தாம்பரம் அருகே கல்லூரி மாணவி குத்திக்கொலை - இளைஞர் கைது

23-09-2021 07:22 PM

சென்னை

சென்னை -  தாம்பரம் ரயில்நிலையம் அருகே கல்லூரி மாணவி சுவேதாவை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்  ராமச்சந்திரன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை - குரோம்பேட்டை ராதா நகர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். மாநகர அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சுவேதா (25) தாம்பரம் தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியன் படித்து வருகிறார்.

இன்று, கல்லூரி அருகே ராமச்சந்திரன் என்பவருடன் சுவேதா நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த ராமச்சந்திரன், சுவேதாவின் கழுத்தில் குத்திக் கொலை செய்ததாக தெரிகிறது. மேலும், தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் ராமச்சந்திரன்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இளைஞர் ராமச்சந்திரனை  மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

சுவேதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர்.

அங்கு  சுவேதாவின் உடலைக் கண்ட உறவினர்கள் கதறி அழுதது காண்போரைக் கலங்கச் செய்தது. 

காதல் பிரச்னையில் இந்தக் கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Trending Now: