தமிழில் வெளியாகவிருக்கும் நயன்தாராவின் சூப்பர் ஹிட் மலையாள படம்

14-10-2021 12:35 PM

தென்னிந்திய மொழி உச்ச நடிகர்கள் படத்தில் அவர்களுக்கு ஜோடியாக நடிப்பது மட்டுமின்றி தனது கேரக்டருக்கு முக்கியதும் இருக்கும் சோலோ ஹீரோயின் கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் தனக்கான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ளார் என்பதால் இவரின் படங்கள் பெரும்பாலும் தென்னிதிய அளவில் நல்ல லாபத்தை பார்க்கிறது. 

லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் நடித்து கடந்த ஏப்ரல் மாதம் மலையாளத்தில் வெளியான படம் ‘நிழல்’ சஸ்பன்ஸ் த்ரில்லர் படமான இதில் நயன்தாராவுடன் பிரபல மலையாள நடிகர் குஞ்சக்கொ போபன் நடித்திருந்தார்.  அப்பு பட்டாதிரி இயக்கிருந்த இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே படத்தை தமிழில் டப் செய்து வெளியிட படக்குழு முயற்சி செய்து வருகிறது.  ‘மாய நிழல்’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் ட்ரைலரை நாளை வெளியிட திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்களும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.Trending Now: