பாலிவுட்டில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கும் ரெஜினா...

23-09-2021 07:48 PM

அமேசான் ப்ரைமில் வெளியான ஃபேமிலி மேன் வெப் தொடரின் மூலம் பிரபலமான இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே. டிஜிட்டல் தளத்தின் நல்ல படைப்புகளின் மூலம் சினிமாவை தாண்டி முத்திரை பதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் இவர்கள் என்பது மறுக்க முடியாத ஒன்று. 

இவர்கள் அடுத்த வெப் தொடரில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் நடிக்கவுள்ளார். இதில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இதில் ஷாகித கபூர் ஜோடியாக நடிகை ராஷி கண்ணா நடிக்கவிருக்கும் நிலையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. இந்நிலையில், அவருக்கு ஜோடியாக நடிக்க பிரபல தமிழ் நடிகை ரெஜினா கசன்ட்ரா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நடிகை ரெஜினா நடிக்கும் முதல் வெப் தொடர் இதுவாகும். நடிகர் விஜய் சேதுபதியும், ரெஜினாவும் ஏற்கனவே ‘முகிழ்’ என்கிற தமிழ் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.Trending Now: