சசிகுமார் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம்..! பூஜையோடு துவங்கிய படப்பிடிப்பு

22-11-2021 10:21 PM

நடிகர் சசிகுமார் நடிப்பில் தற்போது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, ‘ராஜவம்சம்’, ‘பகைவனுக்கு அருள்வாய்’, ‘நாநா’ ஆகிய படங்கள் உருவாகிவருகிறது.

 இதில் ராஜவம்சம் திரைப்பம் வரும் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து சசிகுமார் தொரட்டி பட இயக்குநர்  மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின, ஆனால் தற்போது மற்றொரு புதிய படத்தில் நடிக்க துவங்கியுள்ளார். டிரைடன்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படத்தை மந்திர மூர்த்தி என்பவர் இயக்க உள்ளார்.

 ‘அயோத்தி’ என தலைப்பு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கான வேலைகளை இன்று பூஜையோடு துவங்கியுள்ளனர். இந்த படத்தில் சசிகுமாருடன் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் உள்பட பலர் நடிக்க உள்ளனர். மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.Trending Now: