மீண்டும் இணையும் ஜீவா - எம். ராஜேஷ் காம்போ..! அடுத்த கலகல கமர்ஷியல் படத்திற்கு தயாராகும் ரசிகள்...

16-10-2021 01:32 PM

2009 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான ‘சிவா மனசுல சக்தி’ படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் எம்.ராஜேஷ். கோலிவுட் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டான கமர்ஷியல் படமான இதில் ஜீவாவுக்கு ஜோடியாக அனுயா நடிக்க சந்தானம், ஊர்வசி, ஞான சம்பந்தம் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். 


இந்த படத்தின் ஒவ்வொரு காமெடி காட்சிகளும் இன்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. லோக்கல் பாயாக ஜீவா அசத்திருப்பார். இதில் ஏற்பட்ட நட்பின் விளைவாக தான் ராஜேஷ் அடுத்து இயக்கிய ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஜீவா ஒரு சின்ன கேமியோ வந்திருந்தார். 

அதன் பிறகு பல படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் தற்போது மீண்டும் ஜீவாவுடன் இணையவிருப்பதாக மாஸான தகவல்கள் கிடைத்துள்ளன. 

அதன்படி ஜீவாவுடன் எம்.ராஜேஷ் இணையும் புதிய படத்துக்கான பூஜை நடந்துள்ளதாக புகைப்படங்கள் கிடைத்துள்ளன. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இதர தகவல்கள் அனைத்தும் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.Trending Now: