உலக சுற்றுலா தினம் - கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற பாராம்பரிய நடைபயணம் – அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்

26-09-2021 11:53 AM

சென்னை

உலக சுற்றுலா தினம் - 2021 முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க பாராம்பரிய கட்டிடங்கள் மற்றும் மாளிகைகளை நினைவுக் கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற ""பாராம்பரிய நடைபயணத்தை" சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் இன்று துவக்கி வைத்து பங்கேற்றார்.

உலக சுற்றுலா தினம் உலக நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் திங்கள் 27ஆம் நாளன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுலா அமைப்பு 1980-ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் நாளினை உலக சுற்றுலா தினமாக அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருள் அறிவிக்கப்பட்டு உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, "சுற்றுலாவும் அதன் உள்ளடங்கிய வளர்ச்சியும்" (Tourism for Inclusive Growth) என்கிற கருப்பொருளை வலியுறுத்தியுள்ளது. இதன் நோக்கமானது சுற்றுலாவின் முக்கியத்துவத்தையும், சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார மதிப்பினை உலக நாடுகளிடத்தே நிலைநிறுத்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதேயாகும்.

பாராம்பரிய நடைபயணம்

இன்று (26.09.2021) தமிழ்நாட்டில் உலக சுற்றுலா தினத்தை கொண்டாடும் விதமாக சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க பாராம்பரிய கட்டிடங்கள் மற்றும் மாளிகைகளை நினைவுக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற (Heritage Walk) "பாராம்பரிய நடைபயணத்தை"" சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் துவக்கி வைத்து இறுதிவரை பங்கேற்றார்.

இந்த நடைபயணமானது சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள வாட்டர் கேட் தொடங்கி சட்டமன்ற தலைமைச் செயலகம், கிங்ஸ் பேரக், க்ளைவ் மாளிகை, கார்ன்வாலிஸ் க்யூபோலா, கோட்டை அருங்காட்சியம், வடக்கு தெரு, பரேடு ஸ்கொயர்,  புனித மேரி ஆலயம், வாலாஜா கேட், தூய தாமஸ் கேட், தூய தாமஸ் தெரு, புனித ஜார்ஜ் கேட் வரை  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை  அரசு செயலாளர் இரா.கிர்லோஷ் குமார், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர். சந்தீப் நந்தூரி, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் க.நந்தகுமார், இஸ்டோரியன் வி. ஸ்ரீராம் அவர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.Trending Now: