புதிய உச்சத்தில் இந்திய பங்குச்சந்தைகள்; சென்செக்ஸ் 60 ஆயிரத்தை தாண்டியது

24-09-2021 08:42 PM

மும்பை,செப்டம்பர் 24,

இந்திய பங்குச்சந்தைகள் செப்டம்பர் 24-ஆம் தேதி உச்சங்களை தொட்டன.

மும்பை பங்குச் சந்தையின் அதிகாரக் குறியீடாக சென்செக்ஸ் 60 ஆயிரத்தைத் தாண்டி உயர்ந்து 60048 நிலைபெற்றது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீடாக 30 புள்ளிகள் உயர்ந்து முதன்முதலாக 17 850 புள்ளிகளுக்கு மேல் 17,853ல் நிலை பெற்றது.

சென்செக்ஸ் இன்றைய உயர்வு 163.11 புள்ளிகள்.

1986ஆம் ஆண்டு 1000 புள்ளிகளுடன் துவக்கப்பட்ட சென்செக்ஸ் பற்றி 31 ஆண்டுகளில் 60,048 புள்ளிகளுக்கு உயர்ந்துள்ளது.

6 ஆண்டுகளுக்கு முன்னர் 30,000 புள்ளிகளை தாண்டியது. சென்செக்ஸ் 100 சதவீதம் உயர 6 ஆண்டுகள் எடுத்துக் கொண்டு 60 ஆயிரத்தை தாண்டி இன்று உயர்ந்துள்ளது.

தேசிய பங்குச் சந்தையில் உயர்ந்த நிப்டி குறியீடு என்று 17,850 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது.

இந்திய பிரதமர் அமெரிக்க தொழில் நிறுவனங்களின் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை இந்தியத் தொழில்துறை நம்பிக்கையை தந்துள்ளது அதன் காரணமாக இந்திய பங்குச் சந்தை புதிய சிகரங்களைக் கொண்டுள்ளது என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்.

மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் வழங்கிய கூடுதல் நாணயப் புழக்கம் காரணமாக பங்குச்சந்தைகள் புதிய உச்சங்களைத் தொட்டு வருகின்றன.

வளர்ச்சியோடு எந்த வகையிலும் தொடர்பு இல்லாத பங்குச்சந்தை உயர்வு நீண்ட நாளைக்கு நிலைக்காது என்றும் பங்கு சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.Trending Now: