ராகவா லாரண்ஸ் நடிப்பில் உருவாகிவரும் ‘ருத்ரன்’ ஷூட்டிங் அப்டேட்...

16-10-2021 01:33 PM

கோலிவுட்டில் நடிகர், இயக்குனர் தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்ட ராகவா லாரன்ஸ். இவர் கைவசம் தற்போது ருத்ரன், சந்திரமுகி 2, அதிகாரம், துர்கா ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. 

இதில் பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘ருத்ரன்’. லாரண்ஸ் ஜோடியாக பிரியா பவாணி ஷங்கர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வைரலான நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் 4வது கட்ட படப்பிடிப்பு துவங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் ஏப்ரல் 14, 2022 தமிழ் புத்தாண்டிற்கு வெளியாக உள்ளது. இதை படக்குழு அதிகாரப்ப்பூர்வமாக ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.Trending Now: