ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவம் சோதனை. பாராசூட் படைவீரர்களும் பங்கேற்பு

16-10-2021 04:22 PM

ஸ்ரீநகர், அக்டோபர் 16,

ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள தேரா கி காளி என்ற சுற்றுலா மையப் பகுதியிலும் பூஞ்ச் மாவட்டம் பாடா  துரியான் கிராமத்திலும்

புல்வாமா மாவட்டத்தில் பாம்போரே என்ற கிராமப் பகுதியிலும் இந்திய ராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை நடத்தி வருகிறார்கள்.

தேரா கி காளி என்ற பகுதியில் இன்று 5வது நாளாக சோதனை வேட்டை நடக்கிறது. இந்தப் பகுதியில் கடந்த திங்கட்கிழமையன்று இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார்கள். இந்திய ராணுவம் தொடர்ந்து தேடுதல் வேட்டையினை மேற்கொண்டுள்ளது.

பாடா புரியான் கிராமத்தில் இன்று 3வது நாளாக தேடுதல் வேட்டை நடக்கிறது என்று வியாழக்கிழமையன்று 2 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் அவர்கள் 2 பேரும் பேர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

பூஞ்ச் மாவட்டத்தில் நடக்கும் தேடுதல் வேட்டை களிலும் ராணுவத் தரப்பில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தேடுதல் வேட்டை நடக்கும் அந்த இரண்டு இடங்களும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இடங்கள். பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் இந்த தாக்குதல்களில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று ராணுவ உளவுத் துறை கருதுகிறது. சண்டை நடக்கும் இரண்டு இடங்களும் அடர்த்தியான வனப்பகுதி ஆகும்.

இப்பகுதியில் மறைந்திருந்து தாக்குதல் நடத்தினால் தற்காத்துக் கொள்வது மிகவும் கடினமான செயலாகும். அதனால் கூடுதலான ராணுவ வீரர்கள் இரண்டு இடங்களிலும் கொண்டுவந்து குவிக்கப்பட்டுள்ளனர். பாராசூட் படை வீரர்கள் இந்த வனப்பகுதியில் இறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெள்ளிக்கிழமைவிமானம் மூலம் வந்திறங்கினார்கள். இப்பொழுது ராணுவ வீரர்களுடன் பாரசூட் வீரர்களும் போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டைகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.

புல்வாமா மாவட்டத்தில்பாம்போரே  கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை இரவு சோதனை துவங்கியது.

இந்தப் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த உமர் முஸ்தாக் காண்டே என்ற தளபதி தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது சுற்றி வளைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர் வளையத்திற்குள் தளபதி சிக்கியுள்ளார் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜயகுமார் அறிவித்துள்ளார்.

வேட்டையாடப்பட்ட வேண்டிய 10 பயங்கரவாதிகளின் பெயர்களை போலீசார் அறிவித்துள்ளனர் அவர்களில் காண்டே பெயரும் உள்ளது.

இந்தத் தேடுதல் வேட்டையில் சனிக்கிழமை காலை தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார் யார் என்ற செய்தி போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. பின்னர் மதியம் உமர் முஸ்தாக் காண்டே கொல்லப்பட்டார் என்ற தகவல் வெளியானது.

கடந்த ஒரு வார காலத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தேடுதல் வேட்டை தொடரும் என்று தெரிகிறது.Trending Now: