வெளிநாட்டுப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாகியது இந்தியா

29-11-2021 10:47 AM

புதுடெல்லி, நவம்பர் 29,

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை இந்தியா கடுமையாக்கி உள்ளது இந்தக் கடுமையான கட்டுப்பாடுகள் டிசம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் கடந்த 14 நாட்களில் அவர்கள் எந்தெந்த நாடுகளில் பயணம் செய்தார்கள் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும் அத்துடன்  ஏர் சுவிதா போர்ட்டபிள் கடந்த 72 மணி நேரத்தில் வாங்கிய ஆர்டிபிசிஆர் சோதனை அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று இப்பொழுது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று அபாயம் அதிகம் உள்ள நாடுகள் என்று ஒரு பட்டியலை இந்திய அரசு வெளியிட்டு வெளியிட்டுள்ளது அந்தப் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகள் இந்திய விமான நிலையத்தில் இறங்கியதும் ஆர்டிபிசியல் சோதனையை எடுத்துக்கொள்ளவேண்டும். முடிவு தெரியும்வரை விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டும்.

 நெகட்டிவ் ரிசல்ட் கிடைத்தால் மட்டுமே அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் வசிக்கும் இடத்தில் அவர்கள் 7 நாள் குவாரன்டைனில் இருக்க வேண்டும் அதன் பிறகு மறுபடியும் எட்டாவது நாள் என்று ஆர்டிபிசிஆர் சோதனை செய்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொற்று அபாயம் குறைவான நாடுகள் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் அவர்கள் விமான நிலையத்தில் வந்து இறங்கிய 14 நாட்கள் தொடர்ந்து தங்கள் உடல் நிலையை கண்காணித்துக் கொள்ளவேண்டும். தொற்று அபாயம் குறைவான நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் காரணம் இல்லாத முறையில் 5% பேர் ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்படுவார்கள்.

ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு சோதனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்கு உரிய பயணிகளாக கருதப்படுபவர்கள் குறிப்பிட்ட பயணியின் வரிசையில் இருக்கும் இருக்கைகளில் விமானத்தில் பயணம் செய்த இருக்க வேண்டும் அல்லது பின்னால் உள்ள மூன்று வரிசைகளில் பயணம் செய்து இருக்க வேண்டும் அதே போல முன்னால் உள்ள மூன்று வரிசை இருக்கைகளில் பயணம் செய்த பயணிகளும் சந்தேகத்திற்கு உரியவர்களாக கருதப்படுவார்கள்.

இவர்களை விமான ஊழியர்கள் அடையாளம் தெரிவிப்பார்கள்.

சோதனையின்போது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவளுடன் பயணம் செய்த அனைவரும் 14 நாட்கள் அரசு விதிப்படி குவாரண்டினில் இருக்க வேண்டும்.

மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா  தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பயண விதிகளைகடுமையாக்கும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

விமான நிலையத்திலோ துறைமுகத்தில் சோதனைகள் மற்றும் கண்காணிப்பு களை கடுமையான விதிகளையும் நடைமுறைகளையும் குறித்து விமான நிலைய துறைமுக சுகாதார அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.Trending Now: