இந்தியாவும் சிங்கப்பூரும் பணப்பரிமாற்ற அமைப்புக்களை இணைக்க முடிவு

14-09-2021 01:06 PM

மும்பை, செப்டம்பர் 14,

இந்தியாவும் சிங்கப்பூரும் தங்கள் துரித பண பரிமாற்ற அமைப்புகளை இணைக்க முடிவு செய்துள்ளன.


இந்திய ரிசர்வ் வங்கியும் சிங்கப்பூர் நாணய ஆணையமும் இந்தத் தகவலை செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டன.

இந்தியாவின் துரித பண பரிமாற்ற அமைப்பு யூனிபைடு பேமென்ட்ஸ் இண்டர்பேஸ் ஆகும்.

சிங்கப்பூரின் துரித பணப்பரிமாற்ற அமைப்பு பே நவ் ஆகும்.

இரண்டு நாடுகளின் துரித பண பரிமாற்ற அமைப்புகள் இணைக்கப்படும் காரணத்தினால் 2 நாடுகளுக்கு இடையே பண பரிமாற்றம் மிக சுலபமாக நடைபெற வாய்ப்பு ஏற்படும். பண பரிமாற்றத்துக்கு ஆகும் கால அவகாசமும் கணிசமாக குறையும் இதன் காரணமாக சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே வர்த்தக பரிமாற்றங்களும் தொழில்முறை பரிமாற்றங்களும் அதிகரிக்கும் இது நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இத்தகைய துரித பணபரிமாற்றம் பெருமளவில் உதவும் என்று நம்பப்படுகிறது இந்த இணைப்பு வரும் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் செயல்படத் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.Trending Now: