லிஃப்ட்’ படத்தின் ஓடிடி ரிலீஸை உறுதிப்படுத்திய படக்குழு...

23-09-2021 07:47 PM

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவின் மற்றும் பிகில் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தென்றலாக தடம் பதித்த அமிர்தா ஐயரும் இணைந்து நடித்திருக்கும் படம் ‘லிஃப்ட்’. அறிமுக இயக்குனர் வினீத் இயக்கத்தில் உருவாகிருக்கும் இந்த படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் மைக்கெல் ப்ரிட்டோ இசையமைத்துள்ளார். 

ஈகா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஐடி ஊழியர்களாக கவினும் அமிர்தாவும் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா லாக்டவுன் முன்னதாகவே ஷூட்டிங் வேலைகள் முடிந்து போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகளும் ஏப்ரலில் முடிவைடைந்திருந்தது. இருப்பினும் இந்த படத்தின் ரிலீஸ் நீண்ட நாட்களாகவே தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. இந்த ஜூன் மாதம் படம் தியேட்டர் அல்லது ஓடிடியின் நிச்சயம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் படம் எதிலும் வெளியாகவில்லை. இதனிடையே தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு படத்தின் ரிலீஸ் கேள்விக்குறியானது. இந்த நிலையில் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 1ஆம் தேதி படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது. ‘லிஃப்ட்’ படம் ஹாலிவுட் ‘ஈவிட் டெட்’ படங்களுக்கு இணையாக இருக்கும் என லிப்ரா ப்ரோடக்‌ஷன் ரவிந்திரன் ஏற்கனவே கூறிருந்ததால் படத்தின் மீது ரசிகர்களின் ஆர்வம் அதிகமாக உள்ளது.Trending Now: