இந்தியாவில் ஃபோர்டு வாகனங்கள் உற்பத்தியை கைவிட முடிவு

09-09-2021 06:42 PM

புதுடெல்லி, செப்டம்பர் 9,

இந்தியாவில் வாகனங்கள் உற்பத்தியை நிறுத்துவது என்று ஃபோர்டு கம்பெனியின் அமெரிக்க தலைமையகம் வியாழனன்று முடிவுசெய்தது.

குஜராத் மாநிலத்தில் உள்ள சானந்த் சென்னையை அடுத்த மறைமலைநகரில் உள்ள உற்பத்தி நிலையங்களை மூடுவது என்று போர்டு நிறுவனத்தின் அமெரிக்க தலைமையகம் முடிவு செய்துள்ளது இந்த முடிவின் காரணமாக சுமார் 4 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயம் உள்ளது.

உற்பத்தி நிறுவனங்களை மூடுவது என்று முடிவு செய்த போதிலும் இந்திய சந்தையை விட்டு நாங்கள் வெளியேற மாட்டோம் என்று போடு கம்பெனி அறிவித்துள்ளது.

ஃபோர்டு பிஸ்னஸ் சொலுஷன்ஸ் என்ற திட்டத்தைத் தொடர்ந்து அமல்படுத்துவோம் அதன் மூலம் இந்தியாவில் போர்டு நிறுவனத்தின் பணி லாபகரமானதாக மாற்றுவோம் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் சானந்த் நகரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி 2021 ஆம் ஆண்டு நான்காவது காலாண்டில் நிறுத்தப்படும் என்றும் சென்னையிலுள்ள உற்பத்தி நிறுவனம் 2022ஆம் ஆண்டு இரண்டாவது காலாண்டில் நிறுத்தப்படும் என்றும் ஃபோர்டு நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

பல திட்டங்களை பரிசீலித்த பிறகு வேறு வழி இல்லாமல் இந்த முடிவை எடுத்ததாக இந்தியாவிலுள்ள போடு நிறுவனத்தின் தலைவர் அனுராக் மெஹ்ரோத்ரா தெரிவித்தார்.

இந்தியாவிலுள்ள ஃபோர்டு நிறுவன தொழில் அமைப்பு,  உலக ஃபோர்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்படும் என்றும் அனுராக் குறிப்பிட்டார்.

ஏற்கனவே ஃபோர்டு வாகனங்களை வாங்கியவர்களுக்கு விற்பனைக்கு பின் தொடர்ந்து சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வரும் என்று அவர் கூறினார்.

இழப்பீடு மற்றும் பிற நிலுவைத் தொகையை செலுத்துவதற்குஃபோர்டு நிறுவனம் 1.7 பில்லியன் டாலர்கள் ஒதுக்கி இருப்பதாக தெரிகிறது.Trending Now: