப்­ப­டுத்த வேண்­டு­மென்ற நோக்­கம் இல்­லா­விட்­டா­லும் அப்­ப­டிப்­பட்ட கருத்­துக்­களை எடுத்து வைப்­ப­திலே ஆர்­வ­முள்­ள­வர்­க­ளாக இருக்­கி­றார்­கள். அவர்­க­ளு­டைய விருப்­பம் நல்ல நோக்­கத்­தோடு இருந்­தா­லும் அது பிறர் மனதை புண்­ப­டுத்­தும் வார்த்­தை­யாக இருக்­கி­றது. 

ஆனால் நான் அதற்­குள்ளே போக விரும்­ப­வில்லை. இருந்த போதி­லும் இந்த மாமன்­றத்­திலே பேசு­கின்­ற­வர்­கள் வேண்­டு­மென்றே சில பிரச்­னை­களை உரு­வாக்கி, இங்கே பேசு­வது என்தை ஒரு மர­பாக ஆக்­க­வேண்­டு­மா­னால் அது நிச்­ச­ய­மாக இந்த மாமன்­றத்­தின் மரி­யா­தை­யைக் கெடுத்து விடும். இது­வரை இருந்த தகு­திக்கு உகந்­த­தாக இருக்க முடி­யாது. அதை நினைத்­துப் பார்க்­கக் கூட முடி­ய­வில்லை. ஒப்­புக் கொள்ள முடி­ய­வில்லை. அப்­ப­டிப்­பட்­ட­வர்­க­ளுக்கு தமி­ழக அர­சின் சார்­பாக ஒரு வேண்­டு­கோள் விடுக்க விரும்­பு­கி­றேன்.

கொள்கை விளக்­கங்­களை நாம் இங்கே பேசு­வோம். அதை மன­திலே பதி­யக்­கூ­டிய வகை­யில் பேசு­வோம். கடு­மை­யான வார்த்­தை­யைப் பயன்­ப­டுத்த வேண்­டி­யி­ருந்­தால் அப்­படி பேச வேண்­டு­மென்ற எண்­ணம் யாருக்­கா­வது இருந்­தால் அப்­ப­டித்­தான் பேச வேண்­டு­மென்று நான் முடிவு செய்­தி­ருக்­கி­றேன் என்று சிலர் நினைத்­தி­ருந்­தால் அவர்­க­ளுக்கு நான் பணி­வோடு சொல்­லிக் கொள்ள விரும்­பு­கி­றேன். மற்­ற­வர்­க­ளும் அப்­ப­டிப்­பட்ட பேச்சை பேச வேண்­டிய நிலை ஏற்­ப­டு­மா­னால் அது எங்கே கொண்டு போய் விடும் என்­பதை நாம் புரிந்து கொள்ள வேண்­டும்.

கடு­மை­யான வார்த்­தை­களை பயன் படுத்­தி­னா­லும் கண்­ணி­யக் குறைவு ஏற்­ப­டா­மல், பிறர் மனது புண்­ப­டா­மல் பேசு­வ­தாக இருந்­தால் அது வர­வேற்­கக் கூடி­ய­தாக இருக்­கும். குறை சொல்­வ­திலே கூட கண்­ணி­யத்­தோடு சொல்ல முடி­யும். நல்ல சொற்­க­ளிலே சொல்ல முடி­யும்.

உறுப்­பி­னர் உமா­நாத் இங்கே எவ்­வ­ளவு வேக­மாக வார்த்­தை­களை பயன்­ப­டுத்­தி­னார்­கள். எவ்­வ­ளவு ஆவே­ச­மாக பேசி­னார்­கள் என்­பதை நீங்­கள் எல்­லாம் பார்த்­தீர்­கள். 

அதே நேரத்­தில் அவ­ரு­டைய பேச்­சிலே எங்­கும் கண்­ணி­யக் குறை­வான வார்த்­தை­கள் இல்லை. கோப­மாக சொன்­னா­லும் சிரித்­துக் கொண்டே சொல்லி, அவ­ரு­டைய கருத்தை மற்­ற­வர்­கள் மன­திலே பதி­யக்­கூ­டிய அள­வுக்கு பொறுமை இழக்­கா­மல் பேசி­னார்­கள். குற்­றச்­சாட்­டுக்­களை சொல்­லும் போதும் வார்த்தை தவ­ற­வில்லை.

தன்­னு­டைய கொள்­கை­யை­யும் விட்­டுக் கொடுக்­கா­மல், பிறர் மன­திலே கருத்­துக்­களை பதிய வைக்­கின்ற முறையை எண்­ணிப்­பார்க்­கும் போது உமா­நாத்தை போல அனை­வ­ரும் மரபை காத்து, அவை­யின் நல்ல பெயரை காப்­பாற்ற வேண்­டு­மென்று கேட்­டுக் கொள்­கி­றேன்.

(தொட­ரும்)Trending Now: