ஒமிக்ரான் மின்னல் வேகத்தில் பரவுகிறது மேலும் 3 நாடுகளில் தொற்று கண்டுபிடிப்பு

28-11-2021 11:31 AM

பிரிட்டோரியா, நவம்பர் 28,

கடந்த 24ம் தேதி உலக சுகாதார நிறுவனத்தின் புதிய உருமாறிய கொரோனவைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியை தென்னாப்பிரிக்கா அறிவித்தது அதைத் தொடர்ந்து அடுத்த 3 நாட்களுக்குள் மேலும் பல நாடுகளில் ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரன் வைரஸ் பரவியுள்ளது.

தற்பொழுது போட்ஸ்வானா, ஹாங்காங், பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஒமிக்ரான்  வைரஸ் பரவியுள்ளது.

உலக நாடுகள் எல்லாம் தென்னாப்பிரிக்காவுக்கு செல்லும் விமானங்களையும் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களையும் தடை செய்துள்ளன.

விமான சேவை கட்டுப்பாடுகளை முழுக்க தளர்த்துவது குறித்து இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி அதிகாரிகளுடன் ஒமிக்ரான் குறித்து ஆலோசனை நடத்தும் போது தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் புதிய வகை கரோனா உருவாக்கியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் இரண்டு கல்வி நிறுவனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தரவாட்பெங்களூரு மைசுரு ஆகிய நகரங்களில் மருத்துவக் கல்லூரி உட்பட பல கல்லூரிகளில் மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று வந்துள்ளது.

ஒடிசாவிலும் கர்நாடக மாநிலத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொற்று வைரஸ்களின் மரபணுக்களை கண்டுபிடிக்கும் பணியில் ஆய்வாளர்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்த ஆய்வு முடிவுகள் உறுதியாகும் பட்சத்தில் இந்த கல்வி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள தொற்றுக்கள் எந்த வகையைச் சேர்ந்தவை என்ற பிரச்சனை தெளிவாகும்.

இதற்கிடையில் இந்திய மாநிலங்கள் எல்லாம் மற்ற மாநிலங்களில் இருந்து மாணவர்களும் மற்றவர்களும் தங்கள் மாநிலங்களுக்கு வருவதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் குறைந்தபட்சம் 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ்களுடன் வந்தால் மட்டுமே கர்நாடக மாநிலத்துக்குள் நுழைய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் போட்டி ரத்து

ஒமிக்ரான் என்ற பெயரில் உருமாறிய புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள காரணத்தினால் தென்ஆப்பிரிக்காவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான ஒருநாள் போட்டித்தொடர்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.Trending Now: