குன்றத்தூர், பூந்தமல்லி காவலர் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கிய இடங்களை பார்வையிட்ட கமிஷனர் சங்கர் ஜிவால் நிவராணம் வழங்கினார்.

28-11-2021 07:09 PM

சென்னை

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இன்று (28-11-2021) பூந்தமல்லி மற்றும் குன்றத்தூர் காவலர் குடியிருப்புகளுக்கு சென்று அங்கு தேங்கிய மழைநீரை விரைந்து அகற்றி, நிவாரண பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டு, காவலர் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.

வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை பெருநகரில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில் மழைநீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகள் மற்றும் தெருக்களில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் மற்றும் சென்னை பெருநகர காவல் மீட்பு குழுவினர் (Greater Chennai Police Rescue Team) ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பூந்தமல்லி காவலர் குடியிருப்பு வளாகத்தில்ஆய்வு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், காவல் அதிகாரிகளுடன் இன்று (28.11.2021), மதியம் பூந்தமல்லி காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு சென்று பார்வையிட்டு, அங்கு தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற உத்தரவிட்டு நிவாரண பணிகளை துரிதப்படுத்தினார்.

காவலர் குடும்பத்தினரிடம் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, காவலர் குடும்பத்தினர் தெரிவித்த குறைகள் விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறி அடங்கிய தொகுப்பினை காவலர் குடும்பத்தினருக்கு காவல் ஆணையாளர் வழங்கினார்.

காவலர் குடியிருப்பு வளாகத்திலுள்ள W-30 பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டு, அங்கு காவல் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்றி பாதுகாப்புடன் பணிபுரிய உத்தரவிட்டார்.

குன்றத்தூரில் ஆய்வு

சென்னை பெருநர காவல் ஆணையாளர் அவர்கள் குன்றத்தூர் காவலர் குடியிருப்பு வளாகத்திற்கு சென்று பார்வையிட்டு, அங்கு தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றி, நிவாரண பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

 பின்னர் காவலர் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்து விரைந்து தங்களது குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என உறுதியளித்து, காவல் குடும்பத்தினருக்கு, அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி அடங்கிய தொகுப்பினை வழங்கினார். பின்னர் T-13 குன்றத்தூர் காவல் நிலையம் சென்று பார்வையிட்டு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, அம்பத்தூர் துணை ஆணையாளர் J. மகேஷ், மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.Trending Now: