நாகசைதன்யாவிற்கு ஜோடியாகும் பிரியா பவாணி ஷங்கர்

24-11-2021 11:20 PM

தெலுங்கு சினிமாவின் வாரிசு நடிகர்களில் ஒருவரான நாகசைதன்யா நடிப்பில்  ‘பங்காராஜு’, ‘தேங்யூ’, ‘லால் சிங் சதா’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த படங்களுக்கான படப்பிடிப்பு வேலைகள் பிஸியாக இருந்து வருகிறது. 

இதனையடுத்து  நாகசைதன்யா அடுத்ததாக ஒரு வெப்தொடரில் நடிக்க இருப்பதாகவும் இந்த தொடரை விக்ரம் குமார் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விக்ரம் குமார் ஏற்கனவே யாவரும் நலம், 24 ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் நாக சைதன்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாகவும் இந்த தொடரின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.Trending Now: