திருவொற்றியூர் மருத்துவமனையில் காது கேளாதோருக்கான சிறப்பு சிகிச்சை முகாம் - குவிந்தது மக்கள் கூட்டம்

25-09-2021 03:19 PM

சென்னை

திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் டைம்ஸ்ஆப் இந்தியா கட்டித்தந்த டைம்ஸ் இஷா சுனாமி அரசு பொது மருத்துவமனையில் காது கேளாதோருக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம் இன்று (25-9-2021) நடைபெற்றது. முகாமில் சிகிச்சைப் பெறுவதற்காக பொதுமக்கள் கூட்டமாகக் குவிந்தனர்.

இந்த சிறப்பு முகாமை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் தொடங்கி வைத்தார்.

மருத்துவ முகாமில் சிகிச்சை பெறுதற்காக அதிகாலையில் இருந்தே பொது மக்கள் குவிந்தனர்.

இந்த முகாமில்,  சிகிச்சை பெற வந்தவர்களுக்கு காலை 10 மணி வரை 500 க்கும் மேற்பட்டவரகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன.

மேற்கண்ட மருத்துவ முகாமிற்கு  அரசு மருத்துவமனை அதிகாரிகள் டாக்டர் வசந்தி, டாக்டர் மனோஸ் குமார், திருவொற்றியூர் திமுக செயலாளர் தனியரசு,  வழக்கறிஞர் பொன்னிவளவன், முன்னாள் கவுன்சிலர் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்Trending Now: