கன மழையால் 6 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

28-11-2021 05:50 PM

சென்னை

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி நெல்லை ஆகிய 7 மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி, திருநெல்வேலி, காஞ்சிபுரம், திருவாரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (29-11-2021) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கி இரண்டாவது நாளாக செங்கல்பட்டு நகரம் தத்தளிக்கிறது - வாகன போக்குவரத்தில் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை (29.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்

திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை (29.11.2021) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு அறிவித்துள்ளார்

காஞ்சிபுரத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் நாளை (29.11.2021) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக நாளை (29-11-2021) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக நாளை (29-11-2021) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.Trending Now: