விஷாலின் 31வது படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது

24-11-2021 11:18 PM

விஷாலின் 31வது படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடிக்கிறார். மேலும் விஷாலின் நெருங்கிய நண்பர்களான ரமணாவும், நந்தாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடித்துள்ளார். ‘வீரமே வாகை சூடும்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானதை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படம் வரும் டிசம்பரில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த படம் ஜனவரி 26ஆம் தேதி ரிலீசாக அதிக வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.Trending Now: